ரூ.500, ரூ.1,000 ஆகிய ரூபாய் நோட்டுக்களை மதிப்பு நீக்கம் செய்யும் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி அறிவித்தார்.
* பணமற்ற ஊதிய பரிவர்த்தனையை ஏற்படுத்தும் வகையில் 50 லட்சம் புதிய வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளன.
* வருமான வரி கணக்கு தாக்கல் எண்ணிக்கை 29.17 சதவீதம் அதிகரித்துள்ளது.
* அதிக அளவு பணத்தை செலுத்திவிட்டு கணக்கு தாக்கல் செய்யாத 3 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 2.1 கோடி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
* பினாமி சொத்து சட்டம், கருப்பு பணம் மற்றும் வரிவிதிப்பு சட்டம், வருவாயை தாமாக முன்வந்து தெரிவிக்கும் சட்டம் போன்றவைகள் அறிமுகம்.
* மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதற்கு ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment