*இந்தியாவின் மிக மோசமான அமைப்பு கம்யூனிஸ்ட்.*
1. சீன கம்யூனிஸ்ட்காரர்கள் எக்காரணத்தைக் கொண்டும் தன் நாட்டுக்கு எதிராக செயல்படவோ அல்லது பேசவோ மாட்டார்கள்.
இந்தியாவின் கம்யூனிஸ்ட்களின் வேலையே இந்த நாட்டுக்கு எதிராக செயல்படுவதும், எதிராக பேசுவதும் தான்.
2. சீன கம்யூனிஸ்ட்கள் 1980 ஆம் ஆண்டுகளிலே தனியார்மயமாக்கல் கொள்கையை ஏற்று நாட்டின் பல வளர்ச்சி கண்டுள்ளனர்.
இந்தியாவின் கம்யூனிஸ்ட் தனியார் மயமாக்கல் கொள்கைகளை ஏற்க்கவும் மாட்டார்கள், பொதுத்துறை நிறுவனங்களிலும் போராட்டம் போராட்டம் என அந்த நிறுவனத்தையே நாசம் செய்துவிடுவார்கள்.
3.சீனாவின் கம்யூனிஸ்ட் ஆட்சி செய்ததன் விளைவாக சீனா தற்போது நல்ல வளர்ச்சியை அடைந்துள்ளது.( உலக அளவில் சீன கம்யூனிஸ்ட் ஊழல் கட்சிகளின் வரிசையில் மூன்றாவது இடம் என்பது அது வேறு விஷயம்)
இந்தியாவில் ஆங்கிலேயர் காலத்திலும் சரி, விடுதலை காலத்திலும் சரி செல்வ செழிப்பாக வர்த்தகம் நடந்து மக்கள் கவலை இல்லாமல் இருந்த மாநிலம் மேற்க்கு வங்காளம், மெட்ராஸ். ஆனால் மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சி செய்ததன் விளைவாக சர்வதேச திருட்டு, வேலையின்மை, தீவிரவாத கும்பல்களில் சேர்வது போன்ற நிலைக்கு வந்து விட்டனர். திரிபுராவில் 25வருடங்கள் ஆட்சி செய்துள்ளனர் ஆனால் அங்கு உள்ள மக்களின் வாழ்க்கைத் தரம் உயராமல் போனதும், திரிபுரா பள்ளிக் குழந்தைகள் இந்தியத் தலைவர்களைப் பற்றி படிக்காமல் இந்த நாட்டுக்கே சம்மந்தம் இல்லாத ஸ்டாலின், லெனின், காரல்மார்க்ஸ் போன்றோர்களின் வரலாற்றை படித்ததுடன் அவர்களுக்கு ஆங்காங்கே சிலைவைத்து வேறு இந்திய தலைவர்களை அவமானப்படுத்தினர். பல இளைஞர்கள் நக்சல் அமைப்பில் இணைந்தும் உள்ளனர்.
கேரளாவில் கம்யூனிஸ்ட் மாற்றி மாற்றி ஆட்சி செய்ததன் விளைவு தன் மாநில மக்களுக்கு அங்கே ஒரு வேலையை ஏற்படுத்தாமல் வெளிநாட்டையே நம்பி இருப்பதோடு, இந்தியாவில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ந்த மாநிலத்தில் முதலிடம் பிடித்தது தான் மிச்சம்.
4. சீன கம்யூனிஸ்ட்கள் தன் நாட்டு தாய் மதமான புத்தா மதத்திற்க்கு எதிராக எப்போதும் செயல்படுவது இல்லை. சீனாவின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கட்டிக்காத்து வருகின்றனர்.
இந்தியா கம்யூனிஸ்ட்கள் எப்போதுமே இந்தியாவின் தாய் மதமான இந்து மதத்திற்கு எதிராக செயல்படுவதுடன், இந்தியாவின் பழமையான கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை அழிப்பதுதான் இவர்களின் நோக்கமே.
5. சீன கம்யூனிஸ்ட்கள் சீன கடல் வழி போக்குவரத்தை மேம்படுத்தி உருவாக்க, சீனாவில் பல துறைமுகங்களை உருவாக்கினர்.
இந்தியா கம்யூனிஸ்ட்கள் கடல் வழியை உருவாக்க சாகர்மாலா திட்டம் மூலம் துறைமுகங்களை உருவாக்குவதை கேரளா கம்யூனிஸ்ட் கொச்சி துறைமுகத்தை சாகர்மாலா திட்டத்துடன் இனைக்கும். மேற்கு வங்காள கம்யூனிஸ்ட் இதை ஆதரிக்கும். ஆனால் தமிழக கம்யூனிஸ்ட் கன்னியாகுமரி துறைமுகத்தை எதிர்க்கும்.
