சபரிமலையில் உச்சநீதி மன்றம் தீர்ப்பு சொல்லி விட்டது அதனால் வேறு வழியே இல்லை உடனே அதை கேரள அரசு அதை நிறைவேற்றிதானே ஆக வேண்டும் வேறு என்ன செய்ய முடியும் என்று கேட்பவர்களுக்கு இந்த பதிவு.
கேரளாவில் ஒரு வழக்கு. ஒரு சர்ச் யாருக்கு சொந்தம் என்று இரண்டு பிரிவுகளுக்குள் தகராறு வந்தது. சிரியன் ஆர்த்தடாக்ஸ் மற்றும் ஜாக்கோபைட் என்று இரு பிரிவும் சுப்ரீம் கோர்ட் வரை சென்று ஆர்த்தடாக்ஸ் பக்கம் தீர்ப்பு ஆகி விட்டது.
ஆனால் இது பொறுக்காத ஜாக்கோபைட் தரப்பு லட்சம் பேரை கூட்டி ஒரு பேரணி நடத்தி காட்டியது.
இதெல்லாம் எப்பொழுதோ நடந்தது இல்லை. இதோ சென்ற ஜூலை மாதத்தில்தான்.
அந்த தீர்ப்புக்கு இதே பிணராயி அரசு என்ன சொன்னது தெரியுமா ? இப்பொழுது சொல்வது போல் என்ன ஆனாலும் சரி நிறைவேற்றியே தீருவோம் என்று மார் தட்டவில்லை.
பின் என்ன செய்தது ? இது மிக உணர்ச்சி பூர்வமான விஷயம். எந்த தரப்பும் பாதிக்காமல் இருக்க வேண்டும். உடனே தீர்ப்பை அமல்படுத்தினால் பலர் தற்கொலை செய்து கொள்ளக் கூடும். எனவே இதை பேசி சுமுகமாக தீர்க்கிறோம். உடனே உத்தரவை அமல் செய்ய சொல்லாதீர்கள் என்று அவகாசம் கேட்டுள்ளது.
லாட்டியால் அடித்து துரத்தி தீர்ப்பை அமல் செய்ய அவர்கள் என்ன ஹிந்துக்களா. ஒரு கண்ணில் வெண்ணை. ஒரு கண்ணில் சுண்ணாம்பு.
#SaveSabarimala
No comments:
Post a Comment