Friday, 21 December 2018

அரசாங்கம் அணைகள் கட்டி மழை நீரை சேமித்து வைக்கும் நிலை ஏற்பட்டால்….. தமிகம் சொர்க்க பூமியாக மாறும்

https://m.facebook.com/groups/1802075443422233?view=permalink&id=1941814912781618

இயற்கை தரும்( இலவசம்) மழையை காக்க மறுத்து
இலவச சலுகைகள் பெற காத்து இருப்பது வேதனையை தருகிறது.
அதை செய்து கொடுக்கும் அரசை தேர்வு செய்ய வேண்டிய வேண்டிய நேரத்திற்காக காத்து இருக்கவும்

காவேரி தண்ணீர் தரா விட்டால்???

காவேரி தண்ணீர் நம் உரிமை. காரணம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலைகளில் பெய்யும் மழை நீர் கர்நாடக மாநில கபினி அணைக்கு செல்கிறது.

அந்த நீரை அவர்கள் தர மறுத்தால், தமிழ் நாட்டில் இருந்து அந்த மாநிலத்துக்கு செல்லும் நீரை தடுத்து நமது அணைகளுக்கு திருப்பி விட வேண்டும். தமிழ் நாட்டில் உற்பத்தி ஆகும் மின்சாரம் பெற அவர்களுக்கு தகுதி இல்லை என்ற நிலை உருவாக வேண்டும். இப்படி மாநிலங்கள் நீதி மன்ற தீர்ப்புகளை மதிக்காத நிலை தொடருமானால் மத்தியில் கூட்டாட்சி என்ற நிலைபாட்டிற்கு பங்கம் வரலாம்.
என்ன வளம் இல்லை இந்த தமிழ் திரு நாட்டில். ஆனா‌ல் இங்குள்ள அரசியல் கட்சிகளின் திறமை அற்ற ஆட்சி காரணமாக, பெரும் தலைவர் காமராஜ் ஆட்சி காலத்துக்கு பின்னர் நீருக்காக கர்நாடகாவை கை ஏந்தி அரசியல் நடத்தும் நிலை தொடர்கிறது. நீர் வளத்தில் தன்னிறைவு பெறும் நிலை இருந்த போதிலும் அதை பயன் படுத்த தவறிய அரசுகள். தமிழ் நாட்டில் பெய்யும் மழை நீரில் 80 சதவீதம் வீண் ஆக கடலில் கலக்கிறது.

தூர் வருகிறார்கள் கோடி கணக்கில் மக்கள் வரி பணத்தில். எங்கே எவ்வாறு என்பது எல்லாம் அப்பகுதி மக்களுக்கே வெளிச்சம்.

பொது மக்கள் திரட்டிய 5 லட்சம் ரூபாயை வைத்து 6 குணங்களை மக்கள் ஒன்று சேர்ந்து தூர் வாரினார்கள் என்பது அண்மை கால செய்தியாக இருந்துள்ளது.

தூர் வாருவதை விட்டு விட்டு, அணைகள், தடுப்பு அணைகள் கட்டுங்கள். இல்லையேல் அடுத்த முறை உங்களுக்கு ஒட்டு இல்லை என்று ஆணித்தரமாக குரல் கொடுங்கள். அப்படி அரசாங்கம் அணைகள் கட்டி மழை நீரை சேமித்து வைக்கும் நிலை ஏற்பட்டால்….. தமிகம் சொர்க்க பூமியாக மாறும்
நன்றி: Aruna Sowri

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...