பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியாவுடன் வலுவான உறவு
அமெரிக்க அதிபர் மகிழ்ச்சி
வாஷிங்டன்,டிச.4–
அமெரிக்கா- இந்தியா இடையிலான உறவு வலுவாக உள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் ஜேம்ஸ் மாத்தீஸ் கூறியுள்ளார். குறிப்பாக மோடி தலைமையிலான அரசு வரலாற்றில் இல்லாத அளவிற்கு பல தடைகளை விலக்கி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் 5 நாள் அரசு பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். மேலும் சமீபத்தில் மறைந்த முன்னாள் அதிபர் எச்.டபுள்யு புஷ் க்கு இரங்கல் தெரிவித்தார். இதற்கிடையில் அவர் அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் ஜேம்ஸ் மாத்தீசை சந்தித்து பேசினார். இரு நாட்டு பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.
பிரதமர் மோடிக்கு பாராட்டு
இந்த சந்திப்புக்கு பின்னர் நிருபர்களிடம் பேசிய ஜேம்ஸ் மாத்தீஸ் கூறியதாவது:–
அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு இந்தியாவுடன் சுமுக உறவில் எவ்வித முரண்பாடும் இல்லை. இரு நாட்டு புரிந்துகொள்ளுதலின்படியான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மோடி தலைமையிலான அரசு வரலாற்றில் இல்லாத அளவிற்கு தடைகள் அனைத்தும் விலக்கப்பட்டுள்ளது. இதனால் இருநாட்டு பாதுகாப்புதுறை ரீதியிலான உறவில் வேகமான முன்னேற்றம் காணப்படுகிறது. இது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
. 🦅Ⓜ🦅
*_┈┉┅━❀𝙶𝚄𝙻𝙵 𝙽𝙴𝚆𝚂❀━┅┉┈_*
No comments:
Post a Comment