Friday, 7 December 2018

இந்தியாவில் உருவாக்கப்பட்ட ரூபே கார்டு, யு.பி.ஐ உள்ளிட்டவற்றால், விசா, மாஸ்டர் கார்டு ஆகிவை மார்க்கெட் பங்குகளை இழந்துள்ளது

இந்தியாவில் உருவாக்கப்பட்ட ரூபே கார்டு, யு.பி.ஐ உள்ளிட்டவற்றால், விசா, மாஸ்டர் கார்டு ஆகிவை மார்க்கெட் பங்குகளை இழந்துள்ளதாக

நிதியமைச்சர் அருண்ஜேட்லி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் உருவாக்கப்பட்ட ரூபே மற்றும் யூ.பி.ஐ. உள்ளிட்டவை வங்கிகளுக்கிடையேயான விரைவான பரிவர்த்தனைகளுக்கு வழி வகுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
ரூபே உள்ளிட்டவற்றை பயன்படுத்தினால் அதற்கான கட்டணம் இந்தியாவிலேயே தங்கும் என்றும் அதன் மூலம் சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்த முடியும் என்றும் பிரதமர் மோடி கூறியிருப்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர், தற்போது ரூபே, யூ.பி.ஐ. உள்ளிட்டவை 65 சதவீத மார்க்கெட் பங்குகளை பிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ரூபே கார்டை பிரதமர் நரேந்திர மோடி பிரபலப்படுத்தி வருவதால், எரிச்சலடைந்திருக்கும் அமெரிக்காவின் மாஸ்டர்கார்டு நிறுவனம், டிரம்ப் அரசிடம் புகார் கூறியுள்ளது. முழுமையாக இந்தியாவிலேயே செயல்படுவதால் ரூபே கார்டுகள் விசா, மாஸ்டர் கார்டுகளை விட வேகமாகச் செயல்படுகின்றன. விசா மற்றும் மாஸ்டர் கார்டுகள் சர்வதேச அளவில் செயல்படுவதால் வேகம் குறைவாக உள்ளது.ரூபே கார்டுகளில் பணப் பரிமாற்ற கட்டணங்கள் உண்டு.ஆனால் விசா, மாஸ்டர் கார்டுகளை விடக் குறைவான கட்டணங்கள் தான் வசூலிக்கப்படுகின்றது
விசா, மாஸ்டர் கார்டுகள் போன்ற சேவை அளிக்கும் நிறுவனங்கள் அனைத்தும் வெளிநாட்டு நிறுவனங்கள். நாம் இங்குச் செய்யும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வங்கிகள் அவர்களுக்குச் சில கட்டணங்களைச் செலுத்து வருகின்றன. அதற்காக நமது வங்கி கணக்குகளில் இருந்தும்  அவ்வப்போது கட்டணங்கள் பிடிக்கப்படுகின்றன. இந்தக் கட்டணமாகப் பெறப்படும் வருவாய் அனைத்தும் வெளிநாட்டில் உள்ள இந்த விசா, மாஸ்டர் போன்ற நிறுவனங்களுக்குக் கொண்டு செல்வதைக் குறைக்கவே மத்திய அரசு ரூபே கார்டுகளை அறிமுகப்படுத்தியது.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...