Tuesday, 27 November 2018

இந்தியா முழுவதும் ஆட்சி செய்தது, சிக்கலான.. மதசார்பின்மை என்ற பெயரில்.. மாற்று மதசார்பை தூக்கிப்பிடித்த கட்சிகள்.

இந்தியா முழுவதும் ஆட்சி செய்தது, சிக்கலான.. மதசார்பின்மை என்ற பெயரில்.. மாற்று மதசார்பை தூக்கிப்பிடித்த கட்சிகள்.

இவர்கள் கம்யூனிஸ்டுகள் முதல் கண்டெம் ஆன நிலைப்பாடு கொண்ட கட்சிகள். இதன் காரணம், ஹிந்துக்கள் என்று வெளிப்படையாய் சொல்லவே சிரமப்பட்ட சாதாரண மக்கள். இவர்கள் லிபரல் என்று தங்களை பெருமையாய் சொல்லிக்கொண்டனர். இவர்கள் குண்டு சட்டியில் குதிரை ஓட்டவில்லை.. என்று மாற்று மத ஆசாமிகள் பாராட்டினர். இந்த பாராட்டுகளால் ஹிந்து மதம் என்பது ஆல்மோஸ்ட் ஒரு கெட்ட வார்த்தை என்பதாக அர்த்தம் கொள்ளப்பட்டது. ஹிந்து மட்டுமே அரவணைத்துப்போகவேண்டும். இதை மெஜாரிட்டியாக இருக்கும் மாற்று மத நாடுகளில், கீழாய் பார்த்தல் வசதியாய் மறந்தும் போய்விட்டிருக்கும்.

ஆனால்.. அதே சமயம்..இன்று மோதியையும், யோகியையும் ஹிந்து மத renaissance அதாவது மீண்டும் ஹிந்து மத  வளர்ச்சியாக கொண்டு வருவார்கள் என்று நம்புவதை, முழுமையாய் ஏற்றுக்கொள்ள முடியாது. இவர்கள் அரசியல்வாதிகள். ஹிந்து மதத்தை சேர்ந்தவர்கள். இம்மத மக்களின் சிக்கல்களை, இம்மதத்தின் புனிதங்களை அறிந்தவர்கள், இதை மேம்படுத்த முனைபவர்கள் என்று வைத்துக்கொள்ளலாம். இதை தாண்டி ஹிந்துக்களை இணைக்க வேண்டியது.. அரசியல் தாண்டிய ஜாதி தாண்டிய ஹிந்து மத சக்திகளும், குருக்களும்... மடாதிபதிகளும். நோக்கம் ஹிந்து என்று மட்டும் இருத்தல் மிக மிக அவசியம்.

மோதி, யோகி, போன்றவர்களை, அரசியல் சக்தி இல்லாத பொழுதுகளை நாட்களை நினைத்துப்பாருங்கள். அதற்கு பின் எப்படியான நாட்கள்..? என்ன நடக்கும் அரசியலில்.. யோசித்தீர்களா..?

பாஜக அல்லாத காங்கிரஸ் அல்லது எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலுமே, ஆட்சி காங் கையில்தான். எல்லாவித அதிகார அமைப்புகளிலும் காங் ஆசாமிகளின் தாக்கம் சுதந்திரம் பெற்றதிலிருந்து.. நீதி, சிபிஐ, ஆர்பிஐ முதல்.. பத்திரிகை வரையில் இவர்களின் ஆட்கள் ஏதோ ஒரு போர்வையில்.. பர்கா தத் பத்திரிக்கையாளர் மட்டும் என்று நினைத்தால்.. நீங்கள் அய்யோ பாவக்கேசு..

அர்னப் கலர் மாறிக்கொண்டு விடுவார். காங்கிரசுக்கு எதிரிகளை எப்படி கையாள வேண்டும், கூட சுற்றும் லாலு வகையறாக்களை எப்படி எங்கு வைக்க வேண்டும் என்றும் தெரியும். அதேபோல்..பாஜக எதிர்கட்சி தலைவராக யார் இருக்க வேண்டும் என்பதிலும் சாகசம் காட்டலாம்.  ஹிந்து ரிவைவல் எல்லாம்.. அதிகாலை கனவுதான். திப்பு சுல்தான் மணி மண்டபத்தில் நிழலில் அமர்ந்து யோசித்தால் ஏதாவது ஐடியா கிடைத்தாலும் கிடைக்கலாம்.

அமித் ஷாவையும் மோதியையும்.. குஜராத்திலோ தில்லியிலோ.. பெயிலுக்கு அலைய விட்டாலும் விடுவார்கள். நேஷனல் ஹெரால்டெல்லாம் ஒரு கேசு என்று ஊற்றி மூடி விடுவார்ரகள். நீங்கள் தூஃபான் புகழ் அபிஷேக் சங்க்வி, சீக்கியர் கொலை கேஸ் புகழ் சஜ்ஜன் குமார் வரை, எல்லா டீவியிலும் வந்து காமெடி பண்ணுவார்கள். நமக்கு எகானமிக்ஸ் பாடம், வரி கட்டாவிட்டால்.. என்று பசியும், கபில் சிபல் கவிதைகளை நினைத்தால் மட்டும் ஏகத்துக்கும் டர்ர்ர் ஆகிறது. ஷரத் பவாரின் பெண்.. ஆக்க பூர்வமாய் நடவடிக்கைகள் எடுப்போம் என்று ஒரு ஏக்கரில் நூறு கோடி சம்பாதிப்பார். சல்மான் குர்ஷித்தின் ஆங்கிலம் டாப் க்ளாஸ் என்று விசிறிக்கொண்டே சொல்லும் பக்கத்து வீட்டு மாமா, ஆய் துணி மாற்ற.. கலிஃபோர்னியா போய்விடுவார்.

