Tuesday, 27 November 2018

இந்தியா முழுவதும் ஆட்சி செய்தது, சிக்கலான.. மதசார்பின்மை என்ற பெயரில்.. மாற்று மதசார்பை தூக்கிப்பிடித்த கட்சிகள்.

இந்தியா முழுவதும் ஆட்சி செய்தது, சிக்கலான.. மதசார்பின்மை என்ற பெயரில்.. மாற்று மதசார்பை தூக்கிப்பிடித்த கட்சிகள்.

இவர்கள் கம்யூனிஸ்டுகள் முதல் கண்டெம் ஆன நிலைப்பாடு கொண்ட கட்சிகள். இதன் காரணம், ஹிந்துக்கள் என்று வெளிப்படையாய் சொல்லவே சிரமப்பட்ட சாதாரண மக்கள். இவர்கள் லிபரல் என்று தங்களை பெருமையாய் சொல்லிக்கொண்டனர். இவர்கள் குண்டு சட்டியில் குதிரை ஓட்டவில்லை.. என்று மாற்று மத ஆசாமிகள் பாராட்டினர். இந்த பாராட்டுகளால் ஹிந்து மதம் என்பது ஆல்மோஸ்ட் ஒரு கெட்ட வார்த்தை என்பதாக அர்த்தம் கொள்ளப்பட்டது. ஹிந்து மட்டுமே அரவணைத்துப்போகவேண்டும். இதை மெஜாரிட்டியாக இருக்கும் மாற்று மத நாடுகளில், கீழாய் பார்த்தல் வசதியாய் மறந்தும் போய்விட்டிருக்கும்.

ஆனால்.. அதே சமயம்..இன்று மோதியையும், யோகியையும் ஹிந்து மத renaissance அதாவது மீண்டும் ஹிந்து மத  வளர்ச்சியாக கொண்டு வருவார்கள் என்று நம்புவதை, முழுமையாய் ஏற்றுக்கொள்ள முடியாது. இவர்கள் அரசியல்வாதிகள். ஹிந்து மதத்தை சேர்ந்தவர்கள். இம்மத மக்களின் சிக்கல்களை, இம்மதத்தின் புனிதங்களை அறிந்தவர்கள், இதை மேம்படுத்த முனைபவர்கள் என்று வைத்துக்கொள்ளலாம். இதை தாண்டி ஹிந்துக்களை இணைக்க வேண்டியது.. அரசியல் தாண்டிய ஜாதி தாண்டிய ஹிந்து மத சக்திகளும், குருக்களும்... மடாதிபதிகளும். நோக்கம் ஹிந்து என்று மட்டும் இருத்தல் மிக மிக அவசியம்.

மோதி, யோகி, போன்றவர்களை, அரசியல் சக்தி இல்லாத பொழுதுகளை நாட்களை நினைத்துப்பாருங்கள். அதற்கு பின் எப்படியான நாட்கள்..? என்ன நடக்கும் அரசியலில்.. யோசித்தீர்களா..?

பாஜக அல்லாத காங்கிரஸ் அல்லது எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலுமே, ஆட்சி காங் கையில்தான். எல்லாவித அதிகார அமைப்புகளிலும் காங் ஆசாமிகளின் தாக்கம் சுதந்திரம் பெற்றதிலிருந்து.. நீதி, சிபிஐ, ஆர்பிஐ முதல்.. பத்திரிகை வரையில் இவர்களின் ஆட்கள் ஏதோ ஒரு போர்வையில்.. பர்கா தத் பத்திரிக்கையாளர் மட்டும் என்று நினைத்தால்.. நீங்கள் அய்யோ பாவக்கேசு..

அர்னப் கலர் மாறிக்கொண்டு விடுவார். காங்கிரசுக்கு எதிரிகளை எப்படி கையாள வேண்டும், கூட சுற்றும் லாலு வகையறாக்களை எப்படி எங்கு வைக்க வேண்டும் என்றும் தெரியும். அதேபோல்..பாஜக எதிர்கட்சி தலைவராக யார் இருக்க வேண்டும் என்பதிலும் சாகசம் காட்டலாம்.  ஹிந்து ரிவைவல் எல்லாம்.. அதிகாலை கனவுதான். திப்பு சுல்தான் மணி மண்டபத்தில் நிழலில் அமர்ந்து யோசித்தால் ஏதாவது ஐடியா கிடைத்தாலும் கிடைக்கலாம்.

