Friday, 7 December 2018

ஒரு தாயின் புத்திமதி.

ஒரு தாயின் புத்திமதி.

மகனே, நீ வெளி நாடுகளில் இருந்து பணம் பெற்று இங்கு நாட்டு நலனுக்கு எதிராக செயல் பட்ட NGO க்களின் அங்கீகாரத்தை ரத்து செய்தாய். அதனால் மத மாற்ற செயல் பாடுகள் குறைந்து உள்ளன. 500,1000 ரூபா நோட்டு விவகாரம் - இன்னமும் பதுக்கல் நோட்டுகள் வண்டி வண்டியாக சாலை ஓரத்தில் கிழிந்து போடப் படுகிறது.

அன்னிய நாட்டில் அச்சடித்து அனுப்பிய பணம் பெற்று காஷ்மீரில் மற்றும் டெல்லி, பாம்பே, குஜராத். போன்ற இடங்களிலும், ராணுவ முகாம்களிலும் நடத்தப்பட்ட தற்கொலை படை குண்டு வெடிப்புகள் இப்போது இல்லை.  அண்டை நாடு ஒன்றில் இருந்து தீவிரவாத பயிற்சி கொடுத்து இந்தியாவுக்குள் தற்கொலை படைகளை அனுப்பும் பயிற்சி முகாம் surgical strike மூலம் நிர்மூலம் ஆக்கப்பட்டதும், உலக அரங்கில் இந்தியாவின் இராணுவத்தின் பெருமை உயர்ந்தது.

இந்திய ரூபாயில் வெளி நாட்டு பொருள் இறக்குமதி ஒப்பந்தங்கள் அமெரிக்காவை கதி கலங்க வைத்து உள்ளது. ஏன் என்றால் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு நாணயம் இருந்தாலும் உலக நாணயம் அமெரிக்க டாலர் ஆக இருந்து வந்தது. அது மட்டும் அல்ல இதுவரை அமெரிக்காவில் இருந்து விண்கலங்களை ஏவி வந்த உலக நாடுகள் எல்லாம் இந்தியா பக்கம் வந்து விட்டன. உலக நாடுகளுக்கு ஆக நூற்றுக் கணக்கான விண் கலங்கள் இந்தியாவில் இருந்து செலுத்தப் பட்டு உள்ளன. அதனால் கணிசமான அன்னிய செலாவணி இந்தியாவுக்கு கிடைத்து உள்ளது. அதனால் இங்கே உள்ள அமெரிக்க agent களுக்கு aminoamericofobiacris.

உன்னை கண்டபடி புழுத்தி வாரி தூவிவருகிறார்கள். ஒன்றுக்கும் பயப்படாதே. கரும வீரர் காமராசர் போல் கண்ணியமாக தொடர்ந்து சென்று மக்களுக்கு இறுதிவரை பணிசெய்து இரு. உனக்கு என்ன வாரிசா இருக்கிறது. உன் வாரிசு இந்திய மக்கள் தானே. போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும். தொடர்ந்து செல். துணிந்து செல். உலகம் ஒரு நாள் உன் காலடியில். அப்போது இந்தியா வல்லரசாக மாறி இருக்கும்.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...