Saturday, 12 January 2019

2002-ல் குஜராத்தின் முதல் மந்திரியாக அந்த மனிதர் பொறுப்பேற்ற உடனே நடந்த மாபெரும் சதிச்செயல்_


https://www.facebook.com/100031528877743/posts/114186559642306/
.

நன்றாக நினைவிருக்கிறது -

கிட்டத்தட்ட 16 வருடங்கள் ஓடிவிட்டாலும் -

2002-ல் குஜராத்தின் முதல் மந்திரியாக அந்த மனிதர் பொறுப்பேற்ற உடனே நடந்த மாபெரும் சதிச்செயல்_

ஒரு மிகப் பெரிய முஸ்லிம் வன்முறைக் கும்பல் கரசேவகர்கள் பயனித்த ரயில் பெட்டிகளை தீ வைத்து எரித்ததும் அதைத் தொடர்ந்து நடந்த கலவரங்களும் -

அந்தக் கலவர வழக்குகளில் இருந்து எப்பொழுதோ அவர் விடுவிக்கப்பட்டிருந்தாலும் அதை மட்டுமே வைத்து இன்று வரை அரசியல் செய்து வரும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் முகமூடிகளைக் கிழித்துத் தொங்க விட்டதால் தான் - இன்று அவர் பாரதத்தின் பிரதமராக, உலகத் தலைவராக உயர்ந்து நிற்கிறார் -

இன்றும் கூட எதிர்கட்சி பேச்சாளர்கள் அதைக் குறிப்பிட்டே மோடியை ஒரு பிசாசைப் போல உருவகப்படுத்த முயற்சி செய்து வருகிறார்கள் -

ஆனால், சுதந்திர இந்தியாவில் அதைவிடப் பயங்கரமான பல மதக்கலவரங்கள் காங்கிரஸ் ஆட்சிகளில் தான் நடந்துள்ளன -

அவற்றில் சில -

1947-ல் வங்காளக் கலவரத்தில் 5000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். -
அடுத்ததாக _
1964-ரூர்கேலா - 2000 பேர் -
1967- ராஞ்சி - 200 பேர் -
1969 - அகமதாபாத் - 512 பேர் -
1970, 1985. பிவாந்தி-226 பேர் -
1980 - மொரதாபாத்- 2000 பேர் -
1983-அஸ்ஸாம் - 5000 பேர் -
1984- டெல்லி - 2733-பேர்-
1985- குஜராத் - 300 பேர் -
1986 - அகமதாபாத் - 59 பேர் -
1982-மீரட் - 81 பேர் -
1992-அலிகார் - 176 பேர் _
1992 - சூரத் - 175 பேர் -
1967-கீழவெண்மனி - 44 பேர்
1982 -மண்டைக்காடு - 40 பேர்
1998-கோவை - 77 பேர்

இதில் ஆம்பூர், தென்காசி கலவரம் போல சிறிய(?) கலவரங்களைச் சேர்க்கவில்லை -

இவையெல்லாம் யாருடைய ஆட்சிகளில் நடந்தவை என்று கேட்டால் வாயைத் திறக்க மாட்டார்கள் -

ஆனால் மோடியை மட்டும் மரண வியாபாரி என்று தூற்றுவார்கள் -

தூற்றட்டும், தூற்றட்டும் -

அவர்கள் வைய, வையத்தான் வைரமாக ஜொலித்து வருகிறார் மோடி -

ஒரு காலத்தில் 60 MP க்கள் ஒன்று சேர்ந்து ஒரு மாநில முதலமைச்சரை உள்ளே விடாதீர்கள் என்று கேவலமாக அமெரிக்காவிற்குக் கடிதம் எழுதினார்கள் -

இன்று அவர்களில் எவருமே MP யாகக் கூட இல்லை -

ஆனால் -அதே அமெரிக்கா இன்று சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறது மோடி அவர்களை -

எதிரி நாடு பாக்கிஸ்தானில் கூட இன்று முன்னாள் கிரிக்கெட் வீரன் இம்ரான் கான் -
தான் மோடியைப் போல நல்லாட்சி தருவேன் என்று கூறி வெற்றிக் கோப்பையை தட்டிப் பறித்து விட்டான் -

இங்கே, தமிழகத்தில் மட்டும் இன்னும் மோடியைக் குறை கூறிக்கொண்டே திரிகிறான்கள் ஒரு கூட்டம் -

