* பெண் குழந்தைகள் நலன் மற்றும் அவர்களது எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்யும் பிரதமர் சுகன்யா சம்ரிதி யோஜனா என்ற சேமிப்பு திட்டத்தின் கீழ் 1.26 கோடிக்கு மேல் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் மாதம் வரை ரூ.19 ஆயிரத்து 183 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
* வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் பிரதமர் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 2016-17-ல் 3.31 கோடிக்கும் அதிகமான புதிய இணைப்புகளும், 2017-18-ல் 2.82 கோடிக்கும் அதிகமான புதிய இணைப்புகளும் வழங்கப்பட்டன.
* பணியில் உள்ள பெண்கள் தங்கள் குழந்தைகளை முறையாக கவனித்துக் கொள்ள 6 மாத பிரசவ கால விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
* பிரதமர் சுரக்ஷித் மாத்ரிதவா அபியான் திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் 9-ந்தேதி தரமான மருத்துவ சிகிச்சை இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட அதிக அபாயம் நிறைந்த கர்ப்ப சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment