Wednesday, 9 January 2019

பாஜக ஆட்சி முடிய போகின்றது, ஆயிரம் சர்ச்சை அவர்கள் மேல் இருக்கலாம்

பாஜக ஆட்சி முடிய போகின்றது, ஆயிரம் சர்ச்சை அவர்கள் மேல் இருக்கலாம்

ரபேலில் ஊழல் சர்ச்சையும் இருக்கலாம், ஆனால் ஒரு பாஜக எம்பி அந்த ஊழலால் பயனடைந்தான் என்றோ, ஒரு பாஜக குடும்பம் கோடிகணக்கில் சொத்துகுவித்தது என்றோ சொல்லமுடியாது

மோடி சேர்த்தாரா? இல்லை அவர்களின் கட்சிக்காரர்கள் அள்ளிகொண்டு சென்றார்களா?

இல்லை மொட்டைசாமிதான் தங்க சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கின்றதா?

ரபேலில் குற்றம்சாட்டும் பொழுதும் ஒரு பாஜக உறுப்பினரை இவர் சம்பாதித்தார்  குறிவைத்து காட்டமுடியவில்லை

இந்திய ஊழல் சர்ச்சைகளில் இது புதிது, நிச்சயம் மகா விசித்திரம்

அம்பானி ஏன் உள்ளே வந்தார் என்றுதான் கேட்க முடிகின்றது , ரபேலுக்கு ஏன் அதிக பணம் என்றுதான் கேட்க முடிகின்றது

ரபேலுக்கு அதிக பணம் என்பது பிரான்ஸ் நிறுவணம் கோரியது, சில ரகசியங்களுக்காக அதாவது விமானத்தில் புதிதாக பொருத்தபடும் சில கருவிகளுக்காக விலை எகிறி இருக்கலாம், சாத்தியம் உண்டு

குற்றம் சாட்டுகின்றார்களே தவிர  இதன் மூலம் இந்த நபர் இவ்வளவு சம்பாதித்தார் என சொல்லவே முடியவில்லை

போபர்ஸ் முதல் 2ஜி வரை உலகை உலுக்கிய வழக்குகள் நடந்த தேசமிது அதிலெல்லாம் கைகாட்ட ஒருவர் சிக்கினார்

குவாட்ரோச்சி முதல் ஏராளமானோர் பயனடைந்தவர் என காட்டபட்டனர், ஆனால் ரபேலில் யாரை கைகாட்டுவீர்கள்?

அவ்வகையில் பாஜகவினருக்கு நிச்சயம் பெருமையே அதில் சந்தேகமில்லை

மோடி ஆட்சியில் சர்ச்சைகள் இருக்கலாம் ஆனால் ஊழலோ சொத்துகுவிப்போ அதிகமாக இல்லை

அப்படி இருந்தால் அதை எதிர்கட்சிகள் தோலுரிக்கலாம் ஆனால் செய்யவில்லை

யார் மேலும் பெரும் சர்ச்சை வந்ததாக தெரியவில்லை

ஏன் பெட்ரோலிய துறையில் இருக்கும் அக்கா தமிழிசை மீது கூட ஒரு சர்ச்சையுமில்லை

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...