யூபிஏ 3.0 4.0 5.0 ஏன் 6.0 கூட வரலாம். ராகுலுக்கு திருமணம் கூட ஆகலாம். Scam இல்லாமல் நல்ல ஆட்சி தரலாம். ஸ்டேட்டில் உதயநிதி திராவிட பாரம்பரியத்தை கையிலெடுக்கலாம். பாஜக என்ற மதவாத சக்தி எப்படி ஒடுக்கப்பட்டது என்று ஐந்தாம் க்ளாஸ் புத்தகத்தில் எழுதப்படலாம். தேசத்தை எதிர்க்கும் ஒரு தீவிரமான தலைமுறை உருவாகலாம்.

ராமச்சந்திர குஹாவிற்கு புக்கர் பரிசும், அருந்ததி ராய்க்கு அமைதிக்கான நோபல் பரிசும் கிடைக்கலாம். பங்க்ளாதேஷி ஒருவரின் ப்ளாட்டில் நீங்கள் குடியேறும் பாக்கியமும் கூட எங்காவது இந்தியாவில் நடக்கலாம். ராகுல் காந்தியின் பேச்சுத்திறனுக்கு.. Silver tongue brahmin என்று ப்ராமணர்கள் குதூகலித்துக்கொண்டாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.

ஹிந்து டெர்ரில்.. எல்லா சங்கராச்சாரியார்களையும் உள்ளே போடலாம். அதை லைவ் டீவியில் காட்டும் பாக்கியமும் கிடைக்கும். நான் பூணூலை தூக்கி எறிந்தேன் என்று பலர் ஸ்டேடஸ் போடலாம். ஆயிரம் லைக் வாங்கி கொண்டாடி மகிழலாம்.  ராகுல் பெரிய மனசு பண்ணி.. நளினியை விடுதலை பண்ணலாம்.
யூபிஏ 7.0 இல் ராகுலின் வெள்ளைக்கார பையன் வினோதமான ஹிந்தி பேசி கைதட்டல் வாங்கலாம்.

அந்த பொதுகூட்டத்தில்.. குச்சி ஐஸோ, பஞ்சு மிட்டாயோ, பாப்கார்னோ தின்றுவிட்டு.. எவன் ஆண்டால் என்ன என்று ஞாயிறு மதியம் குறட்டை வலிக்கலாம். இதுதான் இதுவரை நடந்தது.. இனிமேலும் இது நடக்கலாம். ஓட்டு மட்டும் போட்டுவிடாதீர்கள். ஆனால் ஜனநாயகம் பற்றி வாய் கிழிய வியாக்கியானம் பேசுங்கள்.

கிர்ர்ர்ர்

இது மத்திய பாஜக அரசின் கூட்டம் இல்லை.

இந்திய கணக்கு தனிக்கையாளர்களின் (auditor )மதுரையில் நடைபெற்ற கூட்டம்.

நம் நாடு எந்த அளவுக்கு
கடந்த நான்காண்டுகளில்
பாரத பிரதமர் மோடிஜி தலைமையில் நாடு  முன்னேற்றப்பாதையில் சென்று கொண்டு இருக்குறதுக்கான மிக தெளிவான விளக்கம்..... தமிழில்
*அவசியம் பார்க்கவும்*

இரண்டு நாட்களாக மண்டையைப் பிச்சுக்கிட்டு இருந்த ஒரு விஷயத்துக்கான knot பிடிபட்டு விட்டதாகவே எண்ணுகிறேன்.

இரண்டு நாட்களாக மண்டையைப் பிச்சுக்கிட்டு இருந்த ஒரு விஷயத்துக்கான knot பிடிபட்டு விட்டதாகவே எண்ணுகிறேன்.