அமித் ஷாவையும் மோதியையும்.. குஜராத்திலோ தில்லியிலோ.. பெயிலுக்கு அலைய விட்டாலும் விடுவார்கள். நேஷனல் ஹெரால்டெல்லாம் ஒரு கேசு என்று ஊற்றி மூடி விடுவார்ரகள். நீங்கள் தூஃபான் புகழ் அபிஷேக் சங்க்வி, சீக்கியர் கொலை கேஸ் புகழ் சஜ்ஜன் குமார் வரை, எல்லா டீவியிலும் வந்து காமெடி பண்ணுவார்கள். நமக்கு எகானமிக்ஸ் பாடம், வரி கட்டாவிட்டால்.. என்று பசியும், கபில் சிபல் கவிதைகளை நினைத்தால் மட்டும் ஏகத்துக்கும் டர்ர்ர் ஆகிறது. ஷரத் பவாரின் பெண்.. ஆக்க பூர்வமாய் நடவடிக்கைகள் எடுப்போம் என்று ஒரு ஏக்கரில் நூறு கோடி சம்பாதிப்பார். சல்மான் குர்ஷித்தின் ஆங்கிலம் டாப் க்ளாஸ் என்று விசிறிக்கொண்டே சொல்லும் பக்கத்து வீட்டு மாமா, ஆய் துணி மாற்ற.. கலிஃபோர்னியா போய்விடுவார்.

யூபிஏ 3.0 4.0 5.0 ஏன் 6.0 கூட வரலாம். ராகுலுக்கு திருமணம் கூட ஆகலாம். Scam இல்லாமல் நல்ல ஆட்சி தரலாம். ஸ்டேட்டில் உதயநிதி திராவிட பாரம்பரியத்தை கையிலெடுக்கலாம். பாஜக என்ற மதவாத சக்தி எப்படி ஒடுக்கப்பட்டது என்று ஐந்தாம் க்ளாஸ் புத்தகத்தில் எழுதப்படலாம். தேசத்தை எதிர்க்கும் ஒரு தீவிரமான தலைமுறை உருவாகலாம்.

ராமச்சந்திர குஹாவிற்கு புக்கர் பரிசும், அருந்ததி ராய்க்கு அமைதிக்கான நோபல் பரிசும் கிடைக்கலாம். பங்க்ளாதேஷி ஒருவரின் ப்ளாட்டில் நீங்கள் குடியேறும் பாக்கியமும் கூட எங்காவது இந்தியாவில் நடக்கலாம். ராகுல் காந்தியின் பேச்சுத்திறனுக்கு.. Silver tongue brahmin என்று ப்ராமணர்கள் குதூகலித்துக்கொண்டாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.

ஹிந்து டெர்ரில்.. எல்லா சங்கராச்சாரியார்களையும் உள்ளே போடலாம். அதை லைவ் டீவியில் காட்டும் பாக்கியமும் கிடைக்கும். நான் பூணூலை தூக்கி எறிந்தேன் என்று பலர் ஸ்டேடஸ் போடலாம். ஆயிரம் லைக் வாங்கி கொண்டாடி மகிழலாம்.  ராகுல் பெரிய மனசு பண்ணி.. நளினியை விடுதலை பண்ணலாம்.
யூபிஏ 7.0 இல் ராகுலின் வெள்ளைக்கார பையன் வினோதமான ஹிந்தி பேசி கைதட்டல் வாங்கலாம்.

அந்த பொதுகூட்டத்தில்.. குச்சி ஐஸோ, பஞ்சு மிட்டாயோ, பாப்கார்னோ தின்றுவிட்டு.. எவன் ஆண்டால் என்ன என்று ஞாயிறு மதியம் குறட்டை வலிக்கலாம். இதுதான் இதுவரை நடந்தது.. இனிமேலும் இது நடக்கலாம். ஓட்டு மட்டும் போட்டுவிடாதீர்கள். ஆனால் ஜனநாயகம் பற்றி வாய் கிழிய வியாக்கியானம் பேசுங்கள்.

கிர்ர்ர்ர்

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...