Friday, 19 October 2018

மத்திய அரசு ஆட்சிக்கு வந்தவுடன் நதி நீர் இணைப்புக்கு ஆராய நிதி ஒதுக்கப்பட்டது

மத்திய அரசு ஆட்சிக்கு வந்தவுடன் நதி நீர் இணைப்புக்கு ஆராய நிதி ஒதுக்கப்பட்டது ,, அவை 8 குழுக்களாக செயல்பட்டன,, செயல்பட்ட குழுக்கள் அறிக்கை கொடுத்துள்ளது

ஆய்வுக்குப் பின் 30நதிகளை இனைக்க முடியும் .. அதற்க்கான சாத்தியக் கூறுகள் உள்ளன என மத்தியரசிடம் ஆய்வறிக்கையை தாக்கல் செய்துள்ளது

இமாலயத்திலிருந்து குமரி வரை ஓடும் இந்தியாவின் ஜீவ நதிகளை இணைப்பது குறித்த பூர்வாங்க முடிவுகளுக்கு இப்போது தான் வந்துள்ளது இந்திய அரசு. நாட்டின் நதிகளை இணைத்துவிட்டால் விவசாயமும், பொருளாதாரமும் தழைத்தோங்கும் 

இமாலயத்த பிறப்பிடமாக கொண்டிருக்கும் கோசி, காக்ரா, கங்கா, யமுனா,மானஸ், சாரதா, தீஸ்தா உள்ளிட்ட 14 ஆறுகளையும், தென்னிந்தியாவின் கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, பாலாறு, பெண்ணாறு உள்ளிட்ட 16 ஆறுகளையும் இணைப்பதற்கான வழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மகாநதி-கோதாவரி நதிகளையும், கோதாவரி-கிருஷ்ணா நதிகளையும் இணைக்க முடியும். கோதாவரி-கிருஷ்ணா நதிகளை மூன்று இடங்களில் இணைக்க முடியுமென்றும் ஆய்வறிக்கை கூறியிருக்கிறது. ஸ்ரீசைலத்தில் கிருஷ்ணா நதியுடன் பெண்ணாறு நதியையும், சோமசீலம், கிராண்டு, அனிகட் பகுதியில் பெண்ணாறு-காவிரி நதிகளையும் இணைக்க முடியும். கட்டளை மற்றும் குண்டாறு ஆகியவற்றுடன் காவிரி-வைகை ஆறுகளை இணைக்க முடியும். மேலும் பம்பா-அச்சன்கோவில்-வைப்பாறு, நேத்ராவதி-ஹேமாவதி, பேட்தி-வாரதா ஆறுகளின் இணைப்புக்கும் சாத்தியம் இருப்பதாக தெளிவுபடுத்தியது அந்த ஆய்வறிக்கை.

மேற்சொல்லப்பட்ட அனைத்து நீர் வழிகளும் கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் உயரத்தில் இருக்கிறது என்றால், எவ்வளவு ஆராய்ச்சிகளுக்கு பிறகு இதன் வடிவமைப்பு திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது என்பது உங்களுக்கு புரியும்.

நதிநீர் இணைப்புத் திட்டத்தால் கிடைக்கும் பலன்கள்:
------------------------------------------------------------------------------
1) வெள்ள அபாயத்தை கட்டுப்படுத்தக்கூடியது.

2) 3.5 ஹெக்டேர் விவசாய பாசன நிலங்களுக்கு கூடுதலான தண்ணீரை பயன்படுத்த முடியும்.

3) 14 கோடி ஹெக்டேராக இருக்கும் சாகுபடி நிலப்பரப்பை 17.5 கோடி ஹெக்டேராக அதிகரிக்க முடியும்.

4) நாட்டில் உள்ள எந்த மாநிலமும் வறட்சியால் பாதிக்கப்படாது.

நீர்ப்பெருக்கு இல்லாத அல்லது வற்றிய ஆறுகளை உயிர்ப்பிக்க முடியும்.

5) ஆற்றங்கரையில் வசிக்கும் மீனவர்களின் பொருளாதாரம் மேம்படும்.

6) 10 மீட்டர் ஆழமும் 120 மீட்டர் அகலமும் கொண்ட நீர்வழிச்சாலைகள் கட்டமைக்கப்படும்.

7) நீர்வழிப்பாதைகள் மூலம் உள்நாட்டு வணிகமும், சுற்றுலா துறையும் வளம் கொழிக்கும்.

8) வாகனப் போக்குவரத்து குறைவதன் மூலம் 90% எரிபொருளை சேமிக்கலாம்.

9) 50 மில்லியன் பொது மற்றும் தொழிற்சாலை சார்ந்த மக்களுக்கு தடையின்றி தண்ணீர் கிடைக்கும்.

10) தண்ணீரின் உவர் தன்மையை குறைக்கலாம்

11) சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்கலாம்.

12) 3 கோடி மெகாவாட் மின்சாரத்தை ஹைட்ரோ பவர் மூலம் உற்பத்தி செய்ய முடியும்.

மாற்றுக் கருத்துகள்:
-------------------------------
1. நதிநீர் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த தோராயமாக பத்து லட்சம் கோடி ரூபாய் நிதி தேவைப்படும்.

2. வட-தென் நதிகளை இணைப்பதற்கு 15 ஆயிரம் கிலோ மீட்டர் அளவுக்கு கால்வாய் தோண்ட வேண்டும்.

3. இதன் மூலம் 17,500 கன மீட்டர் தண்ணீர் கூடுதலாக கிடைக்கும் என்றாலும், கால்வாய் தோண்டும் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்விடங்களை பறிக்க நேரிடும்.

4. நதியின் இயற்கைச் சூழல் பாதிக்கப்படும்.

5. கங்கை நதியில் அணை கட்டுவதால், இமயமலைக் காடுகளுக்கு இந்த அணைகள் பெரிய ஆபத்தாக அமையும்.

6. இத்திட்டம் பருவமழைப் பொழிவுகளை பாதிக்கக்கூடும்.

நதி நீர் இணைப்பு திட்டம் செயல்படுத்தும் போது போது சில மக்கள் வீடுகளை இழக்க நேரிடும் ,, அதையே அரசியல்வாதிகள் துருப்பு சிட்டாக எடுத்து கொண்டு போராட்டம், உண்ணாவிரதம் என்று ஆரம்பித்து விடுவார்கள்   

நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதில் இவ்வாறான மாற்றுக் கருத்துக்களும், அச்சுறுத்தல்களும் நிலவுவதால் தான் மத்திய அரசு, இத் திட்டத்தை செயல்படுத்த தயங்குகிறது.

மேலும் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் சர்வதேச அரசியலும் அடங்கியிருக்கிறது. வெளிநாடுகள் இத்திட்டத்தை செயல்படுத்த விடாது ,, உள்ளூர் அரசியல் வாதிகளை வைத்து தூண்டி அதை கெடுக்க நினைக்கும்

எனவே நதிகளை இணைப்பதற்கு பதிலாக இப்போதுள்ள நதிகளின் தண்ணீரை சிக்கனமாகவும், பயன்பெறும் வகையிலும் உபயோகிக்கும் உத்திகளை முதலில் கையாள வேண்டும். அந்தந்தப் பகுதிக்கு ஏற்ற பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும். சொட்டுநீர் பாசனத்தை ஊக்குவிக்கவேண்டும். ஏரிகளில் தண்ணீரை தேக்கிப் பயன்படுத்தும் பழையகால பாசன முறையை ஊக்குவிக்க வேண்டும். ஏராளமான குளம், குட்டை போன்ற நீர்நிலைகளை உருவாக்கி மழை நீரை சேகரிக்க வேண்டும் என்றெல்லாம் மத்திய அரசு நினைக்கிறது. ஆனால் நடந்துகொண்டிருப்பதோ வேறு.

நிலம் கையக படுத்தி தந்தால் நதிகளை இணைத்து தருகிறேன் என்று மோடி கூறினார், அந்த திட்டத்தின் படி, கடந்தாண்டு பட்டீசீமா நதிநீர் இணைப்புத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டியது ஆந்திர அரசு.

173 நாட்களில் 174 கி.மீ. தொலைவுள்ள கால்வாய் தோண்டப்பட்டு, கோதாவரி ஆற்றின் நீரை பகிர்ந்தளித்து  ராயலசீமா மாவட்ட வறட்சி போக்கப்பட்டது. இத்திட்டத்தில் 24 பிரமாண்ட பம்ப்புகள் பயன்படுத்தப்பட்டன. ஆந்திராவின் இந்த பம்ப் ஹவுஸ்தான் ஆசியாவிலேயே மிகப்பெரிய பம்ப் ஹவுஸ் ஆகும். சமீபத்தில் இந்த சாதனை திட்டமானது லிம்கா புத்தகத்திலும் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு மாநிலத்தின் குறிப்பிட்ட பகுதியில் நிறைவேற்றப்பட்ட நதி நீர் இணைப்புத் திட்டமே சாதனை படைத்தது என்றால், ஒரு நாடு தழுவிய நதிநீர் இணைப்புத் திட்டம் பலன் கொடுக்காமல் போய் விடுமா? சர்வதேச அரங்கில் சாதனை படைக்காமல் போய் விடுமா?

குஜராத்தில் நதிகளை இணைக்கும் போது எவ்வளவு பிரச்சனைகள் , மத்திய அரசு சுத்தமாக ஒத்துழைப்பு இல்லாமல்,சமூக ஆர்வலர் என்ற போர்வையில் அலையும் " மேத்தா பட்கர் " போன்ற துரோகிகளை  வைத்து கொண்டு அந்த திட்டத்தை முழுவதுமாக எதிர்த்தது , அதை எல்லாம் தாண்டி நதிகளை இணைத்து காட்டியவர் மோடி , அதனால் கண்டிப்பாக நதியை இணைத்து காட்டுவார்  என்று உறுதியாக கூறலாம் , 

இந்த 30 நதிகளை இணைத்தால் தண்ணீர் பஞ்சமின்மை சாத்தியமே!

இமாலயத்திலிருந்து குமரி வரை ஓடும் இந்தியாவின் ஜீவா நதிகளை இணைப்பது குறித்த பூர்வாங்க முடிவுகளுக்கு இப்போது தான் வந்துள்ளது இந்திய அரசு

விரைவில் நதி நீர் இணைப்பு சாத்தியமே!!

இதற்கு நான் என்ன செய்யனும்.

இதில் உள்ள நன்மைகளை படித்தவர்களுக்கு பரப்பி படிக்காத பாமரர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

(நான் செய்து விட்டேன்..நீங்கள் செய்வீர்களா!!!)

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...