*தோல்விகளை அனுபவமாக்கிக் வெற்றிகளை எளிதாக்குங்கள்*
இன்றைய அவசர மயமான உலகத்தில் நாம் அனைவரும் நிம்மதியாக சாப்பிடவும், தூங்கவும், மனம் விட்டுப் பேசவும், சிரிக்கவும், சிந்திக்கவும் முடியாமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம். நம் வீட்டில் உள்ள பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் முதல் முதியவர் வரையில் அனைவருடைய மனமும் எண்ண ஓட்டத்தில் சிக்கித் தவிக்கிறது. இதனால் நாம் மன உளைச்சல் என்கின்ற மறைமுக உடல் நோய்க்கு ஆளாகிறோம். இதில் வயது வித்தியாசம் இல்லை. ஒரு வயது குழந்தை முதல் முதியவர்கள் வரை இதில் அடக்கம்.
இதற்க்கெல்லாம் முக்கிய காரணம், நாம் நமக்குள் இருக்கக் கூடிய திறமைகளை சரியாக அடையாளம் காணாமல், தன்னம்பிக்கையை இழந்து, அடுத்தவர்களை ஒப்பிட்டு, போட்டி, பொறாமைகளை வளர்த்து நம்மால் சுலபமாக செய்து முடிக்கக் கூடிய வேலைகளைக் கூட மனதைப் போட்டுக் குழப்பி, தன்னம்பிக்கை இழந்து மன உளைச்சலுக்கு ஆளாகிறோம்.
இறைவன் மனிதர்களை ஏதோவொரு திறமைகளுடன் தான் படைத்திருக்கிறான். அந்த திறமைகளை அடையாளம் கண்டு, அந்த துறையில் வெற்றி பெற வேண்டும். திறமைகளை வெளிக் கொண்டு வரும் பொழுது, எப்பொழுதும் வெற்றியே கிடைக்கும் என்ற கட்டாயம் இல்லை. முதல் முயற்ச்சியில் வெற்றி வரும் என்றும் சொல்வதற்க்கில்லை. முயற்ச்சியில் வரும் தோல்விகளையும், தடங்கல்களையும் அனுபவ படிக்கட்டுகளாக எடுத்துக் கொண்டு யாரெல்லாம் தொடர் முயற்ச்சி செய்கிறார்களோ அவர்கள் வெற்றிப் படிக்கட்டில் ஏறும் தூரம் வெகு தொலைவில் இல்லை.
பல்வேறுபட்ட நிகழ்ச்சிகளையும் தோல்விகளையும் தொடர் முயற்ச்சியினால் வெற்றிப் படிக்கட்டுகளாக்குவோம்
பிறர் தவறுகளைக் கண்டு சிரிக்காமல், சிந்தித்துப் பார்த்து அதை நம் அனுபவமாக எடுத்துக் கொண்டால், நம் முன்னேற்றம் எளிதாகும். அந்த விதத்தில் நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும், தோல்விகளையும், அனுபவமாக்கி வெற்றியை எளிதாக்கி முன்னேற்றப் படிக்கட்டுகளில் ஏறவும் முன்னேற்றப் பாதையின் முகவரியைக் காணவும், நிரந்தரமான ஒரு முகவரியை ஏற்படுத்தவும் இப்போதே தயாராவோம்...
No comments:
Post a Comment