Friday, 7 December 2018

டெல்லி–வாரணாசி இடையே ‘டிரைன் 18’ அதிவேக ரெயில்*

*🚄டெல்லி–வாரணாசி இடையே ‘டிரைன் 18’ அதிவேக ரெயில்*

25– ந் தேதி முதல் இயக்கப்படும்

ஐசிஎப் பொது மேலாளர் மணி தகவல்

சென்னை, டிச.3–

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘டிரைன் 18’ ரெயில் டிசம்பர் 25–ம் தேதி முதல் டெல்லி–வாரணாசி இடையே இயக்கப்படும் என ஐசிஎப் பொது மேலாளர் மணி அறிவித்துள்ளார்.

சென்னை, பெரம்பூர் ஐசிஎப் தொழிற்சாலையில் ‘டிரைன் 18’ ரெயில் ரூ.180 கோடி செலவில் தயாரிக்கப்பட்டது. என்ஜின் இல்லாமல் தயாரிக்கப்பட்ட இந்த ரெயிலில் இழுவை வேகத்திறன் கொண்ட 16 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

சோதனை ஓட்டம்

டிசம்பர் 25–ம் தேதி முதல் டெல்லி–வாரணாசி இடையே இந்த ரெயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புது டெல்லியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ரெயில் மதியம் 2 மணி அளவில் வாரணாசி சென்றடையும். மீண்டும் மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு டெல்லி சென்றடையும்.

இந்த ரெயிலின் சோதனை ஓட்டம் ராஜஸ்தானில் உள்ள கோட்டா - சவாய் மாதோபூர் இடையே இயக்கப்பட்டது. அப்போது மணிக்கு 180 கி.மீ தொலைவு வேகத்தில் அதிவேகமாக இந்த ரெயில் பயணம் செய்தது.

200 கிமீ வேகத் திறன்

இதுகுறித்து ஐசிஎப் பொது மேலாளர் எஸ்.மணி கூறியதாவது:–

‘டிரைன் 18’ ரெயில் இந்தியாவின் அதிவேக ரெயிலாக இருக்கும். அதற்கான முக்கிய சோதனை ஓட்டம் முடிந்து விட்டன. இன்னும் சில சோதனைகள் மட்டுமே மீதமுள்ளன. தேவைப்பட்டால் இந்த ரெயிலில் சிறிய மாற்றங்கள் செய்யப்படும். இந்த ரெயில் மணிக்கு 200 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய திறன் கொண்டது. அதிவேக ரெயிலான சதாப்தி ரெயிலை விட இந்த ரெயிலின் பயண நேரம் 15 சதவீதம் குறைவாக இருக்கும். தவிர, சதாப்தி ரயிலில் பயணிக்கும் பயணிகளின் அளவை கொண்டது. எனவே, அனைத்தும் சோதனைகளும் முடிந்த பிறகு சதாப்தி ரயிலுக்கு மாற்றாக இந்த ரெயில் இயக்கப்படும்.

மேலும் 4 ரெயில்

நடப்பு நிதியாண்டில் ஐசிஎப் தொழிற்சாலை மற்றொரு‘டிரைன் 18’ரெயிலை வெளியிடவுள்ளது. அடுத்த நிதியாண்டில் மேலும் 4 ரெயிலை வெளியிடவுள்ளது.

தொழில்நுட்ப வசதி, எரிபொருள் சேமிப்பு, என்ஜின் இல்லாத அம்சங்களை கொண்ட இந்த ரெயிலை கடந்த அக்டோபர் 29–ம் தேதி ரெயில்வே வாரியத்தின் தலைவர் அஷ்வாணி லொகானி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

குளிர்சாதன வசதி, நவீன தொழில்நுட்ப வசதி, பாதுகாப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த ரெயிலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

.                      🦅Ⓜ🦅
*_┈┉┅━❀𝙶𝚄𝙻𝙵 𝙽𝙴𝚆𝚂❀━┅┉┈_*

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...