Friday, 4 January 2019

ஏழைக் குடும்பத்தில் கிராமத்து மண்வீட்டில் பிறந்து வளர்ந்து,


https://www.facebook.com/100031528877743/posts/111808389880123/
.

ஏழைக் குடும்பத்தில் கிராமத்து மண்வீட்டில் பிறந்து வளர்ந்து,

ஒன்பது வயதிலேயே ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு , ஸ்வாமி விவேகானந்தரைத் தனது மானசீக குருவாக நினைந்து, பாலப் பருவத்தில்  சாது சேவை செய்து, 17 வயதில் இமயமலைக்குச் சென்று ஒன்றரை வருடங்கள் குகைகளிலும்,பாறை இடுக்கிலும் வாழ்ந்து , கிடைத்த கிழங்குகளையும் ,, பழங்களையும் உண்டு, எங்கிருக்கிறான் என்னவானான் என்று தாய்க்கும் மற்றவர்களுக்கும் கூடத் தெரியாமல் வாழ்ந்து, ,பிறகு வீடு திரும்பி மீண்டும் கைலாயம் சென்று வந்து,           தேனீர் விற்று,1971 யுத்தத்தின்போது போர்முனைக்குச் சென்ற வீரர்களுக்கு இலவசமாகத் தேனீர் வழங்கிச் சேவை செய்து, ஆர்எஸ்எஸ்ஸின சேவைப் பணிக்காகக் காட்டிலும் மேட்டிலும் அலைந்து, 2001ல் குஜராத் முதலமைச்சராகப் பொறுப்பேற்கும்படி வாஜ்பாய் அவர்கள் கேட்டபோது மறுத்து ,பிறகு எல்லோரின் வற்புறுத்தலின் பேரில் பொறுப்பேற்று, இரவு பகல் உழைத்து குஜராத்தை மாதிரி மாநிலமாக உயர்த்தி, உலகிலேயை மிகப் பிரம்மாண்டமான நர்மதை பாசனத் திட்டத்தை நிறைவேற்றி, பள்ளிப்படிப்பைப்  பாதியில் நிறுத்தக் காரணம் தனிக் கழிப்பறைகள் இல்லாததென்று அறிந்ததும் எல்லாப் பள்ளிகளிலும் மாணவிகளுக்குத் தனிக் கழிப்பறை கட்ட வைத்து, வீடுகளுக்குத் தானே நேரில் சென்று மாணவிகளைப் பள்ளிக்கு அனுப்பும்படி பெற்றோரைக் கேட்டுக் கொண்டு, தனக்கு வந்த பரிசுப் பொருள்களை அவ்வப்போது ஏலம் விட்டு பெண்குழந்தைகளின் கல்விக்கு நன்கொடையாக வழங்கி ,பிரதமரானதும் தனது தனிப்பட்ட சேமிப்பு அனைத்தையும் குஜராத் அரசு டிரைவர் மற்றும் கடை நிலை ஊழியர் சங்கத்துக்கு நன்கொடையாக அளித்து, தாயின் காலில் விழுந்து அவர் அளித்த ஆசியுடன் ஒரு ரூபாயையும் பெற்றுக் கொண்டு, அண்டை நாடுகளுடன் நல்லுறவை வேண்டி அந்நாடுகளின் தலைவர்களைத் தனது பதவி ஏற்பு விழாவுக்கு அழைத்து,  இந்தியாவின் சாபக்கேடாக இருந்த அசுத்தம்,திறந்த வெளிக் கழிப்பிடங்களை ஒழிக்க 'தூய்மை இந்தியா' திட்டம் கொண்டுவந்து, வங்கியின் பக்கமே போக முடியாத நிலையிலிருந்த கோடிக்கணக்கான ஏழைகளுக்கு ஜனதன் கணக்கைத் திறக்க வைத்து, வருடத்திற்குப்  12 ரூபாயிலும், 330ரூபாயிலும்  ஏழைகளுக்குக் காப்பீடு கொண்டுவந்து, பென்ஷன் இல்லாதவர்களுக்கு 'அடல் பென்ஷன் திட்டம்' கொண்டுவந்து, 100நவீன நகரங்கள் அமைக்கும் திட்டம், துறைமுகங்களை இணைக்கும் பாரத்மாலா திட்டம், சரக்கு ரயில்களுக்கான தனி ரயில்பாதைத்  திட்டம் கொண்டுவந்து, மின்வெட்டு அறவே இல்லாத நாடாக இந்தியாவை மாற்றி,, நாட்டின் அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி அளித்து, 7கோடி குடூம்பங்களுக்கு இலவச சமையல் இணைப்பு வழங்கி, நீர்வழிப்போக்குவரத்துத் திட்டம் தொடங்கி குறைந்த செலவில் சரக்குப்  போக்குவரத்தை