Friday, 21 December 2018

பொன்னரை அனைவரும் வாழ்த்துகிறார்கள். எதிற்தவர்களே கூட அவரை வாழ்த்துகிறார்கள்.


https://www.facebook.com/groups/1700782293271895/permalink/2509491779067605/

Post by Rajesh.
என் வயது நாற்பது அதில் இருபத்து ஐந்து வருடங்கள் டென்னிஸ் காங்கிரஸ், ஐந்து வருடங்கள் பெல்லார்மின் கம்முனிஸ்ட், ஐந்து வருடம் பொன்னார் பிஜேபி, அதன் பிறகு ஐந்து வருடம் ஹெலன்டேவிட்சன் திமுக. தற்போது மீண்டும்  பொன்னார்,

இந்த நான்கரை ஆண்டுகள் அவர் நமது மாவட்டத்திற்கு தந்த திட்டங்கள் ஏராளம்,

அவற்றுள் மார்த்தாண்டம், பார்வதிபரம் மேம்பாலங்களை பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. தேர்தல் பிரச்சசாரத்தின் போது பொன்னார் கூறிய வாக்குறுதி இந்த மேம்பாலங்கள்.

அவர் வெற்றிபெற்று சில மாதங்கள் ஆனதும் எதிர்கட்சிகள் மேம்பாலம் என்ன ஆச்சு என்று கிண்டலடித்தார்கள். ஆனால் அதற்கு முன்னதாகவே பொன்னார் மேம்பால பணிக்கான ஆயத்த பணிகளை துவங்கி இருந்தார.

மண் ஆய்வு பணி துவங்கியபோது ஒவ்வொருவராக எதிர்க்க துவங்கினார்கள். இது மட்டுமல்ல பல முறை கோர்ட்க்கு சென்று தடை வாங்கினார்கள். இவைற்றையும் கடந்து மேம்பாலத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது,

அப்போது இந்த மார்த்தாண்டம் வர்தக சங்கத்தினர் தங்கள் கடைகளை அடைத்து கறுப்பு கொடி                
காட்டினார்கள். அடிக்கல் நாட்டப்பட்டது, கம்முனிஸ்ட்டுகள் இவை அனைத்தும் கபட நாடகமென்று சுவரொட்டிகளை ஒட்டினார்கள். பொன்னார் சளைக்கவில்லை.

மேம்பால பணிகள் துவங்கின, போக்குவரத்து மாற்றி அமைக்கபட்டது. பணிகள் நடைபெறும்போது பல இடையூறுகள் வந்தன அதையும் தாண்டி தரை மட்ட பணிகள் முடிந்தது.

பில்லர் அமைக்கும் பணி துவங்கியபோதும் அதையும் மிக கேவலமாக பேசினார்கள். அதையும் பொருட்படுத்தவில்லை. பில்லர் அமைத்து, பீம் அமைத்து, காங்கிரீட்டும் போடபட்டது. உடனே அடுத்த பொய் பிரச்சாரம், இந்த பாலத்தில் கார், பைக் போன்ற சிறிய ரக வாகனங்கள் தான் செல்லுமென்று கூறினர். அதையும் பொருட்படுத்தவில்லை.

மேம்பாலப் பணிகள நிறைவுபெறும் தருவாயில் மக்கள் பார்வை தினம்
அறிவிக்கபட்டது.

பார்வை தினத்தன்று மக்கள மேம்பாலத்திற்கு பேராதரவு தந்தார்கள். இதனை பொறுக்க முடியாத கயவர்கள் வயிற்றெரிச்சலின் உச்சத்திற்கு சென்று பாலம் ஆடுகிறது என்று ஒரு புரளியை கிளப்பி விட்டார்கள். கடைசியாக அதையும் தாண்டி இன்று மேம்பாலம் திறந்து அனைத்து ரக வாகனங்களும் அழகாக செல்கிறது.

பேருந்து ஓட்டுனர்கள், லாறி ஓட்டுனர்கள், கார், டூவீலர் ஒட்டுபவர்கள் மற்றும் அதில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரின் முகத்திலும் அளவற்ற சந்தோஷம் தெரிந்தது.

பொன்னரை அனைவரும் வாழ்த்துகிறார்கள். எதிற்தவர்களே கூட அவரை வாழ்த்துகிறார்கள். இப்போது தான் புரிகிறது ஏன் மக்கள் மீண்டும் மீண்டும் பிஜேபியை ஆதரிக்கிறார்கள் என்று.

Post by Rajesh.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...