Wednesday, 9 January 2019

ரூ.100 கோடி வரிஏய்ப்பு : சோனியா, ராகுலுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

ரூ.100 கோடி வரிஏய்ப்பு : சோனியா, ராகுலுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
வருமானத்தை குறைத்து காட்டி, வரிஏய்ப்பு செய்ததாக காங்., தலைவர்கள் சோனியா மற்றும் ராகுலுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
2011 - 2012 ம் நிதியாண்டில் அசோசியேட்டட் ஜோர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் சோனியா ரூ.155.41 கோடியும், ராகுல் ரூ.154.96 கோடியும் வருமானம் ஈட்டி உள்ளனர். ஆனால் வருமான வரிதாக்கலில் ரூ.68.12 லட்சம் மட்டுமே வருமானம் பெற்றதாக கணக்கு காட்டி உள்ளனர். இதே போன்று காங்., கட்சியின் ஆஸ்கார் பெர்னாண்டசும் தனது ரூ.48.93 கோடி சொத்து மதிப்பை குறைத்து காட்டி வரிஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது.
இவர்களின் சொத்து கணக்கை மறுமதிப்பீடு செய்த போது சோனியா குடும்பத்தினர் ரூ.300 க்கும் அதிகமான வருமானத்தை மறைத்து ரூ.100 கோடி அளவிற்கு வரிஏய்ப்பு செய்துள்ளது தெரிய வந்தது. இது தொடர்பாக வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் சோனியா குடும்பத்திற்காக வாதாடிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்செட்டி, அந்த நிறுவனம் ரூ.90 கோடி கடனில் உள்ளதாகவும், வருமான வரித்துறையினர் அதனை மறைத்து ரூ.407 கோடி சொத்து இருப்பதாக கூறுவதாகவும் கூறினார்.
இனி சிதம்பரத்திற்கு தன்னுடைய வழக்கு , தன் மகன்மேல் உள்ள வழக்கு , சோனியா குடும்ப வழக்கு , அகஸ்டா வழக்கு என்று அணைத்து ஊழல் வழக்குகளை நடத்துவதற்கே நேரம் சரியாக இருக்கும்.
இப்படி ஒன்று வேற இவர்களை தொடந்து கொண்டு இருக்கிறதா? இவர்கள் எதை மனதில் நினைத்துக்கொண்டு அரசியல் செய்கிறார்கள் என்று நன்றாக புரிகிறது, நிலக்கரி விவகாரத்தில் தீர்ப்பும் வந்து விட்டது. எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன. 10 ஆண்டுகள் கொள்ளை அடித்த அனைத்தையும் இப்பொழுது மோடிஜி துருவி துருவி பிடித்துக்கொண்டு உள்ளார், நேஷனல் ஹெரால்ட், அகஸ்டா இப்பொழுது இந்த வரி ஏய்ப்பு இன்னும் சொல்ல பல உள்ளது, மருமகன் வதேரா தரகு வியாபாரம், கூட்டணி கட்சிகளின் கூட்டு கொள்ளை, BSNL muraikedu , ஹெலிகாப்டர் இப்படி எல்லா ஊழலை மறைக்கணும்னுதான் இவர்கள் ரபேல் என்று கத்தி கொண்டு, மக்கள் மனதில் குழப்பத்தை உண்டு பண்ணி எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று துடித்துக்கொள்கிறார்கள், வெற்றி பெற்று விட்டால் அப்புறம் எல்லா வழக்குகளும் ஒன்றும் இல்லாமல் செய்து விடுவார்கள், இவர்களுக்கு மக்கள் நலன் எல்லாம் ஒன்றும் கிடையாது,ஆனால் இவர்களுக்கு வெட்கம் மானம் சூடு சொரணை எதுவுமே இல்லை என்று நினைக்கிறேன்,வேறு என்ன சொல்லுவது,இங்கு இருக்கும் ஊழல் கூட்டாளிகளும் இவர்களுக்கு முட்டு கொடுத்து கொண்டே இருக்கிறார்கள்.
ஒரு பத்துவருஷம் மோடிஜி அரசு தான் வேண்டும். ஜனநாயக ஆட்சி தான் உலக அரங்கில் நம்மை தலை நிமிரச்செய்து உள்ளது. காண்+க்ரோஸ் போலி ஜனநாயாகத்தைவிட மோடியின் ஆணித்தரமான இந்தியஉணர்வு கொண்ட ஜனநாயகம் தான் தேவை. சர்வாதிகாரம் செய்தால் அதையும் அரசியல் ஆகிவிடுவார்கள் இந்த காங்கிரஸ் மற்றும் தேசநல விரோத கபோதிகள்.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...