Monday, 31 December 2018

முத்தலாக் பற்றி

முத்தலாக் சட்டத்தில் ஆணுக்கு வழங்கப்படும் தண்டனை “காட்டுமிராண்டித்தனமானது!” என்கிற “முற்போக்கு” கருத்துக்கள், பரவ ஆரம்பித்துள்ளது! மனிதனின் மறதியே, அவன் முதல் வியாதி!

அதற்காகவே ஒரு மீள்!
———————
1978 ஆம் வருடம்,...
அந்தப் பெண்மணிக்கு, 62 வயது!
--------------------------
மத்தியப்பிரதேச இந்தூரில் வசித்தார்! அவர் கணவர் ஒரு லாயர்!
14-வருட மண வாழ்க்கையில், இவர்களுக்கு ஐந்து குழந்தைகள்!

அந்நிலையில்,... அந்த லாயர் கணவர், ஒரு இளம் பெண்ணை, இரண்டாம் தாரமாக மணக்கிறார்! ஒரு சில வருடங்கள் கழித்து, தன் 62-வயது முதல் மனைவியையும், அவர் மூலம் தனக்குப் பிறந்த ஐந்து குழந்தைகளையும், வீட்டை விட்டுத் துரத்தி விடுகிறார்!

1978 ஏப்ரல் மாதம், அவர்களுக்கு "பராமரிப்புத் தொகை"யாக  தருவதாக (வாய்வழியாக) ஒப்புக்கொண்டிருந்த மாதம் ரூபாய் 200 ஐயும், நிறுத்தி விடுகிறார்! வேறு வருமானம் எதுவும் இல்லாத நிலையில், தானும் தன் குழந்தைகளும்  உயிர்வாழவே வழியில்லாமல் போன நிலையில், இந்தூரில், ஒரு உள்ளூர் நீதிமன்றத்தில், வழக்கு தொடுக்கிறார் - Sec 125 of Cr.P.C. அடிப்படையில்! அதாவது, தனக்கும் தன் பிள்ளைகளுக்குமாக மாதம் 500 ரூபாய் ஜீவனாம்சமாக, தன்னை  வீட்டை விட்டு வெளியேற்றிய, அந்த லாயர் கணவர் வழங்க வேண்டும் என்று!

விளைவு!?

நவம்பர் 1978 இல், அந்த லாயர், இந்தப்பெண்மணியை முத்தலாக் சொல்லி, திரும்பச் சேரவழியில்லாத-விவாகரத்து செய்து விடுகிறார்!  பின், கோர்ட்டில் சொல்கிறார்: இஸ்லாமிய சட்டங்கள் படி, இப்படி விவாகரத்து செய்வது ஆண்களின் உரிமை என்றும், தான் இனிமேல் அவளுக்கு இஸ்லாமிய சட்டங்கள் படி, மொத்தம் ரூபாய் 5,400 மட்டும் தந்தால் போதும் என்றும், வேறு எந்த ஜீவனாம்சமோ பராமரிப்புத் தொகையோ தரத் தேவையில்லை என்றும் !!!

ஆகஸ்ட் 1979 இல், உள்ளூர் நீதிமன்றம், அந்த லாயரை, மாதம் ரூபாய் 25 மட்டும், ஜீவனாம்சமாக தர, உத்தரவிடுகிறது!

அத்தீர்ப்பை மறு-பார்வை செய்ய, மனு தாக்கல் செய்த அப்பெண்மணியின் குரலுக்கு, 1980  ஜூலை, 1ம் தேதி, மத்திய பிரதேச உயர் நீதிமன்றம், அந்தத் தொகையை ரூபாய் 179.20 (நூற்று எழுபத்தொன்பது ரூபாய், இருபது காசுகள்!) என உயர்த்தித் தீர்ப்பளித்தது!

இந்தத் தீர்ப்பை எதிர்த்து, அந்த லாயர் கணவர், உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்! அங்கு, அந்தப் பெண்மணி, இனிமேல் தன் பொறுப்பு கிடையாது என்றும், தன் மதம் அனுமதித்தபடி, தான் இன்னொரு மனைவியுடன் வாழ்வதாகவும் (அதனால் தான் எந்த ஜீவனாம்சமும் முதல் மனைவிக்கு தரவேண்டியதில்லை எனவும்) சொல்கிறார்! 

1981  பிப்ரவரி 1ம் தேதி, இரண்டு-ஜட்ஜ் பெஞ்ச் ஒன்று, (ஜஸ்டிஸஸ் மூர்த்தஸா ஃபாசல் அலி மற்றும் ஏ.வரதராஜன் அவர்கள்) இவ்வழக்கை, இன்னமும் பெரிய பெஞ்சுக்கு பரிந்துரைக்கிறார்கள்!

இந்நிலையில், ஆல் இந்தியா முஸ்லீம் பர்சனல் லா போர்டு மற்றும், ஜாமியாத் வலீமா-இ-ஹிந்த், இவ்வழக்கில் தன்னிச்சையாக (intervenor) சேர்ந்துகொள்கின்றன!

