Friday, 23 November 2018

பிஜேபிதான் இனி ஜம்மு&காஷ்மீரின் ஆட்சியை தீர்மானிக்கும்--

பிஜேபிதான் இனி ஜம்மு&காஷ்மீரின் ஆட்சியை 
தீர்மானிக்கும்--

ஜம்மு & காஷ்மீர் சட்டசபை கலைக்கப்பட்ட து என்று
கவர்னர் மாளிகை அதிகார பூர்வமாக அறிவித்து
ள்ளது. இனி ஆறு மாதத்திற்குள் பாராளுமன்ற தேர்தலோடு சேர்த்து இங்கும் தேர்தல் வரலாம்.

அப்பொழுது தேர்தல் வந்தாலும் இதே மாதிரி
குழப்ப நிலை தான் உண்டாகும்.ஏனெனில்
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் காஷ் மீர் ரீஜனில் 46 சட்டமன்ற தொகுதிகளும் இந்துக்கள்
பெருமளவில் இருக்கும்  ஜம்முரீஜனில் 37 தொகுதி களும்  பவுத்தர்கள் அதிகளவில் இருக்கும் லடாக் ரீஜனில் 4 சட்டமன்ற தொகுதிகளும் இருக்கிறது.

இதில் உமர் அப்துல்லா வின் தேசிய மாநாட்டு
கட்சியும் மகபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சி
யும் காஷ்மீர் ரீஜனில் செல்வாக்கு பெற்ற கட்சி
கள் பிஜேபி யும் காங்கிரஸ் கட்சியும் ஜம்மு லடாக்
ரீஜனில் செல்வாக்கு பெற்ற கட்சிகள்.

2002 தேர்தல் வரை காஷ்மீரி ல் தேசிய மாநாட்டு
கட்சியும் ஜம்மு வில் காங்கிரஸ் கட்சியும் தான்
கொடி கட்டி பறந்தன.ஜம்மு காஷ்மீர் தேர்தலா
கண்ணை மூடிக்கொண்டு தேசிய மாநாட்டு கட்சி
தான் ஆட்சியை பிடிக்கும். காங்கிரஸ் எதிர்க்கட்சி
யாக வரும் என்று கண்ணை மூடிக்கொண்டு கூறி விடலாம்.அந்த அளவிற்கு ஒன் சைடாகவே தேர்தல்
வெற்றி இருந்து வந்தது.

1999 ல் முப்தி முகமது செய்யது கட்சி ஆரம்பித்து
2002 ல் பிடிபி போட்டியிட ஆரம்பித்த பிறகு தான்
காஷ்மீர் அரசியலே மாற ஆரம்பித்தது.அதுவரை
காஷ்மீரி லேயே மெஜாரிட்டி க்கு தேவையான தொகுதிகளை பிடித்து ஆட்சி அமைத்து வந்த தேசிய மாநாட்டு கட்சி முப்தி் முகமது கட்சி ஆரம்பித்த பிறகு
நடைபெற்று ள்ள 2002 2008 2014 மூன்று தேர்தல்
களிலும் 28,28,15  என்று 30 க்கும் குறைவான
தொகுதிகளையே பிடிக்க முடிந்தது.

பிடிபி போட்டியிட்ட முதல் தேர்தலான 2002 ல் 16 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ் துணை
யுடன் ஆட்சிக்கு வந்தது.அதற்கு பிறகு மூன்று வருடம் கழித்து பிடிபி ஆதரவுடன் காங்கிரஸ்
ஆட்சி வந்தது.

2008  தேர்தலில்  தேசிய மாநாட்டு கட்சிக்கு 28
இடங்களும் பிடிபிக்கு 21 இடங்களும் கிடைக்க
தேசிய மாநாட்டு கட்சி 17 தொகுதிகளில் வெற்றி
பெற்று இருந்த காங்கிரஸ் துணையுடன் ஆட்சிக்கு
வந்தது.

