Thursday 10 January 2019

ரபேல் விமான பேரம் மோடி ஆட்சியின் நேர்மைக்கு சாட்சி-

வழக்கமா அரசுத்துறையில் ஒரு டெண்டர் இறுதி செய்ய ப்படாமல் இருந்தால் மேலிடத்திற்கு கப்பம் போய்சேரவி
ல்லை அதனாலே இன்னமும் இறுதி செய்யாமல்இழுத்து
க்கொண்டு செல்கிறது என்பதே பேச்சாக இருக்கும்.இது
மத்தியில் இருந்த காங்கிரஸ் ஆட்சியில் மட்டுமல்ல தமிழகத்தில் இருக்கும் அதிமுக இருந்த திமுக ஆட்சி யில் நடந்த எந்த ஒரு டென்டருக்கும் பொருந்தும்.

ஆனால் பிஜேபி அரசில் அனைத்தும் வெளிப்படையாக நடக்கிறது என்பதற்கு ரபேல் விமானங்களை இந்தியா
வாங்குவதற்கு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையே உதா ரணம்..ஒரு குடும்பத்தலைவன் தன்னுடைய வீட்டிற்கு
பொருட்கள் வாங்குவதற்கு எப்படி  செயல்படுவாரோ அதே மாதிரி இந்திய குடும்பத்தின் தலைவனாகிய மோடி
தன் வீட்டிற்கு sorry நாட்டிற்கு தேவையானபொருட்களை
சரியான விலையில்  பெற அவரே முன்னின்று பேச்சு வார்த்தை நடத்துகிறார் என்பதற்கு இறுதிசெய்யப்பட்ட
ரபேல் போர் விமானங்கள் டீலிங்கே உதாரணம்.

இந்திய ராணுவத்தில் இருக்கும் இத்து போன ரஷ்ய விமானங்களை ஓரங்கட்டிவிட்டு லேட்டஸ்ட் டெக்னா லஜி கொண்ட விமானங்களை வாங்க 2001ல் திட்டமிட ப்ப ட்டது. 2007 ம் ஆண்டில், 126 போர் விமானங்களை வாங்க, உலகளாவிய டெண்டர் விடப்பட்டது, கடைசி யில். 2012ல், பிரான்ஸ் நாட்டின் ரபேல் விமானங்களை வாங்கமுடிவு செய்யப்பட்டது.அடுத்து 2016 ம் ஆண்டில் பிரான்சிடம் இந்த டீல் ஒகே செய்யப்பட்டுள்ளது,

இந்திய நாட்டின் விமானபடைக்கு விமானம் வாங்க 2001 ல் முடிவு செய்யப்பட்டு 2016 ல் ரபேல் விமானம் வாங்க லாம் என்று ஒகே செய்ய 15 வருடம் ஆகிவிட்டது.பிஜேபி
ஆட்சியில் விமானம் முடிவு எடுக்கபட்டு மீண்டும் பிஜே பி ஆட்சியில் காங்கிரஸ் ஆட்சியில் முடிவு செய்த ரபேல் விமானங்களை 19,000 கோடி குறைவாக தற்பொழுது பிஜேபி அரசு ஒகே செய்துள்ளது..

எவ்வளவு பெரிய விஷயம் , 36 ரபேல் ஜெட் போர் விமா ன ங்களுக்கு பிரான்ஸ் கேட்டது எவ்வளவு தெரியுமா ?இந்த ஆண்டு துவக்கத்தில்  இந்தியா வந்தபிரான்ஸ் அதிபர் ஹாலண்டே  மோடியிடம் கேட்டது 80,000 கோடி ரூபாய் ஆனால் மோடிதருவதாக சொன்னது எவ்வளவு தெர்யு மா?  52,000 கோடி ரூபாய்..இதைக்கேட்ட ஹால ண்டே மோடிஜி லேசாக நெஞ்சு வலிக்கிறது . நான் ஊரு க்கு போறேன்.

நீங்க விமானம் வாங்காவிட்டாலும்பரவாயில்லை  
எனக்கு என் உயிர் முக்கியம் இன்னும் கொஞ்சம் நேரம் நான் இங்கே நின்றால் ரபேல் விமானத்தை இந்தியாவி ற்கு விற்க சென்ற பிரான்ஸ்அதிபரின் உடல் தனி விமா னத்தின் வழியாக பிரான்ஸ்க்கு கொண்டு செல்லப்படுகி றதுஎன்று உலகம் முழுவதும் செய்திகள் வெளியாகும் என்று கூறிவிட்டு இறுதியில் மோடிஜி  உங்கள் வார்த் தைகள் ஒரு சேல்ஸ் மேனா எனக்கு வருத்தமாக இருந் தா லும்  ஒரு நாட்டின் தலைவராக உங்க நேர்மை யை பாரா ட்டுகிறேன் என்றுகூறி விட்டு பிரான்ஸுக்கு ஜூட் விட் டார்.