எதுக்கு உலகம் முழுக்க பிராமணனை வசை பாடி கிட்டு இருக்காங்கறதை ..
நாட்டில் ஒரு சதவிகிதம் இருந்தாலே பெரிய விஷயம்..
நாட்டின்  பிரதமர், ஜனாதிபதி என ஆட்சியில் அனைவரும் பிராமணர் அல்லர். அப்புறம் ஏன்?
முக்கிய காரணம் அஜித் டோவல்..குவாலியர் ப்ராமணராம்
பிரதமரின் ஆலோசகர் , இந்திய பாதுகாப்பு ஆலோசகர்...
பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா பிராமணர்..
இப்பொழுதெல்லாம் இந்திய மிலிட்டரியை பலவீனப் படுத்தும் கடந்த கால முயற்சிகள் கைக்கூடவில்லை போலிருக்கு...
அதான் வெளிநாட்டுக்காரன் கதறுகிறான்..
சோசியல் மீடியாய் வை கொண்டு வந்து மிரட்ட நினைத்த அவனுக்கு அதுவே ரிவெர்ஸாக போய் விட்டது..
சமூக வலைத்தளங்களில் பாஜக ஆளுமையில் இருப்பது வேப்பங்காயாக கசக்கிறது..
தப்புக்கணக்கு போட்டுவிட்டான்..
ஒன்னும் செய்ய முடியாமல் இருந்தவன் கையில் இந்த பிடிச்சுக்கோன்னு சமூக வலைத்தளங்கள் எழுத இடம் கொடுத்ததும் சாமானிய ஹிந்துக்கள் பின்னுகிறார்கள்...
காங்கிரஸோ பாஜாகாவோ தவறாக சொன்னால் ஆதாரத்தோடு முகத்திரையை கிழிக்கிறார்கள்...
அஜித்தும் நிர்மலாவும் வந்த பிறகு டிஃபன்ஸில்  நாமே உற்பத்தி செய்து இந்தியாவிலேயே மிலிட்டரிக்கு தேவையான உபகரணங்கள் வாங்குவது கணிசமாக உயர்ந்துள்ளது.
2000 பெறுமானமுள்ள காலணிகளை 20000 கொடுத்து வாங்கிய காலம் போய் உள்ளூர்லயே குறைவான விலைக்கு தரமான பொருட்கள் உற்பத்தி செய்து வருகிறோம்.
அந்நிய செலாவணி குறைகிறது...
வெளிநாட்டுக்காரன் கதறுகிறான்...
அவனின் ஏஜென்ட்டுகளான ப^^&*டை என்ஜிஓக்கள் குறைக்கின்றன,,,
வேறொண்ணுமில்லை..

Why Foreign tours by MODI?

https://youtu.be/_-Pj5DRRzyc

பெண் குழந்தைகளை பலாத்காரம் செய்துவந்துள்ள கிறிஸ்தவகாப்பக உரிமையாளர்கள் அரசியல் கட்சிகள் சமூக ஆர்வலர்கள் கண்டுகொள்ளாதது ஏன்?

பெண் குழந்தைகளை பலாத்காரம் செய்துவந்துள்ள கிறிஸ்தவகாப்பக உரிமையாளர்கள் அரசியல் கட்சிகள் சமூக ஆர்வலர்கள் கண்டுகொள்ளாதது ஏன்?

https://onlinenewstamilnadu.blogspot.com/2018/11/blog-post_26.html

கோலாலம்பூர் பூச்சோங்கில் 140 வருட பழமையான மாரியம்மன் கோவில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் அதிகாலை 5 மணிக்கு அத்து மீறி கோவிலுக்குள் நுழைந்து சாமிகளை உடைத்தும்

கோலாலம்பூர் பூச்சோங்கில் 140 வருட பழமையான மாரியம்மன் கோவில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் அதிகாலை 5 மணிக்கு அத்து மீறி கோவிலுக்குள் நுழைந்து சாமிகளை உடைத்தும் விக்கிரகங்கள் மீது சிறுநீர் கழித்தும் நாசம் செய்துள்ளனர்😡😡😡

அதை தட்டி கேட்ட மக்களை அடித்து மண்டையை உடைத்துள்ளனர் 😡😡😡
https://youtu.be/gRtXUkGxlP4

இந்திய தூதரகங்களில் 48 மணி நேரத்துக்குள் பாஸ்போர்ட் வழங்கப்படும்

உலகம் முழுவதும் இந்திய தூதரகங்களில் 48 மணி நேரத்துக்குள் பாஸ்போர்ட் வழங்கப்படும் - மத்திய மந்திரி தகவல்

http://http//www.dailythanthi.com/DailyThanthiJson/News/World/2018/11/26023624/Passport-will-be-issued-within-48-hours-in-Indian.vpf

தமிழ் இலக்கியங்களை கொச்சைப்படுத்திய திருச்சி கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்

தமிழ் இலக்கியங்களை கொச்சைப்படுத்திய திருச்சி கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்

ராம கோபாலன் வலியுறுத்தல்

http://http//www.dailythanthi.com/DailyThanthiJson/News/State/2018/11/26230242/Rama-Gopalan-urged-to-cancel-the-approval-of-the-Tiruchi.vpf

எழுச்சி காணும் இந்திய ரூபாய் மதிப்பு – மாற்றம் காணும் உலக பொருளாதாரம்.!

எழுச்சி காணும் இந்திய ரூபாய் மதிப்பு – மாற்றம் காணும் உலக பொருளாதாரம்.!

http://www.kathirnews.com/2018/11/26/indian-rupee-scaling/

மோடி என்ற பெயரைக் கேட்டாலே கறுப்புக் குடையைப் பார்த்துமிரளும் மாடுகளை போலத் துள்ளிப் பதில் போடும்

மோடி என்ற பெயரைக் கேட்டாலே கறுப்புக் குடையைப் பார்த்துமிரளும் மாடுகளை போலத் துள்ளிப் பதில் போடும்

எனது செக்யூலரிஸ்ட் / முற்போக்கு / பிரிவினை வாதம் பேசும் (so called)அறிவு ஜீவிகளிடம் நான்சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன்.

குறிப்பாக இஸ்லாமிய, கிறித்துவ, நாத்திக, திராவிட இயக்கங்களின் போர்வாள்கள் தான் இந்த எதிர்ப்புப்படையின் முன்னணியில் நிற்கிறவர்கள்.