பின்னர், தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி ஜெகன்நாத் மிஸ்ரா, நீதிபதி டி.ஏ.தேசாய், நீதிபதி ஓ.சின்னப்ப ரெட்டி, மற்றும், நீதிபதி ஈ.எஸ்.வேங்கடராமையா ஆகியோர் அடங்கிய ஒரு ஐந்து-ஜட்ஜ் பெஞ்ச் இவ்வழக்கை விசாரிக்கிறது!

1985 ஏப்ரல் 23ம் தேதி, அந்த பெஞ்ச், லாயரின் மனுவை தள்ளுபடி செய்து, மத்தியபிரதேச உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்கிறது!  குர்ஆனில் சொல்லப்பட்டதற்கும், செக்க்ஷன் 125 க்கும் கருத்தளவில் வித்தியாசம் எதுவும் இல்லை என்றது! விவாஹ ரத்து செய்த கணவர் ஜீவனாம்சம் தரவேண்டும் என்றது!

அந்த அடிப்படையில், தனக்கு ஜீவனாம்சம் கிடைக்க இந்தப் பெண்மணி திரும்பவும் நீதிமன்றங்களை அணுகி, அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு வருவதற்குள் ஏழு வருடங்கள் உருண்டோடி விட்டன! இம்முறை, உச்ச நீதி மன்றம், Sec 125 of Cr.P.C. படி, ஜாதி, இனம், மதம் எந்த வித்தியாசமும் இல்லாதபடி, அனைவருக்கும், ஜீவனாம்சம் வழங்கப்பட வேண்டியது, விவாகரத்து செய்யப்பட்ட மனைவியின் உரிமை என்றும், அதன்படி, இந்தப் பெண்மணிக்கு, அந்த லாயர் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும், தீர்ப்பளித்தது!

அதே மூச்சில், இந்திய அரசியல் சட்டத்தில் பிரிவு 44இல்  சொல்லப்பட்டிருந்த படி, மத/இன தனி அடிப்படை சட்டங்கள் எல்லாவற்றையும் செயலிழக்கச் செய்யும் "யூனிபோர்ம் சிவில் கோடு", அதுவரை ஆண்ட இந்திய அரசுகளால், இன்னமும் நடைமுறைப்படுத்தாதை குத்திக் காட்டியது! அதனால், இந்திய ஒருமைப்பாடு பாதிக்கப்படுகிறது என்றும் சுட்டியது!
————————————
இந்தத் தீர்ப்பை, ஆல் இந்தியா முஸ்லீம் பர்சனல் லா போர்டு மற்றும் பல இஸ்லாமிய அமைப்புக்கள் கடுமையாக எதிர்த்தன! “தங்கள் மத சுதந்திரம் பறிபோகிறது”, என்று கூக்குரலிட்டன!

இந்நிலையில், மத்தியில் 1984 இல் அறுதிப் பெரும்பான்மை வெற்றி பெற்று, ஆண்டு கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பலர், உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை முறியடிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரவில்லையானால், வரும் தேர்தலில் (இஸ்லாமியர்கள் வோட்டிழப்பால்) தோல்வியை தழுவ நேரிடும், என்று தலைமைக்கு அறிவுறுத்தினார்கள்!

அதன்படி,.. 1986 இல், ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காங்கிரஸ் அரசு, இந்திய மக்கள் அனைவருக்கும் பொதுவான Sec 125 of Cr.P.C. யின் ஜீவனுக்கு முரண்படும் வகையிலும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அர்த்தமற்றதாக்கும் வகையிலும், ஒரு சட்டத் திருத்தம் கொண்டுவந்து, நிறைவேற்றியது! அதன்படி, குரான் அடிப்படையில் முத்தலாக் வழியாக விவாகரத்து ஆன இஸ்லாமிய பெண்களுக்கு, குர்ஆனில் சொல்லியபடி, "இத்தத்" காலம் எனப்படும் 90 நாட்களுக்கு மட்டும் "பராமரிப்புத் தொகை" தந்தால் போதுமானது !!!

இதுதான், உலகப் புகழ்(?) பெற்ற ஷா பானு வழக்கு! அந்த பெண்மணிதான் ஷா பானு! அவரின் லாயர் கணவர் பெயர் மொஹம்மது அஹம்மத் கான்!
————————————
இந்த சமூக அவலத்துக்கு எதிராகத்தான், பல ஆண்டுகளாக இஸ்லாமிய மற்றும் இதர பெண்கள் அமைப்புக்கள் போராடி வருகின்றன! 

வோட்டிழப்புக்கு பயந்து, சிறுபான்மையினரை தாஜா செய்ய, இந்திய அரசியலமைப்பு சட்டங்களையே மாற்றிய காங்கிரஸ் கட்சி எங்கே?!

அடுத்த தேர்தலை, ஓட்டுக்களை, ஆட்சியை பற்றியெல்லாம் கவலைப்படாமல், நாட்டு மக்களின்  நீண்ட கால நல்லதுக்கு மட்டும், கசப்பு மருந்துக்களாக ஒவ்வொன்றாக தந்து கொண்டிருக்கும் மோடி அவர்கள் எங்கே!
---------------------
என்னைப்பொறுத்தவரை,
இவரே மஹாத்மா!
Ramakrishnan Sivasankaran K

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...