பல ஆண்டுகாலமாக BBCயின் இந்திய செய்தியாளராக பணியாற்றும் திரு.மார்க் டுல்லி மோடி ஆட்சியில் நிகழ்ந்துள்ள மாற்றங்களை பதிந்துள்ளார்.
அவருடைய " No Full Stops in India," என்ற நூலில் இருந்து:
இந்தியாவில் மாற்றங்கள் நிகழ அதிக காலம் பிடிக்கும். அம்மாற்றங்களின் பிறப்பு மெதுவாகவும் வலி நிறைந்ததாகவும் கூட இருக்கலாம். ஆனால், அவ்வாறு நிகழும் புதிய மாற்றங்கள், இம்முறை, பிரிட்டிஷார்கள் விட்டுசென்ற காலனி ஆதிக்கத்தின் தூண்களால் உருவக்கப்படதாகவோ, அல்லது மற்றைய நாடுகளை பார்த்து அடிமை மனப்பான்மையோடு கூடியதாகவோ இல்லாமல், அப்பழுக்கற்ற, முழுமையான இந்திய மாற்றமாகவே இருக்கும் என்று நம்புகிறேன்.
மேலும் அவர், "நேருவின் பரம்பரை நடத்திய அரசாட்சி, பெரிய ஆலமரம் போல இந்தியாவின் "மக்களையும் இதர அமைப்புகளையும் தன் நிழலில் வைத்து கிளைபரப்பியிருந்தது. ஆனால், ஆலமர நிழலில் புல் பூண்டு கூட முளைக்க முடியாது என்பது இந்தியாவில் பிரசித்தம்." என்கிறார்.
மார்க் சொன்னது போல, மாற்றங்கள் மெதுவாகவும், வலி நிறைந்ததாகவும் இருப்பதால், அதிகம் படிக்காமல், அம்மாற்றத்தின் குறிப்புகளை உணராமல் பேசும் மக்கள், இன்னும் சில காலத்திற்கு அந்த மாற்றங்களை பார்க்க முடியாமலே இருப்பார்கள். அதனால் மாற்றம் நிகழவில்லை என்றும் சொல்வர்.
ரயில்வே, எரிசக்தி, மின்சக்தி துறைகள், பாதுகாப்பு மற்றும் உற்பத்தியிலும், ஆட்சிமுறையிலும் மாற்றங்கள் வருகின்றன. அந்த மாற்றங்களை பழைய சக்திகள் எதிர்ப்பதில் இருந்தே அம்மாற்றங்கள் நிகழ்வது புலனாகும்.
அதே சமயத்தில், இந்த செல்லரித்த ஆலமரத்தையும் நாம் சாதரணாமாக நினைக்க முடியாது. இன்றளவிலும் அது புதிய மாற்றங்கள் முளைக்க விடாமல் செய்கிறது. மேலும் அது தான் வீழும்போது, மொத்த நிலத்தையுமே தலைகீழாக புரட்டலாம்.
இன்னும் ஒரு ஆண்டிற்கு நாம் தத்ரி போன்ற சம்பவங்களையும், கனியாஹா (JNU) ஒவாசி போன்ற தேச விரோத பேச்சுக்களை கேட்க வேண்டி இருக்கும். ஆனால் நம் சமுதாயம் இந்த பேச்சுகளால் உணர்சிவசப்படமால் இருந்தால், நம் முதிர்சியாலேயே பழைய தீய சக்திகள் இயற்கையாகவே மரணமடைந்து விடும்.
இன்னொன்றும் சொல்கிறேன்- தினமும் ஊடகங்கள் உங்கள் முகத்தில் வீசும் புதிய சர்ச்சைகளும் போராட்டங்களும் மோதியின் ஆட்சியை கலைக்க நினைக்கும் தீய சக்திகளால் உருவாக்கப்படுபவையே! காரணம், அந்த சக்திகளை இப்போது அவர் வேருடன் பிடுங்குகிறார், அதனால் அவை தரையில் போட்ட மீன்கள் போல துடிக்கின்றன.
அந்த மனிதருக்கு தொடர்ந்து நம் ஆதரவை கொடுக்கவும், அவர்மீதுள்ள நம்பிக்கையை இழக்காமலும் இருக்க வேண்டிய நேரம் இது. இதை நாம் செய்தாலே புதிய இந்தியாவின் எழுச்சியை காணாலாம். அவ்வாறு எழும் இந்தியா, பெரியதாக, சிறந்ததாக, பலம் மிக்கதாக, ஊழலற்றதாக, அமைதியும் வளமும் நிறைந்து முன்னெப்போதும் இல்லாத வடிவில் துலங்கி நிற்கும். மக்களின் வாழ்கை தரமும் சரித்திரத்திலேயே அதிகமாக உயரும்.
No comments:
Post a Comment