மோடி மதவாதி.
மோடி இந்து மத வெறியர்.
மோடி பிற்போக்கு வாதி.
மோடி பணக்காரர்களை ஆதரிக்கிறவர்.
மோடி தமிழர் நலன்களுக்கு எதிரானவர்.

அவர் இது வரை எத்தனை மசூதிகளை இடித்தார்?

அவருடைய ஆட்சிக்காலத்தில் எத்தனை கிறித்துவ தேவாலயங்கள் மூடப் பட்டன?

எத்தனை நாத்திகர்கள் படுகொலை செய்யப்பட்டனர் அல்லது தூக்கில் தொங்கினர்?

அவருடைய ஆட்சிக்காலத்தில் மதமாற்றங்கள் நின்று போய்விட்டனவா?

அவருடைய ஆட்சியில் எத்தனை மதக் கலவரங்கள் நடந்தன?

அவருக்கு முந்தைய ஆட்சியில் பணக்காரர்கள் எல்லாம் மிகவும் கஷ்டப்பட்டார்களா?

பாஜக ஆளும் மாநிலங்களில் எத்தனை கலவரங்கள் நடந்திருக்கின்றன?

பாஜக ஆளும் மாநிலங்களில் வாழ்ந்த இஸ்லாமியரும் கிறித்தவர்களும் ஜம்முவிலும் காஷ்மீரிலும் வாழ்ந்த காஷ்மீரி பிராமணர்களைப் போல தங்கள் ஊர்களை விட்டு ஓடி விட்டார்களா?

அம்பானிக்கு கோதாவரி பேசினில் ஆயிரங்கோடிக் கணக்கில் சம்பாதித்துக் கொடுக்கும் எண்ணெய்க் கிணறுகளும் இயற்கை எரிவாயுக் கிணறுகளும் மோடி ஆட்சியில் தான் அலாட் பண்ணப்பட்டனவா?

விஜய மல்லையாவுக்கு 9000 கோடி கடன் தர வங்கிகளுக்குப் பரிந்துரை செய்தது மன் மோகன் சிங்கும் பானா சீனாவுமா இல்லை மோடியும் அருண் ஜெட்லீயுமா?

அடானி காங்கிரஸ் காலத்தில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தாரா?

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ராபர்ட் வாத்ராவின் 70 வயது தாய்க்கு
வருஷத்துக்கு 1 கோடி ரூபாய் செலவில் Z கேட்டகரி பாதுகாப்பு வழங்கியது போல மோடியின் தாய்க்கு z கேட்டகரி பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறதா?

2 -G ஸ்கேம், நிலக்கரி ஊழல் ஸ்கேம் வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் வாங்கிய ஸ்கேம், ராணுவத்துக்கு வாங்கப்பட்ட டாட்ரா ட்ரக் ஸ்கேம், காமன் வெல்த் கேம்ஸ் ஸ்கேம், ஆதர்ஷ் ஹவ்சிங் ஸ்கேம், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் ஸ்கேம், வோட் ஃபார் கேஷ் ஸ்கேம், லெவெலில் ஒரு ஸ்கேமாவது மோடி அரசில் இது வரை உண்டா?

கங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் காவிரி நீர்ப் பிரச்சினை தீர்க்கப்பட்டு அதை மோடி அரசு ரத்து செய்து விட்டதா?

முள்ளி வாய்க்கால் படுகொலையும் இலங்கைத் தமிழர்களின் இனப் படுகொலையும் மோடி காலத்து நிகழ்வுகள்தானா?

எதற்காக மோடியை எதிர்க்கிறீர்கள்?

Rabis நோயால் பீடிக்கப்பட்ட நாய்கள்தான் காரணமேயில்லாமல் எல்லோரையும் கடிக்கும்.

காலமெல்லாம் தொழிலாளர்களுக்காக இலவசமாக வாதாடிய ஒரு தொழிற்சங்கத் தலைவரின் பேத்தி நான். எனக்கும் மோடிக்கும் ஏழாம் பொருத்தம். ஆனால் நான் கண்களை மூடிக்கொண்டிருக்கவில்லை. கருத்துக் குருடியும் இல்லை.

நாமெல்லாம் சிந்திக்கத் தெரிந்த மனிதர்கள் என்ற நம்பிக்கையுடன் கேட்கிறேன், யோசித்து பதில் சொல்லுங்கள்.

-- கோதை நாச்சியார், நிலக்கோட்டை...

(நான் பிராமணர் இல்லீங்க)

வில்லன் பாகிஸ்தான் மட்டுமல்ல; காங்கிரஸும் தான்! காங்கிரஸ் துப்பாக்கி தூக்காத பாகிஸ்தானிகள்..!

மிகவும் அவசியமாக அனைவரும் படிக்க வேண்டிய பதிவு..! காங்கிரஸைப் போன்ற ஒரு களவாணிக் கட்சியை இந்த உலகில் எங்குமே பார்க்க முடியாது..!
நன்றி - Venugopalan R  ஜி
__________________________________

26/11 - முதலில் ஒரு நினைவூட்டலை மட்டும் செய்துவிட்டு அமைதியாக இருக்கலாமென்றுதான் யோசித்தேன்; முடியவில்லை.