பிறகு இருக்காதா பிரான்ஸ் நாட்டில் உள்ள  டஸ்ஸால்ட் என்கிற நிறுவனம் தான்இந்த ரபேல் விமானங்களை தயாரிக்கிறது. பிரான்ஸ் ராணுவத்திற்கும்  சப்ளை செய்துள்ளது.அது தன்னுடையதாய் நாட்டிற்கு கொடுத்த விலையை விட மோடி கம்மியாக கேட்டதே பிரான்ஸ்
அதிபருக்கு நெஞ்சு வழி வரக்காரணமாக இருந்தது.

தற்பொழுது இறுதியாக உனக்கும் வேண்டாம் எனக்கும்
வேண்டாம் என்று 58,000 கோடி ரூபாய்க்கு இறுதி செய்ய ப்பட்டுள்ளது.இதனால் இந்தியாவிற்கு எவ்வளவு லாபம்
தெரியுமா?கேட்ட விலையை கொடுத்து கமிஷன் வாங்கி
கொண்டு தங்கள் குடும்பத்தை மட்டும் வளமாக்கிய காங்கிரஸ் கூட்டம் மாதிரி இல்லாமல் தேசமே தெய்வம்
என்று செயல்படுகிற மோடி அரசின் பேரம் பேசிய தன்மை யினால் இந்தியாவுக்கு மக்களின் பணம் 19,000 கோடி ரூபாய் மிச்சமானது.

அது மட்டுமல்ல 126 விமானங்களை முடிவு செய்ததை 36 விமானங்களை உங்களிடம் நேரடியாக வாங்கிக் கொள்கிறோம். தேவைப் பட்டால் மீதி விமானங்களை இந்தியாவில் வைத்து மேக் இன் இந்தியாதிட்டத்தின் மூலம் இந்த விமானத்தை தயாரித்து விற்கும் வகையி ல்  டஸ்ஸால்ட் நிறுவனம் இந்த டீலுக்கு வாங்கும் பண த்தில் 50% தொகையை இந்தியாவிலேயே முதலீடு செய்ய வேண்டும் என்று நிபந்தனை சேர்க்கபட்டுள்ளது.

இதனால் நம் நாட்டிலேயே டஸ்ஸால்ட் நிறுவனம் தொழிற்சாலையை துவங்க வேண்டிய நிலை உருவாகி யுள்ளது.இதனால் , இந்தியாவில் புதிய வேலைவாய்ப்புக ள் உருவாகும்.உலகின் மிகப் பெரிய பாதுகாப்பு ஒப்பந்த மான இதைப் பெற ரஷ் யாவின் மிக்-35, லாக்கீட் மாட்டி னி ன் எப்-16 பால்கன், போயிங்கின் எப் 18 ஹார்னட், ஸ்வீட னின் சாப் கிரிப்பன், ஐரோப்பிய போர் விமான மான ஈரோ பைட்டர் டைபூன் மற்றும் டஸ்ஸால்ட் ரபேல் ஆகியவற்றுக்கிடை யே கடும் போட்டி நிலவியது.

பல முனைப்போட்டியில் இறுதி சுற்றில் ஈரோபைட்டரு க்கும் ரபேலுக்கும் போட்டி உண்டானது.ஈரோபைட்டரை ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இந்த நான்கு நாடுகளின் அரசுகளும் இந்திய விமானப்படையின் ஒப்பந்தத்தைப் பெற தலை குப்புற நின்றுதண்ணீர் குடித்தன..அதே நேரத் தில் பிரான்சும் மல்லுக்கு நின்றுமன்றாடியது. ஏனெனில்
இந்திய ரூபாயில் லட்சம் கோடிக்கு மேல் உள்ள பிசின ஸ் இது.

கடைசியில் பிரான்ஸின் டஸ்ஸால்ட்  நிறுவனத்தின் ரபேல் விமானங்களின் விலை டைபூ னை விட கொஞ்ச ம் குறைவாகவும் அதன் துல்லியம் சிறப்பாக இருந்ததா லும்வாங்க முடிவு செய்யப்பட்டது.2012 ம் ஆண்டு ஆரம் பத்தில் முடிந்த ஒப்பந்தப்படி அதற்கு பிறகு இரண்டு வரு டம் காங்கிரஸ் ஆட்சியின்முடிவிலும்  இந்த விமான ங்களை வாங்க முடியவில்லை.ஏனென்றால் கமிஷன் 
எவ்வளவு கிடைக்கும், என்பதிலேயே திருட்டுகாங்கிர
ஸ் கூட்டம் பேரம் பேசி காலம் கடத்தியது

ஆனால்பிஜேபி அரசு வந்த பிறகும் இந்த ஒப்பந்தம் நிறை வு பெறஇரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டது. இப்பொழு து நடந்தபேச்சுவார்த்தை விமானங்களின் விலையை எவ்வளவு கம்மியாக குறைத்து வாங்க முடியுமோ அந்த அளவிற்குஅதாவது ரபேல் விமானங்கள் பிரான்ஸ் நாட்டுக்கு எவ்வளவு விலைக்கு அளிக்கபட்டதோ அதே விலைக்குஇந்தியாவிற்கு பிரான்ஸ் நாட்டு நிறுவனம்  விமானங்க ளை விற்கிறது.

