Tuesday, 27 November 2018

வில்லன் பாகிஸ்தான் மட்டுமல்ல; காங்கிரஸும் தான்! காங்கிரஸ் துப்பாக்கி தூக்காத பாகிஸ்தானிகள்..!

மிகவும் அவசியமாக அனைவரும் படிக்க வேண்டிய பதிவு..! காங்கிரஸைப் போன்ற ஒரு களவாணிக் கட்சியை இந்த உலகில் எங்குமே பார்க்க முடியாது..!
நன்றி - Venugopalan R  ஜி
__________________________________

26/11 - முதலில் ஒரு நினைவூட்டலை மட்டும் செய்துவிட்டு அமைதியாக இருக்கலாமென்றுதான் யோசித்தேன்; முடியவில்லை.

இரண்டொரு நாட்களுக்கு முன்னால் முன்னாள் உள்துறை அமைச்சரும் ரிகவுண்டிங் எம்.பியுமான ப.சிதம்பரம் திருவாய் மலர்ந்தருளியிருந்தார். அதாவது:

“அமெரிக்கா அபோடாபாத் ஊருக்குள் குதித்து பின் லாடனைப் போட்டுத்தள்ளியதுபோல, ஹஃபீஸ் சயீதை பாகிஸ்தானுக்குள் நுழைந்து அழிக்கிற திறமை நமது ராணுவதுக்கு இல்லை.”

இந்த ஆள் உள்துறை அமைச்சராக இருந்தவர்,

26/11-க்குத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க நமது விமானப்படை தயாராக இருந்தது. ஆனால், அதற்கு மன்மோகன் சிங் தலைமையிலான மண்ணாங்கட்டி அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை என்பதை முன்னாள் விமானப்படைத் தளபதியே கூறியிருக்கிறார். இந்த வெட்கக்கேட்டை முன்னாள் உள்துறைச் செயலர் சிவசங்கர் மேனன் எழுதிய ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் அவரும், ப.சிதம்பரமும் மிகுந்த பெருமிதத்துடன் தெரிவித்துக் கொண்டார்கள். எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோமாம்; ரொம்ப நல்லவங்களாம் நாம்.

இந்த கேடுகெட்ட காங்கிரஸிடம் மீண்டும் ஆட்சியைக் கொடுத்தால், மீண்டும் மீண்டும் சித்து போன்ற லூசுகளை பாகிஸ்தானுக்கு அனுப்பி,  அவிடத்து ராணுவ தளபதியைக் கட்டிப்பிடித்துப் போஸ் கொடுக்க வைப்பார்கள் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

அஜ்மல் கஸப் உயிருடன் பிடிபடக்கூடாது என்பதே பாகிஸ்தானின் திட்டமாக இருந்திருக்கிறது. ஆனால், ஹவல்தார் ஓம்ப்ளேயின் சாகசாத்தால் அவன் பிடிபட்டான்; குட்டு உடைபட்டது. வயர்லெஸ் சம்பாஷணைகள் கிடைத்தன; வாக்குமூலம் கிடைத்தது. அவன் பாகிஸ்தானி என்பதற்கான நிரூபணமும் கிடைத்தது. போதாக்குறைக்கு டேவிட் ஹெட்லியை அமெரிக்காவில் பிடித்ததும் மொத்தத் திட்டமும் வெளிவந்தது.

மன்மோகன்சிங் அரசு பாகிஸ்தானுக்கு டோஸியர் மேல் டோஸியர் அனுப்பிக்கொண்டிருந்தது; பாகிஸ்தான் ‘பத்தாது; பத்தாது’ என்று எகத்தாளம் செய்து கொண்டிருந்தது. இந்த அவலம் போதாதென்று காங்கிரஸின் கழுதைப்படைத் தலைவரான திக்விஜய் சிங், “26/11 தாக்குதல் ஆர்.எஸ்.எஸ் மேற்கொண்டது,” என்று புரளி கிளப்பிக் கொண்டிருந்தார்.  ‘தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஹேமந்த் கர்கரே தொலைபேசியில் தன்னிடம் தெரிவித்ததாக புளுகினார். இந்தப் புளுகுகள் இத்தோடு நின்றதா என்றால் இல்லை.

’ராஷ்ட்ரிய சஹாரா” என்ற உருதுப் பத்திரிகையின் ஆசிரியர் அஜிஸ் பர்னி என்பவர் ஒரு புத்தகம் எழுதினார். தலைப்பு: 26/11 – ஆர்.எஸ்.எஸ்.கீ சாஜிஷ்? (26/11 – ஆர்.எஸ்.எஸ்.சதியா?)

மேற்படிப் புத்தகத்தை வெளியிட்டது யார் தெரியுமா? சாட்சாத் திக்விஜய் சிங்தான்! அந்தக் கூட்டத்தில் பேசிய இன்னொரு பிரபலம் யார் தெரியுமா? பிரபல இயக்குனர் மகேஷ் பட்! ஆம், நடிகை ஆலியா பட்-ன் அப்பாவேதான். அவருக்கும் 26/11-க்கும் என்ன தொடர்பு?