கேட்டால் மதவாதி மோடி ஆபத்தானவர் என்று கீறல் விழுந்த ரிக்கார்டு போல கத்த வேண்டியது -

இவர்கள் எல்லாம் யார் என்று பார்த்தால் -

1.தி.மு.க:-50 ஆண்டுகளாக மதசார்பின்மை என்ற பெயரில் சிறுபான்மையினர் மதமாற்றத்திற்க்கு விளக்குப் பிடிக்கும் கட்சி -
சாதிகளை ஒழிக்கப் போகிறேன் என்று ஒவ்வொரு சாதிக் கட்சிகளையும் வளர்த்து வரும் ஒரு கட்சி -
விஞ்ஞானப் பூர்வமாக ஊழல் செய்து தமிழகத்தின் 53% சொத்துக்களை தனது தலைவரின் வாரிசுகள் பெயரிலும் பினாமிகள் பெயரிலும் குவித்திருக்கும் கட்சி -

2. காங்கிரஸ் :- இது தேசியக் கட்சியாக இருந்தாலும் தமிழகத்தில் லெட்டர் பேடு கட்சிதான் -
இது கூட தி.மு.க போலத்தான் சிறுபான்மை மதவாத ஆதரவு என்று அரசியல் செய்யும் கட்சி -

3. விடுதலைச் சிறுத்தைகள்:- தலித்துகளுக்கான கட்சி என்று தன்னைக்  சொல்லிக் கொண்டாலும் இதை முஸ்லிம் மதவாத கட்சி என்றே கூறலாம் -
இதை சமீபத்தில் நடந்த தேனி மாவட்டம் பொம்மிநாயக்கன்பட்டியில் நடந்த  கலவரத்தில் பார்த்தோம் -

4. கம்யூனிஸ்ட்கள்:- இவர்கள் ஒரு காலத்தில் யாரையெல்லாம் எதிர்த்தார்களோ அவர்களோடெல்லாம் கூட்டனி சேர்ந்து ஒன்றிரண்டு இடங்களுக்காக சிவப்பு துண்டு பிடித்து உண்டியல் குலுக்குபவர்கள் -
நிலையான  கொள்கை என்று எதுவுமே கிடையாது.  சீனாவின் முன்னேற்றத்திற்காக இந்தியாவில் உழைப்பவர்கள் -
ஏறக்குறைய இன்று செத்துப் போன பாம்பு இவர்கள் -

5. வேல்முருகன், கௌதமன்,  சீமான், திருமுருகன், போன்ற மதமாற்றும்  கிறிஸ்த்தவ பிரிவினைவாத  லெட்டர் பேடு அமைப்புகள் -
இவர்களைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை -
ஈழத் தமிழர்களை வைத்து வயிறு வளர்த்தவர்கள் -
அவர்களை அழித்தொழித்து விட்டு இந்தியத் தமிழர்களை ஒழிக்க கங்கணம் கட்டிக் கொண்டு திரிபவர்கள் -

இன்னும் பலரைப் பற்றி எழுத இடமில்லை -

இவர்கள் யாரேனும் 60 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் கலவரங்களையும், ஊழல்களையும் பற்றிப் பேசிப் பார்த்திருக்கிறீர்களா?

மாட்டார்கள்.

ஏன் என்றால் -

மோடியும் இவர்களைப் போல ஊழல்வாதியாக, ஊழல் செய்தால் கண்டு கொள்ளாதவராக இருந்திருந்தால் -

இன்று அவருடன் கூட்டணி சேரப் போட்டி போடுவார்கள் -

ஆனால், அவர்தான் தெளிவாக இருக்கிறாரே ஊழல்வாதிகளை, அந்நிய மதவியாபாரிகளை, பிரிவினைவாதிகளை அழிக்க வேண்டும் என்று _

அன்று இந்தியாவே எதிர்த்தது வேகமாக வளர்ந்து பிரதமரானார் -

இன்று தமிழகம் முழுவதும் எதிர்ப்பது போல அந்நிய மதவாத பிரிவினைவாதிகள்  சித்தரிக்கிறார்கள் -

அதை வரும் காலங்களில் பொய்யென்று நிருபிப்பார் -

கை நீட்டி குற்றம் சொல்ல ஒன்றுமே இல்லை -

மீம்களை நம்பும் தமிழன், மீண்டு வருவான் -

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...