ஆலயங்களை நோக்கி நாம் ஏன் செல்ல வேண்டும்.?
ஆலயங்களை நோக்கி நம்மை ஏன் வரவைக்க வேண்டும்..?!
அகவழிபாட்டை மட்டுமே சிந்தையில் கொண்டு வாழ்வை வென்ற சித்தர் பெருமக்கள் ஏன் ஆலயங்களில் சென்று சமாதி நிலை அடைய வேண்டும்.?
#ஆலயங்களின் உட்பொருள் அறியாத பலர் அதை நிந்திக்கின்றனர்.அவதூறு பரப்புகின்றனர். இன்னும் சிலரோ நான் எத்தனையோ முறை ஆலயம் சென்று வந்துள்ளேன் யாருக்கும் எவ்வித தீங்கும் செய்ததில்லை ஆனாலும் வாழ்வில் எனக்கு எவ்வித நல்ல விஷயங்களையும் தெய்வம் செய்யவில்லை என்று குற்றம் கூறுவதையே வழக்கமாக வைத்துள்ளனர்.
ஆலயங்கள் சொல்லும் ஆன்மீக ரகசியங்களை புரிந்துகொள்ளாதவர்களின் அறியாமை வார்த்தைகள் அவை...
#ஆலயங்கள் நமக்கு சொல்லும் ரகசியங்கள்..!!
இந்த பிரபஞ்சம் அருளும் நம்முடைய சாதாரண புலன்களுக்கு புலப்படாத பேரின்ப நிலையை நாம் அடைய வேண்டுமானால் நம்முடைய ஆன்மா செயல்படும் ஆறுவகையான நிலைகளைகடந்து வரவேண்டும் அப்படி கடந்து உள்ளே வாருங்கள் பேரின்ப நிலையை உங்களுக்கு உணர்த்துகிறேன் என்கிறது ஆலயம்.
ஆறு வகையான நிலைகள்.
*************************************
1.பூதான்மா.
2.அந்தரான்மா.
3.தத்துவான்மா.
4.சீவான்மா.
5.மந்திரான்மா.
6.பரமான்மா
நம்முடைய ஆன்மாவின் மாறுபட்ட ஆறுநிலைகள் தான் இவை.
மனிதன் என்றால் அவன் உடம்பல்ல,குணமல்
ல,அறிவுமல்ல,அவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்ட ஆன்மாதான் மனிதன் என்பவன்.ஆன்மா என்பது நம்மில் இயங்குவது நம்மை இயக்குவது.
*ஒருவன் தன்னுடைய உடல்தான் தான் எனவும் அது மட்டுமே நிஜம் என்றும் நினைத்து வாழும்பொழுது அவன் #பூதான்மாவாகிறான்...
*தன் இச்சைகள் விருப்பு வெறுப்புகள் இவற்றை தனக்குள் உட்க்கொள்ளும்பொழுது அவன் #அந்தரான்மாவாகிறான்....
*பஞ்ச பூதங்கள் முதல் ஆன்ம தத்துவங்கள் வரை அறிய முற்படும் மனதை தானாக கொள்ளும்பொழுது அவன் #தத்துவான்மாவாகிறான்...
*அதன் பயனாக மேல்சொன்ன அனைத்தையும் அடக்கி ஆண்டு நானே பிரம்மம் என்று ஆணவ முனைப்பில் உணரும்பொழுது அவன் *#சீவான்மாவாகிறான்.
நான் ,எனது என்ற நிலைப்பாட்டில் இருந்து விலகி சிவம் நிலை அடைய வேண்டி மந்திர உபாசனையில் நிற்கும்பொழுது அவன் #மந்திரான்மாவாகிறான்...
கடைசியில் இறையோடு இரண்டற கலக்கும் அந்த நொடியில் அவன் #பரமான்மாவாக மாறுகிறான்...
இதையே ஆலயங்களில் வைத்து பொருத்தி பார்த்தோமானால்
1. முன்கோபுரம் -- பூதான்மா
2. பலிபீடம் -- அந்தரான்மா
3.கொடிமரம் -- தத்துவான்மா
4. மூலவர் -- சீவான்மா
5. இறை மந்திரம் -- மந்திரான்மா
6. பரவெளி -- பரமான்மா
*ஒரு ஆலயத்தின் உள்ளே நுழையும் முன்பாக நம்மை வரவேற்பது முன்கோபுரம்.அந்த இடம் வந்த உடன் பூதான்மாவை அழிக்க வேண்டும்.அதாவது இந்த உடல் தான் நான் என்ற எண்ணத்தை அடியோடு அகற்ற வேண்டும்.அகற்றிவிட்டு தான் உள்ளே நுழைய வேண்டும்..!
*இரண்டாவதாக நாம் காண்பது பலிபீடம் இங்கே அந்தரானாமாவை ஒழிக்க வேண்டும்.அதாவது தன் இச்சைகள் விருப்பு வெறுப்பு ஆகியவற்றை அங்கே அழித்துவிட வேண்டும்.அதன் பின்னர் தான் உள்ளே நுழைய வேண்டும்...!
*மூன்றாவதாக கொடிமரம் அங்கே தத்துவான்மாவை ஒழிக்க வேண்டும்.அதாவது மனம் தான் நான் என என்னும் அந்த நிலையை அழைத்துவிடல் வேண்டும்.அதாவது மனம் அங்கே வேரறுக்க வேண்டும்...!
*நான்காவதாக நாம் காண்பது மூலவர்.அங்கே தான் நம்முடைய சீவான்மா அளிக்கப்பட வேண்டும்.அதாவது நம்முடைய ஆணவம் அனைத்தும் நாமே என்ற ஆணவம் அங்கே அழிக்கப்பட வேண்டும்..!
*ஐந்தாவதாக நாம் உணர்வது வேண்டுதல் மற்றும் இறை மந்திரம்.
அதனை செய்யும் போது நம்முடைய மந்திரான்மா மறைந்துவிடல் வேண்டும்.அதாவது பேரின்ப வீடு வேண்டி நின்ற அந்த ஆன்மா அந்த நிலைக்கு செல்ல வேண்டும...!
*ஆறாவதாக நாம் காண்பது தீப ஒளி
அதாவது கற்பூர ,தீப ஆரத்தி காட்டும்பொழுது
நாம் இறையோடு இரண்டற கலந்து நிற்கும் பரவெளி நிலையான பரமான்மா செல்ல வேண்டும்.
இந்த வகையில் ஆறு வகை பேதங்களை அதாவது ஆறு வகை ஆன்மபேதங்களை நாம் கடந்து சென்றோமானால் நாம் இறையுடன் இரண்டற கலக்கும் அந்த உன்னத நிலைக்கு செல்லலாம்.இதை உணர்த்துவதுதான் ஆலயங்கள்...
#கோபுரம் முதல் தீபம் வரை அதன் நிலைகளில் நாம் சரியாக கடந்து சென்றோமானால் நாம் பேரின்ப நிலையை அடையலாம்.இதை உணரத்தான் ஆலயங்கள் அமைத்தார்கள்.அந்த தத்துவங்களை நாம் உணரத்தான் சித்தர் பெருமக்களும் அங்கே சமாதி நிலைக்கு சென்று அமர்ந்தார்கள்.
அற்புதமான நிலைக்கு செல்ல வேண்டிதான் இந்த அமைப்பே தவிர வேண்டுதல் செய்யவோ பூஜைகள் செய்ய மட்டும் அல்ல.
இந்த நிலையில் ஒரே ஒரு முறை சென்று பாருங்களேன்.நீங்கள் இறைசக்தியுடன் இரண்டற கலப்பதை உணர்வீர்கள்...
#நற்றுணையாவது_நமசிவாயவே..!!!
இறைவன் அருளால் ,
வாழ்க வளமுடன் !
வளர்க அருளுடன் !!
ஓம் நம சிவய நம ஓம் !
No comments:
Post a Comment