6. சீன கம்யூனிஸ்ட் தன் நாட்டு நிருவனங்களை மட்டுமே உலக அளவில் வளர்க்க நினைக்கும். இதன் மூலம் Huawei, oppo போன்ற பல நிறுவனங்கள் உலக அளவில் வளர்ச்சி அடைந்துள்ளன.
இந்தியவின் கம்யூனிஸ்ட் எக்காரணத்தைக் கொண்டும் இந்திய நிறுவனங்கள் ஆன TVS, TATA, L&T, RESILIENCE , ADANI Ltd. போன்றவை உலக அளவில் மட்டும் அல்ல, இந்தியா அளவிலையே வளர்ந்துவிடக் கூடாது. என்று உள்ளனர்.
7. சீன கம்யூனிஸ்ட்கள் சீனா முழுவதும் ஒற்றுமையாக இருந்து ஒரு திட்டத்தை நாடுமுழுவதும் அமல் படுத்துவர்.
இந்தியாவின் கம்யூனிஸ்ட்கள் கெயில் நிறுவனத்தின் குழாய் மூலம் எரிபொருள் கொண்டு செல்வதை, தமிழக கம்யூனிஸ்ட்கள் விலைநிலங்கள் கெட்டுவிடும். மனிதர்களுக்கு பாதிப்பு வந்துவிடும் என கூறி போராட்டம் நடத்தினர். ஆனால் கேரள கம்யூனிஸ்டுகள் கெயில் திட்டத்தை அந்த மாநிலத்தில் அமல்படுத்தி, அரசின் சாதனைத் திட்டமாக கூறி விளம்பரம் தேடிக்கொண்டுள்ளனர்.
8. சீன கம்யூனிஸ்ட்கள் எப்போதும்மே தீவிரவாத செயலுக்கும், தீவிரவாதத்திற்கும் ஒருபோதும் அனுமதி கொடுக்க மாட்டார்கள்.
இந்திய கம்யூனிஸ்ட்கள் உள்நாட்டு தீவிரவாத அமைப்புக்களான நக்சலைட்களுக்கு ஆதரவு கொடுப்பதுடன், போதிய பண உதவியும் செய்து கொடுத்து, இந்த நாட்டுக்கு எதிராக செயல்பட வைக்கின்றனர்...
9. சீன கம்யூனிஸ்ட் எப்போதும் தன் கொள்கையை மாறாமல் இருந்து சீனாவை ஆட்சி செய்கிறது.
இந்தியாவில் கம்யூனிஸ்ட்களின் நிலை இரண்டு அல்லது மூன்று ராஜ்யசபா சீட்டுக்காக ஊழலின் சமூத்திரமான காங்கிரஸ் மற்றும் திமுக விடம் மாற்றி மாற்றி கூட்டணி வைக்கும் கேவலமான நிலையில் உள்ளது...
இதைப்போன்று இன்னும் பல நிகழ்வுகள் உள்ளன. இதில் எதாவது ஒன்றை நான் கம்யூனிஸ்ட்வாதி என மார்தட்டிக் கொள்ளும் கம்யூனிஸ்ட்கள் மறுக்க முடியுமா??? இப்படி பட்ட நிலையில் உள்ளதால் தான் கம்யூனிஸம் இந்தியாவில் மேற்கு வங்காளத்தில் அழிந்து, திரிபுராவில் அழிந்து, இப்போது கேரளாவில் அழிவை துவங்கி உள்ளது....
மேலை கூறியது போல சீன கம்யூனிஸ்ட்களுக்கும், இந்தியாவின் கம்யூனிஸ்ட்களுக்கும் இவ்வளவு வேறுபாடுகள் ஏன்???.. இந்தியாவின் உள்ள கம்யூனிஸ்ட்களிடமே மாநிலத்திற்கு மாநிலம் வேறுபாடு இருப்பது ஏன்??? இப்படி பல வேறுபாடுகள் கொண்ட கம்யூனிஸ்ட்வாதிகள் தங்களை கம்யூனிஸ்ட் என்று கூறுவதைவிட வேறு ஒரு தங்களுக்கு ஏற்ற பெயரை வைத்துக் கொண்டு வளம் வாருங்கள்....... அதுதான் சிறந்தது.. கம்யூனிஸம் என்ற வார்த்தையை கலங்கடிக்காமல்லும் இருக்கும்..... நன்றி.... பொழிகால் கா.பாலதண்டாயுதபாணி. 🙏🙏🙏
No comments:
Post a Comment