பிரெஞ்சில் ரபேல் என்ற வார்த்தைக்கு தொடர் வெடி என் ற பெயராம்.இந்த விமானங்கள் ராடார் கண்ணில் இருந் து தப்பிக்கும்வல்லமையோடு அணு ஆயுதங்களை ஏற்றி கொண்டு 3,700 கி.மீ வரை செல்லக்கூடியவை .மல்டி ரோல் பைட்டர் ஏர்கிராப்ட்' வகையை சேர்ந்த இந்த போர் விமானம், பல்வேறு பணிகளை செய்யக்கூடியது

50 அடி நீளம் 17 அடி உயரம் கொண்ட ரபேல் விமானத்தி ன் எடை 10 டன்னாகும்.36 அடி நீளம் கொண்ட இறக்கை களைவைத்துக்கொண்டு50,000 அடிஉயரத்தில் பறந்துக் கொண்டு3,700 கிலோ மீட்டர் தூரம் வரை  எதிரி நாட்டின் ராடாருக் கு பெப்பே காட்டி விட்டு அணு ஆயுதங்களை அள்ளி சென்று எதிரி நாட்டை அழிக்கும் ரபேல் ஒருமல்டி ரோல் பைட்டர் ஏர்கிராப்ட் ஆகும்.இதில் துப்பாக்கிகள் ஏவுகணை கள் பீரங்கி என்று போருக்கு தேவையான அனைத்தும் இதில் உள்ளது..இந்த ரபேல் என்றால் பிரெஞ்சு மொழியில் தொடர் வெடி என்ற பொருளாம்..

இது வரை ரஷ்யாவிடம் இருந்து ஊசிப்போன பட்டாசுக ளையே வாங்கி பழகிப்போன இந்தியா முதன் முதலில்
தொடர்வெடி அதாவது நம்ம பாஷையில் சரவெடியை
வாங்க உள்ளது.  ரபேலின் ஸ்பெசல் என்னவென்றால் வானில் இருந்தபடியே, வானில், 150 கிலோ தொலை வில் உள்ள இலக்கை துல்லியமாக  தாக்க முடியும்.

அதாவது, எதிரி நாட்டின் வான் எல்லைக்குள் செல்லாம லேயே,  இந்திய வான் பரப்பில் வட்டமிட்டபடியேஅங்கு தாக்குதல் நடத்த முடியும்.. இதனால், இந்திய எல்லையி ல் இருந்த படியே, பாகிஸ்தானை தாக்க முடியும்.மேலும் மேற்கு, கிழக்கு எல்லை பிராந்தியங்களையும் இந்தியா வி லிருந்த படியே தகர்க்கும் வலிமையை இந்திய விமா னப் படை பெற்றுவிடும்.வழக்கமாக தயார் செய்யப்படும் ரபேல்விமானங்கள் மாதிரி அல்லாமல் இந்தியாவிற்கு என்றுஇந்தியாவுக்கு என்று ஸ்பெசலாக டிசைன் செய்யப் படுகி றது.

இந்திய விமானப் படைக்கும், டஸ்ஸா ல்ட் நிறுவனத்தி ற்கும் இடையிலான தொடர்பும் புதிதல்ல. ஏறக்குறைய 35 ஆண்டுகளுக்கு முன்பு 1980 ல்இதே நிறுவனம்தான் மிராஜ் 2000 விமானத்தை இந்தியாவுக்கு அளித்தது இந் தியாவின் மிகச் சிறந்த போர் விமானங்க ளில் மிராஜும் ஒன்று.

எனவே சரியான பொருளை சரியான விலைக்கு வீட்டு க்குவாங்கிவரும் சரியான குடும்பத்தலைவர் மாதிரி  (சத்திய மாக நான் அந்த லிஸ்டில் இல்லை) இந்திய மக்களின் ஒரு பைசாவை கூட நியாயத்திற்கு மீறி யாரு ம் திங்க கூடாது என்ற மோடியின் நேர்மையான உணர் வுக்கு தலை வணங்கி பாராட்டுக்கள்..

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...