டேவிட் ஹெட்லீயின் மும்பை விஜயத்தின்போது அவன் ஏற்படுத்திக்கொண்ட பல தொடர்புகளில் மகேஷ் பட் மகன் ராகுல் பட் ஒருவராக இருந்தார். ஹெட்லியின் வாக்குமூலத்துக்குப் பிறகு தற்போது விசாரணை வளையத்தில் சிக்கி கடந்த ஜனவரி மாதம் கூட ஆஜர் ஆகியிருக்கிறார். இப்போது புரிந்ததா மகேஷ் பட் அந்தப் புத்தக வெளியீட்டுக்கு எதற்கு வந்தார் என்று?

26/11-ஆர்.எஸ்.எஸ். சதியா? புத்தகத்தின் பி.டி.எஃப் படிக்க நேர்ந்தது. அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு, அதற்கு மேல் ஒன்று உண்டென்றால் அது அஜீஸ் பர்னி புளுகு என்று சொல்ல வேண்டியதுதான். அந்த அளவுக்கு பா.ஜ.கவும் ஆர்.எஸ்.எஸ்-ம் சேர்ந்து 26/11 தாக்குதலுக்குப் பின்புலமாக இருந்து செயல்பட்டார்கள் என்று அடித்துக் கூறியிருந்தார். ‘அட போங்கய்யா, உங்க ஆளுங்களே தாக்குதல் பண்ணினது உள்ளூர்க்காரன்னு சொல்றாங்க, எதுக்குய்யா எங்களைக் கேக்குறே?” என்று அப்போதைய பாகிஸ்தான் அரசு நக்கலடித்தது நம்மைப் பார்த்து. மன்மோகன்சிங் அரசுக்குத்தான் வெட்கம், மானம், சூடு,சொரணை எதுவுமே கிடையாதே? வாரா வாரம் ஒரு டோஸியரை பாகிஸ்தானுக்கு அனுப்பிவிட்டு ‘முடிஞ்சது சோலி’ என்று தனது முக்கியப்பணியான ஊழலில் சளைக்காமல் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.

மே 12,2018! பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீஃப் உண்மையை ஒப்புக் கொள்கிறார்: நம்  நாட்டிலிருந்து மும்பைக்கு எல்லைதாண்டிப்போய் நூற்றுக்கணக்கானவர்களைக் கொல்வதை நாம் அனுமதிக்கலாமா? அந்த விசாரணை ஏன் இன்னும் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது?”

அவ்வளவுதான்! ‘26/11-ஆர்.எஸ்.எஸ்.கீ சாஜிஷ்?’ புத்தகத்தை ஊர் ஊராகப் போய் வெளியிட்டுக்கொண்டிருந்த திக்விஜய்சிங் வாயில் பூட்டு போட்டதுபோல மவுனமானார். சரி, இந்த ஆசாமியை அருகில் வைத்துக் கொண்டிருந்தால் மத்தியப் பிரதேசத் தேர்தலில் ஜெயித்த மாதிரிதான் என்று காங்கிரஸுக்கே ஞானோதயம் வந்து ஓரங்கட்டினார்கள். ஆர்.எஸ்.எஸ். மீதும் பா.ஜ.க மீதும் அவதூறு பரப்பிய அஜீஸ் பர்னியும் ‘யாரையும் புண்படுத்துவது எனது நோக்கமில்லை,’ என்று வெண்ணைத்தனமாக ஒரு விளக்கமளித்து விட்டு ஒளிந்து கொண்டார். அவரது நோக்கம் என்னவென்றுதான் நாட்டுக்கே தெரிந்து போயிருந்ததே? எப்படியாவது பாகிஸ்தானை மிகவும் அப்பாவி என்று நிரூபித்து, பழியை ஆர்.எஸ்.எஸ். மீது போட வேண்டும் என்பதுதானே திட்டம்?

ஆர்.எஸ்.எஸ்.மீது பழிபோடுவது காங்கிரஸுக்குப் புதிதா என்ன? மேடைக்கு மேடை ‘காந்தியைக் கொன்றது ஆர்.எஸ்.எஸ்.தான் என்று பேசிய பப்பு, சமீபத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகி ‘இல்லை, காந்தியைக் கொன்றது ஆர்.எஸ்.எஸ்.இல்லை; தெரியாமல் சொல்லிவிட்டேன்,’ என்று வாக்குமூலம் அளிக்கவில்லையா?

காங்கிரஸ் முக்த் பாரத் என்று மேடைக்கு மேடை மோடி சொல்வது இதற்குத்தான். தேவைப்பட்டால் நாட்டை பாகிஸ்தானுக்கே எழுதி வைக்கவும் தயங்காத ஐந்தாம்படைகள் காங்கிரஸ்காரர்கள்.

26/11-ன் வில்லன் பாகிஸ்தான் மட்டுமல்ல; காங்கிரஸும் தான்! காங்கிரஸ் துப்பாக்கி தூக்காத பாகிஸ்தானிகள்..!

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...