Friday, 23 November 2018

திருச்சியில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரி கிறிஸ்தவ கல்வி நிறுவனம்.

திருச்சியில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரி கிறிஸ்தவ கல்வி நிறுவனம்.

இது பாதிரியார்களால் நடத்தப்படுகிறது.

இதற்கு அரசினுடைய சலுகைகள் பல கொடுக்கப்படுகிறது.
அரசு சலுகை பெற்று நடக்கக்கூடிய ஒரு தன்னாட்சி பெற்ற ஒரு கல்வி நிறுவனம். வரக்கூடிய டிசம்பர் 6, டிசம்பர் 7 ஆகிய இரு தினங்களில் "பன்னாட்டு கருத்தரங்கம் "

"தமிழ் இலக்கிய பதிவுகளில் பெண் வன்கொடுமைகள் "

1. தொல்காப்பியம் வரையறுக்கும் பெண் மீதான கட்டுப்பாடுகள்
2. சங்க அக இலக்கியங்கள் சித்திரிக்கும் குடும்ப வன்முறைகள்
3. சங்க இலக்கியம் சித்திரிக்கும் பரத்தையர் ஒழுக்கம்
4. சங்ககாலச் சமூகத்தில் கொண்டி மகளிர்
5. புறத்திணைகள் காட்டும் பெண் வன்கொடுமைகள்
6. சிலப்பதிகாரம் காட்டும் உரைசால் பத்தினி - மறுவாசிப்பு
7. மணிமேகலை காட்டும் கணிகையர் சமூகம்
8. சீவக சிந்தாமணி எடுத்துரைக்கும் பலதார மணமுறை
9. கம்பராமாயணத்தில்
வெளிப்படும் ஆணாதிக்க சிந்தனைகள்
10 கம்பராமாயணத்தில் சூர்ப்பனகை சந்தித்த வன்கொடுமைகள்
11. வில்லிபாரதத்தில் பாஞ்சாலி சந்தித்த ஆணாதிக்க ஒடுக்குமுறைகள்
12. தனிப்பாடல்களில் வேசியர் ஏசல்
13. நீதி நூல்கள் திணிக்கும் பெண்ணடிமை சிந்தனைகள்
14 பெண் கதை மாந்தர்கள் வழி பழங்கதைகள் கட்டமைக்கும் பெண்ணடிமைத்தனம்

15. சமயங்கள் மறுக்கும் பெண்ணின் அடையாளங்கள் பெண்ணின்
16 உலா இலக்கியங்கள் கட்டமைக்கும் காமம்
17. நாட்டுப்புறப் பாடல்களில் காணலாகும் பெண்ணடிமை சிந்தனைகள்
18 குறவஞ்சி இலக்கியங்கள் வெளிப்படுத்தும்
19 பெண்களை பழித்துரைக்கும் பட்டினத்தார் பாடல்கள்
20 மாதவையாவின் முத்து மீனாட்சி புதினம் சித்தரிக்கும் பெண் வன்கொடுமைகள்
21. புதுமைப்பித்தனின் "பொன்னகரம்" கேள்விக்குள்ளாகும் கற்புக் கோட்பாடு
22. தி.ஜானகிராமனின்
"மரப் பசு" புதினத்தில் பெண் சுதந்திரம்
23 . ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் கண்டிக்கும் பாலியல் வன்முறை
24. வைரமுத்துவின் கவிதைகளில் முதிர்கன்னிகள் குறித்த பதிவுகள்
25 சோலை சுந்தரபெருமாளின் செந்நெல் சித்திரிக்கும் பெண் தொழிலாளிகள் மீதான வர்க்க ஒடுக்குதல்கள்...

இப்படி 40க்கும் மேற்பட்டத் தலைப்புகளில்  ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

மேற்படி கல்லூரி நிர்வாகம் இந்து சமய இலக்கியங்களை கம்பராமாயணத்தை வாழ்வியல் தத்துவங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு தவறான வரலாறுகளை ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்க செய்து அதை ஆவணப்படுத்த முயற்சிக்கிறார்கள்.

இது இலக்கியத்தில் எழுத்து பயங்கரவாதத்தை உண்மை வரலாறுகளை அழிக்கக்கூடிய வேலையை இந்த கல்லூரி நிர்வாகம் செய்து வருவது என்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது.

இது மத மோதலை உருவாக்கும் .

ஒரு இந்து தன்னாட்சி பெற்ற கல்லூரி நிர்வாகம் உதாரணத்திற்கு

மறுவாசிப்பு பைபிளில் பெண்ணடிமைத்தனம்;
இயேசு இறப்பில் சந்தேகம்;

கன்னிமரியாள் எப்படி கருத்தரித்தாள் ?

பாதிரியார்களின் லீலைகள்;

திருச்சபைகளில் வரக்கூடிய பெண்களுக்கு ஆபத்து ;

பாவமன்னிப்பு என்கின்ற பெயரில் கற்பழிப்பு...

இப்படி பல்வேறு தலைப்புகளில் விவாத பொருளாக மாற்றி ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தால் தமிழக அரசு வேடிக்கை பார்க்குமா?

வேடிக்கை பார்க்காது தானே.

அப்படி இருக்கையில் இப்படி ஒரு அகில உலக கருத்தரங்கை திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி நிர்வாகம் நடத்த வேண்டிய அவசியம் என்ன வந்தது?

இதுபோல் மதமோதல்களை உருவாக்கக் கூடிய வகையில் கருத்தரங்கம் நடத்த கூடி இந்த கல்லூரிக்கு அரசாங்கம் எப்படி நிதி உதவி செய்யலாம் ?

இந்த மாநாட்டு கருத்தரங்கு ஏற்பாட்டாளர்களை பாருங்கள்...
ஓரிருவரைத் தவிர மற்ற அனைவருமே கிறிஸ்தவர்கள்  பாதிரிகள் .

அன்னைத் தமிழை காக்க வேண்டுமென்று அனுதினமும் பாடுபடக்கூடிய அறிவுலக பெருமக்களே,
தமிழ் ஆர்வலர்களே,

இலக்கிய பெருமக்களே,

இந்து உணர்வாளர்களே,

உங்கள் அனைவரையும் நாங்கள் அழைக்கிறோம்.

தவறான வரலாற்று பதிவை,
புனைவுக்கதைகளை
ஆவணப்படுத்த முயற்சிக்கும் இந்த அயோக்கியத்தனத்தை முறியடிக்க அனைவரும் அணிதிரள்வோம்.

தமிழக அரசு மேதகு தமிழக ஆளுநர்,

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள்

மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்கள்

மாண்புமிகு தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி அவர்கள்

உயர்திரு கல்வி இயக்குனர் அவர்கள் ஆகியோர் தலையிட்டு உடனடியாக இந்த கருத்தரங்கத்தை தடுத்து நிறுத்துவதற்கு உரிய வழிமுறைகளை செய்ய வேண்டுகிறோம்.

இல்லை என்று சொன்னால் தமிழகத்தில் மத மோதல்களை உருவாக்குவதற்கு இந்த கருத்தரங்கம் ஒரு காரணமாக அமைந்துவிடும் என நாங்கள் அஞ்சுகிறோம்.

உண்மை வரலாறுகள் உள்ளபடி இருக்கட்டும் பொய்மை வரலாறுகள் பொடிப்பொடி ஆகட்டும்

இராம. இரவிக்குமார்
மாநில பொதுசெயலாளர்
இந்து மக்கள் கட்சி தமிழகம்
86430_81430
9655365696

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...