இரண்டொரு நாட்களுக்கு முன்னால் முன்னாள் உள்துறை அமைச்சரும் ரிகவுண்டிங் எம்.பியுமான ப.சிதம்பரம் திருவாய் மலர்ந்தருளியிருந்தார். அதாவது:

“அமெரிக்கா அபோடாபாத் ஊருக்குள் குதித்து பின் லாடனைப் போட்டுத்தள்ளியதுபோல, ஹஃபீஸ் சயீதை பாகிஸ்தானுக்குள் நுழைந்து அழிக்கிற திறமை நமது ராணுவதுக்கு இல்லை.”

இந்த ஆள் உள்துறை அமைச்சராக இருந்தவர்,

26/11-க்குத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க நமது விமானப்படை தயாராக இருந்தது. ஆனால், அதற்கு மன்மோகன் சிங் தலைமையிலான மண்ணாங்கட்டி அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை என்பதை முன்னாள் விமானப்படைத் தளபதியே கூறியிருக்கிறார். இந்த வெட்கக்கேட்டை முன்னாள் உள்துறைச் செயலர் சிவசங்கர் மேனன் எழுதிய ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் அவரும், ப.சிதம்பரமும் மிகுந்த பெருமிதத்துடன் தெரிவித்துக் கொண்டார்கள். எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோமாம்; ரொம்ப நல்லவங்களாம் நாம்.

இந்த கேடுகெட்ட காங்கிரஸிடம் மீண்டும் ஆட்சியைக் கொடுத்தால், மீண்டும் மீண்டும் சித்து போன்ற லூசுகளை பாகிஸ்தானுக்கு அனுப்பி,  அவிடத்து ராணுவ தளபதியைக் கட்டிப்பிடித்துப் போஸ் கொடுக்க வைப்பார்கள் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

அஜ்மல் கஸப் உயிருடன் பிடிபடக்கூடாது என்பதே பாகிஸ்தானின் திட்டமாக இருந்திருக்கிறது. ஆனால், ஹவல்தார் ஓம்ப்ளேயின் சாகசாத்தால் அவன் பிடிபட்டான்; குட்டு உடைபட்டது. வயர்லெஸ் சம்பாஷணைகள் கிடைத்தன; வாக்குமூலம் கிடைத்தது. அவன் பாகிஸ்தானி என்பதற்கான நிரூபணமும் கிடைத்தது. போதாக்குறைக்கு டேவிட் ஹெட்லியை அமெரிக்காவில் பிடித்ததும் மொத்தத் திட்டமும் வெளிவந்தது.

மன்மோகன்சிங் அரசு பாகிஸ்தானுக்கு டோஸியர் மேல் டோஸியர் அனுப்பிக்கொண்டிருந்தது; பாகிஸ்தான் ‘பத்தாது; பத்தாது’ என்று எகத்தாளம் செய்து கொண்டிருந்தது. இந்த அவலம் போதாதென்று காங்கிரஸின் கழுதைப்படைத் தலைவரான திக்விஜய் சிங், “26/11 தாக்குதல் ஆர்.எஸ்.எஸ் மேற்கொண்டது,” என்று புரளி கிளப்பிக் கொண்டிருந்தார்.  ‘தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஹேமந்த் கர்கரே தொலைபேசியில் தன்னிடம் தெரிவித்ததாக புளுகினார். இந்தப் புளுகுகள் இத்தோடு நின்றதா என்றால் இல்லை.

’ராஷ்ட்ரிய சஹாரா” என்ற உருதுப் பத்திரிகையின் ஆசிரியர் அஜிஸ் பர்னி என்பவர் ஒரு புத்தகம் எழுதினார். தலைப்பு: 26/11 – ஆர்.எஸ்.எஸ்.கீ சாஜிஷ்? (26/11 – ஆர்.எஸ்.எஸ்.சதியா?)

மேற்படிப் புத்தகத்தை வெளியிட்டது யார் தெரியுமா? சாட்சாத் திக்விஜய் சிங்தான்! அந்தக் கூட்டத்தில் பேசிய இன்னொரு பிரபலம் யார் தெரியுமா? பிரபல இயக்குனர் மகேஷ் பட்! ஆம், நடிகை ஆலியா பட்-ன் அப்பாவேதான். அவருக்கும் 26/11-க்கும் என்ன தொடர்பு?

டேவிட் ஹெட்லீயின் மும்பை விஜயத்தின்போது அவன் ஏற்படுத்திக்கொண்ட பல தொடர்புகளில் மகேஷ் பட் மகன் ராகுல் பட் ஒருவராக இருந்தார். ஹெட்லியின் வாக்குமூலத்துக்குப் பிறகு தற்போது விசாரணை வளையத்தில் சிக்கி கடந்த ஜனவரி மாதம் கூட ஆஜர் ஆகியிருக்கிறார். இப்போது புரிந்ததா மகேஷ் பட் அந்தப் புத்தக வெளியீட்டுக்கு எதற்கு வந்தார் என்று?

