Thursday, 29 November 2018

ஒரு வெளிநாட்டுவாழ் இந்தியரின் பதிவு இது.

ஒரு வெளிநாட்டுவாழ் இந்தியரின் பதிவு இது.

நான் இங்கிலாந்தில் வசிக்கும் ஒரு இந்தியன்.

எனது சம்பளம் 61000 பவுண்டு, வருமான வரி இல்லாமல். இந்திய பண மதிப்பில், என் சம்பளம் என்பதால் பெருக்க, 48,80,000/-

நான் என் சம்பளத்தில் 40 % வரி கட்டுகிறேன். அதாவது 19,52,000/-, மீதி என் கையில் இருக்கும் தொகை, 29,28,000/-

அதன் பிறகு, மாத வாடகை, 700 பவுண்டு மாதம், 140 பவுண்டு கவுன்சில் வரி, கேஸ் மற்றும் மின்சாரத்திற்கு மாதம் நூறு பவுண்டு. வருடத்திற்கு 500 பவுண்டு, தண்ணீர் பில். கார் காப்பீடுக்கு வருடம் ஆயிரம் பவுண்டு, வருடத்திற்கு ரோடு வரி 250 பவுண்டு. (இங்கிலாந்தில் காப்பீடு எடுக்காமல், ரோடு வரி கட்டாமல் கார் ஓட்ட முடியாது)ஆக மொத்தம், 18750 X 80 = 13,44,000/- இந்திய பண மதிப்பில்.

மீதமுள்ள 29,28,000 - 15,85,000 = Rs. 13,44,000/-

இந்த வரிகள் எல்லாமே, யாரும் குறைக்க முடியாது, அனைத்து மக்களும் கட்ட வேண்டும். வருமான வரி மட்டும் கட்டுபவர்கள் 40% பேர்.

கேஸ் மற்றும் மின்சார வரி, பயன்பாட்டை பொருத்து மாறும், ஆனால், அனைவரும் கட்ட வேண்டும்.

இதோடு, அன்றாட செலவான, உணவு, பெட்ரோல், மொபைல், வை பை அனைத்தும், இந்தியாவை விட விலை கூட.

இதனால்தான், இங்கிலாந்து, இந்தியாவை விட பெஸ்ட். நல்ல சுத்தமான சாலை. இருபத்திநான்கு மணி நேரம் மின்சாரம், தண்ணீர். நல்ல அரசு பள்ளி. இது அடிப்படை மட்டுமே. சொத்து வரி, சொத்தை விற்றால் வரும் மூலதன வரி, இதை எல்லாம் சேர்க்க வில்லை.

இங்கிலாந்து, அன்றாட தேவையான பொருள்கள், உணவு, உடை, பெட்ரோல் எல்லாமே, இங்கு இறக்குமதிதான்.

இங்கிலாந்தின் அளவு, நம் நாட்டு உத்தர பிரதேச அளவுதான். மக்கள் தொகையும், அதில் மூன்றில் ஒரு பங்குதான்.

இந்தியாவில் எல்லா வளங்களும் உள்ளன. உணவு மற்றும், உடை இறக்குமதி செய்து சாப்பிடும் கட்டாயம் கிடையாது.

மொத்த மக்கள் தொகை 130 கோடி. வரி கட்டுபவர்கள் - 3.75 கோடி. மொத்த மக்கள் தொகையில் மூன்று சதம் கூட கிடையாது. அதுவும், அரசு ஊழியர்கள் மட்டுமே, அவர்களால் தங்கள் வருமானத்தை மறைக்க முடியாது.

இந்த 130 கோடி மக்களும், நல்ல குடிநீர் வசதி, மின்சாரம், ரோடு, மருத்துவமனை, பள்ளி, சூப்பர் பாஸ்ட் ட்ரைன் மலிவாக எதிர்பார்க்கிறோம்.

கொஞ்சம் உட்கார்ந்து யோசித்தால், லோக்கல் மளிகை கடை, பால் சில்லறை விற்பனையாளர்கள், ஸ்வீட் கடை, துணி கடை, மொபைல், கம்ப்யூட்டர் ரிப்பேர் செய்பவர்கள் எவ்வளவு பேர், உங்களுக்கு பில் தருகிறார்கள் ?

அரசு வேலை பார்ப்பவரை விட, நன்கு சம்பாதிக்கும் பிசினஸ் மக்களை பாருங்கள்!

கரோல்பாக், சவாரி பஜார், மற்றும் டெல்லி, மும்பையில் உள்ள இந்த ஏரியா கடையில் நீங்கள் பில் வாங்க முடியுமா? ஒரு இன்வாய்ஸ் கூட வாங்க முடியாது.

ஆனாலும், நாம், நல்ல ரோடு இல்லை, ஏர்போர்ட் இல்லை, ரயில்வே நிலையம், பஸ் நிலையம் இல்லை என்று அரசை குறை கூறி கொண்டிருக்கிறோம்.

அதனால், யூரோப்பில் அப்படி இல்லை, இங்கு அப்படி இல்லை என்று குறை சொல்லாதீர்கள்.

இது ஜனநாயக நாடு என்பதால் வசதியாக நாம் அரசை குறை சொல்கிறோம்.

குறை சொல்வது உங்கள் உரிமை.

அதற்கு முன், வரியை கட்டி விட்டு, அரசை குறை பேசுங்கள்.

இந்த கருப்பு பணத்தை ஒழிக்க கொண்டு வந்ததே GST.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...