2014 தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சிக்கு 15
தொகுதிகள் தான் கிடைத்தது. ஆனால்,பிடிபிக்கு
28 தொகுதிகள் கிடைத்த து .காங்கிரஸ் கட்சிக்கு
12 தொகுதிகள் மட்டுமே கிடைத்த து.ஆனால்
இந்த தேர்தலில் பிஜேபிக்கு 25 தொகுதி கள்
கிடைத்ததால் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக
உருவானது.

இனி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிஜேபி தவிர்க்க
முடியாத சக்தியாக உருவாகி விட்டதால்  தேசிய
மாநாட்டு கட்சியும் பிடிபியும் பிஜேபி யும் காங்கிரஸ்
கட்சியும் 87 தொகுதிகளை நான்காக பிரித்து
கொள்வதால் நிலையான ஆட்சிக்கு வாய்ப்பு
இல்லை.பிஜேபி யினாலும் தனித்து ஆட்சி அமைக்க
முடியாது. பிஜேபி துணையில்லாமலும்  யாராலும் ஆட்சி அமைக்க முடியாது என்கிற நிலையில்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அரசியல் குழப்பங்கள்
வருவது தவிர்க்க முடியாதது.

வரும் காலங்களில் பிஜேபி ஜம்மு ரீஜனில் மட்டு
மல்ல காஷ்மீர் ரீஜனிலும் எப்படியாவது ஜெயிக்க
நினைக்கும்.இதுவரை ஜம்மு லடாக் ரீஜனில் மட்டுமே இருந்த பிஜேபி இப்பொழுது காஷ்மீர்
ரீஜனிலும் காலூன்ற ஆரம்பித்து விட்டது.

கவர்னர் ஆட்சி இருந்த காலத்தில் ்தேசிய
மாநாட்டு கட்சியும் மக்கள் ஜனநாயக கட்சியும்
உள்ளாட்சி தேர்தலில் போட்டி யிடாமல் ஒதுங்கி
விட்டதால் பிஜேபியினர் காஷ்மீர் மற்றும் ஜம்மு பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்பு களில் நிறையஇடங்களில் வெற்றி பெற்று பரவலாக மாநிலம்உள்ள அரசு பதவிகளில் அமர்ந்து விட்டார்
கள்.

இதுவே பிஜேபிக்கு பெரிய வெற்றி தான். வருங் காலங்களில்  இவர்.களை வைத்தே கட்சியை
அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும். பிடிபி பிஜேபி கூட்டணி ஆட்சி கவிழ்ந்த உடனே பிஜேபி
ஆட்சி அமைக்க துணையாக  பிடிபி கட்சியில் இருந்து 20 பேர் எம்எல்ஏக்கள்  பிஜேபிக்கு ஆதர வாக வர இருந்தார்கள்.

ஆனால் அப்பொழுது பிஜேபி ஜம்முவில் உள்ள
எம்எல்ஏ தான் முதல்வராக வர வேண்டும் என்று
டிமான்ட் செய்தது. அதாவது பிஜேபி யை சார்ந்த
ஒரு இந்துவை முதல்வராக அமர்த்த விரும்பியது

ஆனால் இதற்கு காஷ்மீர் முஸ்லிம் எம்எல்ஏக்கள்
விரும்ப வில்லை. இதனால் தான் அந்த முயற்சி
தோற்று விட்டது. இப்பொழுது மீண்டும் பிஜேபி ஆட்சி அமைக்கபிடிபி ரிபெல் எம்எல்ஏக்கள் விரு ம்பிய நிலையில்பிடிபி  காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கவும் அதற்கு உமர்அப்துல்லா கட்சி வெளி யில் இருந்து ஆதரவு அளிக்கவும்  முடிவானது

இது யாரும் எதிர்பாராத ட்விஸ்ட் தான்.காரணம்
என்னவென்றால் உமர் அப்துல்லா எந்த ஒரு
சூழ்நிலையிலும பரம்பரை எதிரியான மெகபூபா் வின் பிடிபி ஆட்சியில் இருப்பதை விரும்ப மாட்டார்.
இருந்தாலும் காங்கிரஸ் கொடுத்த அழுத்தத்தினால்
பிடிபி காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு சம்மதம்
தெரிவித்து இருந்தார்