26/11-ஆர்.எஸ்.எஸ். சதியா? புத்தகத்தின் பி.டி.எஃப் படிக்க நேர்ந்தது. அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு, அதற்கு மேல் ஒன்று உண்டென்றால் அது அஜீஸ் பர்னி புளுகு என்று சொல்ல வேண்டியதுதான். அந்த அளவுக்கு பா.ஜ.கவும் ஆர்.எஸ்.எஸ்-ம் சேர்ந்து 26/11 தாக்குதலுக்குப் பின்புலமாக இருந்து செயல்பட்டார்கள் என்று அடித்துக் கூறியிருந்தார். ‘அட போங்கய்யா, உங்க ஆளுங்களே தாக்குதல் பண்ணினது உள்ளூர்க்காரன்னு சொல்றாங்க, எதுக்குய்யா எங்களைக் கேக்குறே?” என்று அப்போதைய பாகிஸ்தான் அரசு நக்கலடித்தது நம்மைப் பார்த்து. மன்மோகன்சிங் அரசுக்குத்தான் வெட்கம், மானம், சூடு,சொரணை எதுவுமே கிடையாதே? வாரா வாரம் ஒரு டோஸியரை பாகிஸ்தானுக்கு அனுப்பிவிட்டு ‘முடிஞ்சது சோலி’ என்று தனது முக்கியப்பணியான ஊழலில் சளைக்காமல் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.

மே 12,2018! பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீஃப் உண்மையை ஒப்புக் கொள்கிறார்: நம்  நாட்டிலிருந்து மும்பைக்கு எல்லைதாண்டிப்போய் நூற்றுக்கணக்கானவர்களைக் கொல்வதை நாம் அனுமதிக்கலாமா? அந்த விசாரணை ஏன் இன்னும் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது?”

அவ்வளவுதான்! ‘26/11-ஆர்.எஸ்.எஸ்.கீ சாஜிஷ்?’ புத்தகத்தை ஊர் ஊராகப் போய் வெளியிட்டுக்கொண்டிருந்த திக்விஜய்சிங் வாயில் பூட்டு போட்டதுபோல மவுனமானார். சரி, இந்த ஆசாமியை அருகில் வைத்துக் கொண்டிருந்தால் மத்தியப் பிரதேசத் தேர்தலில் ஜெயித்த மாதிரிதான் என்று காங்கிரஸுக்கே ஞானோதயம் வந்து ஓரங்கட்டினார்கள். ஆர்.எஸ்.எஸ். மீதும் பா.ஜ.க மீதும் அவதூறு பரப்பிய அஜீஸ் பர்னியும் ‘யாரையும் புண்படுத்துவது எனது நோக்கமில்லை,’ என்று வெண்ணைத்தனமாக ஒரு விளக்கமளித்து விட்டு ஒளிந்து கொண்டார். அவரது நோக்கம் என்னவென்றுதான் நாட்டுக்கே தெரிந்து போயிருந்ததே? எப்படியாவது பாகிஸ்தானை மிகவும் அப்பாவி என்று நிரூபித்து, பழியை ஆர்.எஸ்.எஸ். மீது போட வேண்டும் என்பதுதானே திட்டம்?

ஆர்.எஸ்.எஸ்.மீது பழிபோடுவது காங்கிரஸுக்குப் புதிதா என்ன? மேடைக்கு மேடை ‘காந்தியைக் கொன்றது ஆர்.எஸ்.எஸ்.தான் என்று பேசிய பப்பு, சமீபத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகி ‘இல்லை, காந்தியைக் கொன்றது ஆர்.எஸ்.எஸ்.இல்லை; தெரியாமல் சொல்லிவிட்டேன்,’ என்று வாக்குமூலம் அளிக்கவில்லையா?

காங்கிரஸ் முக்த் பாரத் என்று மேடைக்கு மேடை மோடி சொல்வது இதற்குத்தான். தேவைப்பட்டால் நாட்டை பாகிஸ்தானுக்கே எழுதி வைக்கவும் தயங்காத ஐந்தாம்படைகள் காங்கிரஸ்காரர்கள்.

26/11-ன் வில்லன் பாகிஸ்தான் மட்டுமல்ல; காங்கிரஸும் தான்! காங்கிரஸ் துப்பாக்கி தூக்காத பாகிஸ்தானிகள்..!

குஜராத்தில் பாஜக ஏன் தொடர்ந்து வெற்றி பெற்றுக்கொண்டே வருகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

குஜராத்தில் பாஜக ஏன் தொடர்ந்து வெற்றி பெற்றுக்கொண்டே வருகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

குஜராத் எங்கே இருக்கிறது என்று கூட தெரியாமல் சிலர் இங்கே உளறி வரும் அபத்தங்களை எல்லாம் எள்ளி நகையாடுகிறது இந்த நேர் காணல்கள்.

அனைவரும் படிக்க வேண்டும். குறிப்பாக பாஜக எதிர்ப்பாளர்கள் படித்து உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும்.

இதை பிரசுரித்து இருப்பது தினமலரோ, தினமணியோ கூட அல்ல. பாஜக எதிர்ப்பாளர்கள் விரும்பி வாசிக்கும் தமிழ் இந்து பத்திரிகை.

************************************

‘பாஜக ஆட்சியில் தமிழர்கள் நிம்மதியாக இருக்கிறோம்’ - குஜராத் அரசு இயந்திரத்தின் செயல்பாடுகளை பாராட்டும் சபர்மதி தமிழர்கள்...

பர்மதி காந்தி ஆசிரமத்திலிருந்து நடக்கும் தொலைவில் இருக்கிறது கேசவ நகர். சற்றே தூரத்தில் சுத்தமாக சலசலத்து ஓடுகிறது சபர்மதி ஆறு. அருகிலேயே சபர்மதி ரயில் நிலையம். இதையொட்டி உள்ளடங்கிய பாதையில் சென்றால் வருகிறது கேசவ் நகர். அது முற்றிலும் மாறுபட்ட அகமதாபாத். சின்னதாக ஒரு முத்து மாரியம்மன் கோயில். வண்டிக்கடையில் வடைக்கறி வாசம்.. நாக்கில் வேர்க்க வைக்கிறது. ரோட்டோர கடையில் பாட்டி ஒருவர் சுடச்சுட இட்லியுடன் தக்காளி சட்னி வைத்துக்கொடுக்கிறார்.

