கூட இருப்பவர்களே குழி பறிக்கும் நிலை.
--- உடனிருக்கும் கட்சிக்காரர்களானாலும் சரி,
--- உத்தரவை நிறைவேற்ற வேண்டிய அதிகாரிகளானாலும் சரி,
--- சுதந்திரமாக செயல்பட்டு, வழக்கு தொடர வேண்டிய புலனாய்வு அமைப்புகளானாலும் சரி, --
கூட இருப்பவர்களே, நேர்மைக்கு, குழி பறிக்கும் நிலை உள்ளது.
.
.
முந்தைய அதிகார வர்க்கத்திடம் பெற்ற முறைகேடான உதவிகளுக்கு நன்றி விசுவாசம்,
ஜூனியராக இருக்கும்போது சீனியர்கள் கொள்ளையடித்ததைப் பார்த்து தானும் சீனியரானால் கொள்ளையடிக்கலாம் என்று கண்ட கனவுகள் பொய்த்ததால், ஏற்பட்ட கோபம்,
ஷண நேர சபலத்தால், “ஹனி டிராப்”, எனப்படும் பிளாக் மெயிலில் சிக்கி தவிக்கும் அவலம்,
ஒழுக்கமின்மையை பெருமையாக எண்ணும் அன்னிய அனாச்சார அடிமைத்தனம், ----
என்று, பல்வேறு வகைகளில், சீரழிந்து நிற்பவர்களையும் வைத்துக் கொண்டுதான், அரசு இயந்திரத்தை, நடத்திச் செல்ல வேண்டியிருக்கிறது.
,
,
சூழ்ச்சிக்காரர்களின் சதி வலைகளுக்கு, நடுவில்தான், மோடிஜி பணியாற்ற வேண்டியுள்ளது.
.
“அதை ஏன் செய்யவில்லை?
இதை ஏன் செய்யவில்லை?
அவனைத் தூக்கி ஏன் உள்ளே போடவில்லை?
இவனைத் தூக்கி ஏன் உள்ளே போடவில்லை? டீமானிட்டைசேஷனில், ரெட்டிக்கு எப்படி புது நோட்டு கிடைத்தது?
நீரவ் எப்படி தப்பி ஓடினான்?”, -- கேள்விகள் கேட்பது எளிது.
.
.
லட்சக்கணக்கான வங்கி கிளைகளில்,--
புது நோட்டை வழங்கும் வேலையையும், பழைய நோட்டை வரவு வைக்கும் வேலையையும், நேர்மையுடன் செய்வதற்கு, --
மோடிஜியேதான், நேரில் வர வேண்டுமென்றால், --
அவரொன்றும், ராஜகிரீடை நடத்திய ஸ்ரீகிருஷ்ணர் அல்ல.
.
மிரட்டியோ, கமிஷன் தந்தோ, நோட்டு மாற்ற மோசடி செய்த அயோக்கியர்களையும்,
அதற்கு உடன்பட்ட வங்கி அலுவலர்களையும் விட்டுவிட்டு, --
மோடிஜியை குறை சொல்வோர், மனிதர்கள் எனும் இனத்தில், சேரத் தகுதியானவர்கள் அல்ல.
.
இது ஒரு சிறு எடுத்துக்காட்டுதான்.
.
இதுபோல, அங்கிங்கெனாது நிலை கொண்டிருக்கும், எண்ணற்ற தீவினையாளர்களின் டிசைன்டிசைனான சூழ்ச்சிகளின் மத்தியில்தான், --
மோடிஜி தேசத்தை, தூய்மையானதாகவும், வளம் மிக்கதாகவும் மாற்ற அரும்பாடு படுகிறார்.
.
.
அமைச்சரவையிலும், சொந்த கட்சியிலும், அதிகார வர்க்கத்திலும், நீதித் துறையிலும் கருப்பாடுகளும், குள்ள நரிகளும், ஓநாய்களும் ஊடுருவியிருப்பதாக, பலர் கருதுகிறார்கள்.
.
.
அமித்ஷாஜி போன்ற இலக்குவனுடன், --
பியுஷ் கோயல், சுரேஷ் பிரபு போன்ற சில சுக்ரீவன்களும்,
அஜித் குமார் தோவல் போன்ற அஞ்சனா தேவி குமாரனும்,
மோடிஜிக்கு உறுதுணையாய் நிற்பதால், --
“சப் கா சாத் சப் கா விகாஸ்”, முடங்காமல், நடந்தேறுகிறது.
.
.
சிபிஐ எனும் புலனாய்வு அமைப்பை, முடக்கிப்போட நினைத்த கருங்காலிகளின் சதிவலை, தோவல்ஜியால் அறுத்தெறியப்பட்டது.
இறையருள், அவருடன் என்றும் நிலவட்டும்.
.
"ஒளிந்து மறைந்து, புல்லுருவிகளும், கருங்காலிகளும், எதை வேண்டுமானாலும் நிரைவேற்றிக் கொள்ள முடியும்" எனும் நிலைக்கு, அபாய சங்கொலி எழுப்பப்பட்டு விட்டது.
"அவர்கள் கவனிக்கப்படுகிறார்கள்", எனும் எச்சரிக்கை வெளியிடப்பட்டுவிட்டது.
.
“புலனாய்வை முடக்கிவிட்டோம்”, என்று இறுமாந்திருந்தவர்கள், --
தோவல்ஜியின், நள்ளிரவு சர்ஜிகல் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை;
அதனால், புலம்பல் சத்தம் அதிகமாகவே கேட்கிறது.
.
டீமானிட்டைசேஷன் முதல், சர்ஜிகல் ஸ்ட்ரைக், தற்போதைய சிபிஐ பிரச்னைக்கான அதிரடி நடவடிக்கை போன்றவை உட்பட, அஜித் குமார் தோவல்ஜியின் உறுதுணை பங்களிப்பு, மகத்தானது.
.
“தெய்வம் நமக்குத் துணை பாப்பா! ஒரு தீங்கு வரலாகாது பாப்பா!”, எனும் பாரதியின் ஆறுதல் வரிகள், நினைவுக்கு வருகிறது.
.
.
உயர்நிலையை எட்டினாலும் கறைபடாத கரங்களுடன், தர்மத்தின் வழியில், உடனிருந்து உதவும் அதிகாரிகள், நம் நன்றிக்குரியவர்கள்.
.
“தேசமும் தெய்வமும் ஒன்றே”, என்று பணியாற்றும், எண்ணற்ற இடைநிலை, கீழ்நிலை ஊழியர்களும், பொது மக்களும், வானர சேனைபோல தர்மத்தை புரந்தருளுகிறார்கள்.
.
பிரதிபலன் பாராத, சக யோக்கியர்கள், அனைவரும், நம் வணக்கத்துக்குரியவர்கள்.
.
.
லோக ஷேமத்துக்காக, அனு தினமும், நெருப்பாற்றில், நீந்தும் மோடிஜிக்கு, நன்றிகள் உரித்தாகுக.
.
நம்மால், இயன்றது, ஓய்வறியாமல் உழைக்கும் ஸ்வயம் சேவக்கின் பூரண நலத்துக்கும், வெற்றிக்குமான பிரார்த்தனைகளே!
பிரார்த்திப்போம்.
.
.
தெய்வம் நிகர் குழந்தை அணிவிக்கும் ரக்ஷையைப் போல, நம் பிரார்த்தனைகள், மோடிஜியையும், பாரதத்தையும் காக்கட்டும்.
.
ஜெய் ஹிந்த்!
தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
ஜெய் ஸ்ரீராம்!!
No comments:
Post a Comment