இந்த நிலையில் பிடிபி காங்கிரஸ் ஆட்சி அமையும்
என்று காங்கிரஸ் கனவில் இருக்க பிஜேபி சஜாத்
கனி லோன் மூலமாக ஆட்சி அமைக்க உரிமை
கோர வைத்தது..ஆக ஆட்சி அமைக்க ஆதரவு
கேட்கும் தேர்தலில் எதிர் எதிராக போட்டியிட்டு
கட்சிகள். எனவே இவர்கள் ஆட்சி அமைந்தாலும்
அது 6 மாதத்திற்கு கூட தாங்காது

எனவே கவர்னர் சட்டசபையை கலைத்து விட்டார்.
இதனால் லாபம் உமர்அப்துல்லாவுக்கு தான்.
இனி வரும் தேர்தலில் காஷ்மீர் ரீஜனில் தேசிய
மாநாட்டு கட்சிக்கு தான் அதிக தொகுதிகள் கிடைக்கும். ஜம்மு ரீஜனில் பிஜேபிக்கு அதிக
இடங்கள் கிடைக்கும்.

அப்பொழுதும் இதே குழப்ப நிலை  தான் வரும்.
ஜம்மு வில் பிஜேபி தலையெடுக்கும் வரை அங்கு
காங்கிரஸ் ராஜ்ஜியம் தான் இருந்ததால் காஷ்மீரி
ல் அதிக இடங்களை பிடிக்கும் கட்சியுடன் இணைந்து சுலபமாக ஆட்சி அமைத்து வந்தது.

இனி  இதற்கான வாய்ப்புகள் குறைவு தான் .எனவே
ஜம்மு&காஷ்மீர்  மாநிலத்தை இரண்டாக பிரித்து
ஜம்மு லடாக் பகுதிகளை கொண்டு ஒரு மாநில
மாகவும் காஷ்மீரை தனி மாநிலமாகவும் கொண்டு
வந்தால் நிர்வாக ரீதியாக காஷ்மீர் மாநில அரசு
குளிர் காலத்தில. ஜம்முவில் இருந்தும் வெயில்
காலத்தில் காஷ்மீரி ல் இருந்தும் செயல் படுவதால்
உண்டாகும் செலவுகள் குறையும்.

ஜம்மு மக்களின் நீண்ட நாள் கனவு தனி மாநிலமே
ஆனால் அதற்கு நிறைய முட்டுக்கட்டைகள்
இருக்கிறது.ஜம்மு காஷ்மீர் க்கு உள்ள  370 பிரிவின் படி ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் ஒப்புதல் பெற்ற
பிறகே ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எந்த
நிலப்பரப்பையும் மத்திய அரசு பிரிக்கவோ இல்லை இணைக்கவோ முடியும்.

அதனால் 370 பிரிவு இருக்கும் வரை ஜம்மு தனி
மாநில கனவு நிறைவேறாது. பிஜேபி யை தவிர
எந்த ஒரு கட்சியும் 370 பிரிவை நீக்க ஒப்பு கொள்ளா
த திரையில் ஜம்மு காஷ்மீர் மாநிலப்பிரிவினைக்கு
சாத்தியம் அல்ல.

அதனால் இனி எப்பொழுது தேர்தல் வந்தாலும் பிடிபி யோ இல்லை தேசிய மாநாட்டு கட்சியோ
பிஜேபி துணையுடன் தான் ஆட்சி அமைக்க முடியும்.
அது மீண்டும் ஆட்சி கவிழ்ப்பில் தான் வந்து நிற்கும்.
பிஜேபிக்கு உள்ள ஒரே சாய்ஸ் காஸ்மீரில் சஜாத்
கனி லோன் அவர்களின் ஜம்மு காஷ்மீர் மக்கள்
மாநாட்டு கட்சியோடு கூட்டணி வைத்து காஷ்மீர்
ரீஜனில் ஓரளவு தொகுதிகளை பிடித்தால் தான்
மறுபடியும் ஆட்சி அமைக்க முடியும்.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...