கூலித் தொழிலாளர்கள் தெருவில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். விலை அதிகமில்லை, ஒரு தட்டில் நான்கு இட்லி பத்து ரூபாய்தான்... வெறும் சப்பாத்தியால் ஒரு வாரமாக செத்துக்கிடந்த நாக்குக்கு உயிர்க் கொடுத்தார் இட்லிக்கடை பாட்டி!

“எங்க இடத்துக்கு இதுவரைக்கும் பத்திரிகைக்காரங்க யாரும் வந்ததேயில்லை, இங்க வர்ற முதல் பத்திரிகையாளர் நீங்கதான்... வயிறார சாப்பிடுங்க தம்பி...” வாஞ்சையோடு பேசுகிறார் பழனியம்மாள். சபர்மதி மட்டுமல்ல, அகமதாபாத் நகரை ஒட்டியிருக்கும் மணிநகர், வட்வா, நரோடா, பாபு நகர் இவை எல்லாம் தமிழர்கள் கணிசமாக வசிக்கும் பகுதிகள். ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு முகம் காட்டுகிறது.

மணிநகர் சென்றால் தமிழர்கள் வியாபாரத்தில் செழிக்கிறார்கள். ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களிலிருந்து வெள்ளை மோட்டாத் துணியை வாங்கி வந்து பல்வேறு கட்டங்களாக மதிப்புகூட்டி விற்கிறார்கள். லாரி டிரான்ஸ்போர்ட் வைத்திருக்கிறார்கள்.

பாபு நகரில் தமிழர்கள் பலரும் கட்டிட ஒப்பந்ததாரர்கள். மணிநகர், வட்வா, நரோடா இங்கெல்லாம் தமிழர்கள் ரயில்வே ஒப்பந்த தொழிலாளர்களாக இருக்கிறார்கள். மொத்தமாக அகமதாபாத்தில் மட்டும் சுமார் 15,000 தமிழ் குடும்பங்கள் வசிக்கின்றன. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் தமிழர்களிடம் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது, அரசியலில் இவர்களின் பங்கு என்ன, அவர்களின் ஆதரவு யாருக்கு? என்பதை எல்லாம் அறிய மேற்கண்ட பகுதியில் சுற்றினோம்.

சபர்மதி பகுதியில் மட்டும் சுமார் 500 குடும்பங்கள் இருக்கின்றன. அந்தப் பகுதியின் முக்கியப் பிரமுகராக இருக்கிறார் சூர குமார். “நாங்கெல்லாம் பிறந்து வளர்ந்ததே இந்த ஏரியா தாங்க. ரொம்ப வருஷமா மோடி கட்சிக்குதான் ஓட்டு போடுறோம். இந்த முறையும் அவர் கட்சிக்குதான் ஓட்டு போடுவோம்.இதோ இந்த ஏரியாவெல்லாம் மண் ரோடா ஒரே சாக்கடையா இருந்தது. இவங்க கவர்மெண்ட்டுலதான் சிமெண்ட் ரோடு போட்டாங்க. இங்க வீடு கட்டிக்க அனுமதி கொடுத்தாங்க. குடிதண்ணி வசதி செஞ்சுக் கொடுத்தாங்க. ஏதாச்சும் பிரச்சினைன்னா கவுன்சிலருக்கு போன் அடிச்சா பத்து நிமிஷத்துல வந்துடுவாரு...” என்கிறார்.

பெரியவரான இருசமுத்து, “எங்க குடும்பத்துல ஒரு பகுதி உளுந்தூர்ப்பேட்டையில இருக்குது. ஒவ்வொரு முறையும் தமிழகத்துக்கு வரும்போது ரேசன் கார்டுக்கு நடையா நடக்குறேன். கிடைச்சபாடில்லை. இங்கே அப்ளிக்கேஷன் கொடுத்தவுடனே ரெண்டு நாள்ல வீட்டுக்கு வந்து விசாரிச்சிட்டு பத்து காசு செலவு இல்லாம கார்டு கொடுக்குறாங்க. இந்த கவர்மெண்ட்டுல எந்த தொந்தரவுமில்லைங்க...” என்கிறார்.

இடைமறிக்கும் இளைஞரான தங்கராசு, “தாத்தா இதையே எத்தனை நாளைக்கு சொல்லிக்கிட்டிருப்ப... ரூபா நோட்டு செல்லாததாக்கினப்ப மொத்த தெருவும் பட்டினிக் கிடந்தோமே மறந்துபோச்சா... கொஞ்ச நாளா அவங்க ஆளுங்க நம்மளைக் கண்டுக்காம போறாங்க. அவங்க மட்டும்தான் ஆட்சியில இருக்குணுமா. ஒரு மாற்றத்துக்கு இந்த முறை காங்கிரஸுக்கு ஓட்டு போடுவோம்...” என்கிறார். அந்தத் தாத்தாவின் பேரன் இவர்.