நடத்தத் திட்டம் கொண்டுவந்து, மிகமிகக் குறைந்த பிரீமியத்தில் பயிர்க்காப்பீடு கொண்டு வந்து,மண்வள அட்டை தந்து, குறைந்தபட்ச விவசாயக் கொள்முதல் விலையை ஒன்றரை மடங்காக உயர்த்தி, 2022க்குள் விவசாயிகளின் லாபத்தை இருமடங்காக்கத் திட்டம் கொண்டு வநது ,50 கோடி பேருக்கு 5லட்சம் ரூபாய்க்கு மருத்துவக் காப்பீடு கொண்டுவந்து,  கோடிக்கணக்கான ஏழைகளுக்குப் பிரதமரின்  வீட்டு  வசதித் திட்டம் கொண்டுவந்து,  தொழில் தொடங்க  கியாரண்டி இல்லாமல் முத்ரா கடன் திட்டம் கொண்டு வந்து, காலாவதியான உளுத்துப்போன நூற்றுக்கணக்கான சட்டங்களைத் தூக்கியெறிந்து,   அட்டஸ்டேஷன் முறையை ஒழித்துத் தாங்களே தங்கள் ஆவணங்களில்  மக்கள்  சுயச்சான்றுக் கையொப்பமிடும் முறையைக் கொண்டுவந்து, இளைஞர்களின் வேலை வாய்ப்பை அதிகரிக்கத் 'திறன் இந்தியா' திட்டம் அமல்படுத்தி, ஊழலை ஒழிக்க 'டிஜிடல் இந்தியா' திட்டம் கொண்டு வந்து, பேட்டரி முதல் பிளேன் வரை  இறக்குமதி செய்து கமிஷன் வாங்கிய நிலையை மாற்றி 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தைக் கொண்டுவந்து, 'எழுந்து நில் தொழில் தொடங்கு' என்று 'ஸ்டாண்ட் அப் இந்தியா,,ஸ்டார்ட் அப் இந்தியா 'திட்டம் தொடங்கி, பெண்குழந்தைகளுக்காக'செல்வமகள் திட்டம்' தொடங்கி, இலங்கையில்  தூக்கில் தொங்கவிருந்த ஐந்து தமிழக மீனவர்களை உயிருடன் மீட்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து, இலங்கைத் தமிழருக்கு ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டிக் கொடுத்து, பாரதியாரையும் , வள்ளுவரையும் நாடு முழுமையும் கொண்டாட வைத்து, மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை அளித்து , கோடிக்கணக்கில் மருத்துவப் படிப்புக்குப் பணம் வாங்குவதை ஒழிக்க 'நீட் தேர்வு',கொண்டுவந்து,   காங்கிரஸ் திமுக வால் ஒழிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு மீண்டும் நடக்க வழி செய்து - இன்னும் இன்னும் இன்னும் பல நன்மைகளைச் செய்த பிரதமர்  மோடி செய்த தவறு --  கருப்புப் பண,கள்ளப்பண ஒழிப்புக்கான உயர் மதிப்புக் கரன்சி மதிப்பிழப்புத் திட்டம் , பலவரிகளை ஒழித்து ஒரே வரியாக வசூலிக்கும் 'ஒரே நாடு ஒரே சந்தை 'என்ற அடிப்படையில் ஜிஎஸ்டி கொண்டுவந்து வரி ஏய்ப்பைத் தடுத்தது,எல்லா மானியங்களையும் வங்கிக் கணக்கிலேயே நேரடியாகச் செலுத்தி கோடிக்கணக்கான ரூபாய்  கொள்ளையடித்ததைத் தடுத்தது , நினைத்த இடத்தில் குண்டு வைத்து அப்பாவி மக்களைக் கொன்று வந்த தீவிரவாதிகளின் கொட்டத்தை அடக்கியது,ஒரு தலைவன் என்ன,சாதாரணக் குடிமகனே   ஹிந்து என்று சொல்வது கேவலம் என்ற எழுதப்படாத விதியை மாற்றி 'நான் ஒரு ஹிந்து தேசியவாதி' சொன்னது இவைதான்!  இவற்றால் கடும் கோபமும்,,  ஆத்திரமும்  கொண்டவர்களுக்கு நரேந்திர தாமோதரதாஸ் மோடி என்ற மனிதரைக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. உஙகளுக்கு?  (Er.K.N.D.இரஞ்சித்குமார்)

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...