Friday, 23 November 2018

அரசியல் வாரிசு இல்லாத தலைவர்கள் பற்றிய உன்மையை தெரிந்து கொளவோம் .

அரசியல் வாரிசு இல்லாத தலைவர்கள் உண்மையை தெரியும் ந்து கொளவோம் .

டாக்டர் ராஜேந்திர ப்ரஸாத்தின் குடும்பத்தவர்களைப் பற்றி எந்த இந்தியருக்காவது தெரியுமா..?

மோஹமான மதன் மோகன் மால்வியாவின் குடும்பத்தவர்களைப் பற்றி எந்த இந்தியருக்காவது தெரியுமா..?

சர்தார் வல்லபாய் படேலின் குடும்பத்தவர்களைப் பற்றி எந்த இந்தியருக்காவது தெரியுமா..?

ஶ்ரீ லால் பஹதூர் சாஸ்திரி அவர்களின் குடும்பத்தவர்களைப் பற்றி எந்த இந்தியருக்காவது தெரியுமா..?

C.ராஜகோபாலச்சாரியார் அவர்களின் குடும்பத்தவர்களைப் பற்றி எந்த இந்தியருக்காவது தெரியுமா..?

பால் கங்காதர் திலக் அவர்களின் குடும்பத்தவர்களைப் பற்றி எந்த இந்தியருக்காவது தெரியுமா..?

அட P.V.நரசிம்மராவ் குடும்பத்தவர்களைப் பற்றி எந்த இந்தியருக்காவது தெரியுமா..?

அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் குடும்பத்தவர்களைப் பற்றியாவது  எந்த இந்தியருக்காவது தெரியுமா..?

அவர்களில் யாராவது மந்திரிகளாக இருக்கிறார்களா..? எந்த கட்சியிலாவது முக்கிய பொறுப்பில் அவர்கள் இருக்கிறார்களா..?
இல்லை அவர்களுக்குப் பிறகு அந்தப் பதவியை தன் வாரிசுக்குக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்களா..? இதுவரை இந்த நாட்டில் எந்த பலம் பொருந்திய அதிகாரியாகவாவது இருந்து தவறான பலன்களைப் பெற்றிருக்கிறார்களா..?

மேலே குறிப்பிட்ட ஒவ்வொருவரும் இந்த தேசத்திற்காக, அதன் சுதந்திரத்திற்காக, அதன் வளர்ச்சிக்காக செய்த பணி கணக்கிலடங்காது. தங்களுடைய வாழ்க்கையையே தியாகம் செய்து தேசத்தை படிப்படியாக வளர்த்தவர்கள் அவர்கள். அவர்கள் இந்த உலகில் பிறந்ததே பாரத தேசத்துக்காகப் பாடுபட மட்டுமே. அதன் பின் தங்கள் மரபுகளை மட்டுமே விட்டுச் சென்றனர். அந்த மரபுகளுக்கு எல்லையே கிடையாது.

இதோடு நேர்மையாகத் தேர்ந்தெடுக்கப்படாமலேயே குறுக்கு வழியில் பிரதமரான நேருவின் செயல்பாட்டை ஒப்பிட்டால்..?

தான் முதல் பிரதமர் என்பதை தவறாக அடைந்தது மட்டுமல்லாமல்.. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கழிந்த பிறகும், அத்தனை பணம், பதவி, பவிஷு அனைத்துமே தன் பரம்பரைக்கே வர வேண்டுமென்றும் அதுதான் பாரத மக்களின் தலைவிதி என்றும் நினைத்து, நிர்ணயித்து அதற்கேற்றாற் போல் காய் நகர்த்தியது மட்டுமே நேருவின் சாதனை.

இனிமேலும் இந்த அயோக்யத்தனம் நடவாமல் இருக்க வேண்டும்.

ஏனெனில் இன்றும்கூட பிரதமராக இருக்கும் தேசாபிமான மனிதர் மோதிஜி தனக்கென, தன் வாரிசுக்கென எதையுமே, ஏன் ஒரு கால்காசுக்கான ஆதாயத்தைத் தன் குடும்பத்திற்கு திசை திருப்பாதவரே பிரதமராக இருக்கிறார்.

அவரையும் குறை கூற எந்த அரசியல் வாதிக்கும் தகுதி கிடையாது.
நன்றி:  பிரேமா ஐயர்

__^___^___^___^___^___^___^___^___^___

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...