குடும்பத் தலைவியான லட்சுமி, “குழந்தைகளுக்கு தமிழ் ஸ்கூல் இருக்குப்பா. ஏழாங்கிளாஸ் வரைக்கும் தமிழ்ல சொல்லிக்கொடுக்குறாங்க. அதுக்கு அப்புறம் மணிநகர் ஸ்கூல்லுக்கு அனுப்பிடுவோம். அங்க பிளஸ் 2 வரைக்கும் தமிழ் மீடியம் இருக்கு. என்ன தமிழ் நடத்துற டீச்சருக்கு பற்றாக்குறையா இருக்கு. இந்த முறை பாஜக ஆட்சிக்கு வந்தா குழந்தைங்களுக்கு கல்வி உதவித் தொகைக்கு ஏற்பாடு பண்றதா சொல்லியிருக்காங்க. நாங்க எப்பவுமே பாஜக-வுக்கு ஆதரவு. அவங்கதான் எங்களுக்கு பாதுகாப்பாக இருக்காங்க” என்கிறார்.

சபர்மதி பகுதியில் வெஸ்டர் ரயில்வே மஜ்தூர் பஞ்சாயத்து தலைவராகவும் கர்னாவதி தமிழ் சங்கத்தின் சட்ட ஆலோசகராகவும் இருக்கிறார் சத்தியவான். மேற்கண்ட பகுதி மக்களுக்கு எந்தப் பிரச்சினை என்றாலும் முதல் ஆளாக வந்து நிற்கிறார். “இருபது வருஷம் முன்னாடி காங்கிரஸ் ஆட்சியில இதே அகமதாபாத் எப்படி இருந்துச்சு தெரியுமா? இதோ இந்த சபர்மதி ஆறு சாக்கடை மாதிரி ஓடுச்சு. இப்ப எப்படி இருக்கு... கையில அள்ளி தண்ணியைக் குடிக்கிறோமில்லையா.

இந்தியாவில் ஒரு நெரிசலான நகரத்துக்குள்ளே இப்படி சுத்தமா ஓடுற ஒரு நதியைக் காட்டுங்க பார்ப்போம். இதை செஞ்சது பாஜக கட்சிதானே. முன்பு காங்கிரஸ் ஆட்சியில அஞ்சு வருஷத்துக்கு ஒரு மேம்பாலம் கட்டினாலே பெரிய விஷயம். ஆனால், கடந்த ரெண்டு வருஷத்துல அகமதாபாத்தில் மட்டும் சானந்த், சர்க்கேஜ், மணிநகர், உஸ்மான்புரா, பாபுநகர், இன்கம்டாக்ஸ் ஏரியா மேம்பாலங்கள் உட்பட 49 மேம்பாலங்கள் கட்டியிருக்காங்க.

இதுல இன்கம்டாக்ஸ் ஏரியா மேம்பாலத்தின் நீளம் மட்டும் 16 கி.மீட்டர். இதோ இப்போ மெட்ரோ ரயில் வேலை நடக்குது. தமிழ்நாட்டுல ஏதாவது பிரச்சினைன்னு போலீஸ் ஸ்டேஷனுக்கு போனா ஏட்டுகூட மதிக்க மாட்டாங்க. இங்கே இன்ஸ்பெக்டரைப் போய் பார்த்தா சலாம் சாப் சொல்லி சேர்ல உக்கார வெச்சிப் பேசுவாங்க. நம்பிக்கை இல்லன்னா நீங்க பக்கத்துல இருக்குற மணிநகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் பாருங்க.

எங்களுக்குன்னு இல்லை, குஜராத் போலீஸ் ஸ்டேஷன், கவர்மெண்ட் ஆபீஸ் இங்கெல்லாமே பொதுமக்களுக்கு அவ்வளவு மரியாதை. ஏன்னா, தப்பு செஞ்சா கவர்மெண்ட் நம்ம மேலே நடவடிக்கை எடுத்துடுவாங்கன்னு பயம் இருக்கு. அந்தப் பயத்தை உருவாக்கி வெச்சது பாஜக அரசாங்கம்தான். சில குறைகள் இருந்தாலும் பாஜக ஆட்சியில் தமிழர்கள் நாங்க நிம்மதியாக வாழுறோம். அதுபோதும்...” என்கிறார்.

கர்னாவதி தமிழ்ச் சங்கத் தலைவரான பாலாஜி, “ஆனால், அரசியலில் இதுவரைக்கும் ஒரு கவுன்சிலர் சீட்டுகூட பாஜக கட்சி தமிழர்களுக்கு கொடுத்ததில்லை. எதிர்காலத்தில் உள்ளாட்சித் தேர்தலிலாவது தமிழர்கள் போட்டியிட பாஜக வாய்ப்பு தரணும்” என்கிறார்.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலைப் பொறுத்தவரை தமிழர்களின் வாக்குகள் இங்கே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாதுதான். ஆனாலும் இங்கிருக்கும் தமிழர்கள் பாஜக ஆட்சியின் மீது நன்மதிப்பு வைத்திருக்கிறார்கள். உள்ளூரில் அரசு இயந்திரம் தனது கடமையை சரியாக செய்வதே இதற்குக் காரணம் என்று அறியமுடிகிறது.

டி.எல்.சஞ்சீவிகுமார்

நன்றி : தமிழ் இந்து நாளிதழ்.

மீள் பதிவு.

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...