*நரேந்திர மோதி ஏன் ஒரு சிறந்த நிர்வாகி?*
இந்திய பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் போர் புரிந்திருக்கிறது.. இந்த நாட்டின் மீது போர் தொடுக்கும் நாட்டை சேர்ந்தவர்களின் சொத்துக்களை முடக்கி பாதுக்காக்க காங்கிரஸ் அரசு 1968 ல் Enemy Property Bill என்று ஒரு சட்டத்தை கொண்டு வந்தது.. அந்த சட்டத்தின் படி, எதிரி நாட்டு பிரஜைகளின் இந்தியாவில் இருக்கும் சொத்தை நம் நாட்டு அரசு கையகப்படுத்தி பாதுகாக்கலாம் என்கிற சட்டம்.. இது என்ன பைத்தியக்காரத்தனம் என்று தெரியவில்லை.. அவர்கள் சொத்தை நாம் ஏன் பாதுகாக்க வேண்டும்? பாகிஸ்தான் கூட 1971 அங்கே இப்படி ஒரு சட்டத்தை கொண்டு வந்தது.. ஆனால் இந்தியர்களின் சொத்துக்களை பாதுகாக்கவில்லை, மாறாக அதை வித்து பணம் பார்த்தது... நாம்தான் அதை இன்று வரை பாதுகாத்துக்கொண்டிருக்கிறோம்..
ஆனால் நரேந்திர மோதி அவர்கள் பிரதமரான பிறகு, அப்படிப்பட்ட சொத்து இந்த நாட்டில் எவ்வளவு இருக்கிறது என்று கணக்கெடுக்க சொன்னார்.. அதில் அவருக்கு கிடைத்த தகவல் மிகவும் அதிர்ச்சியளிக்க கூடியது.. ஆம்.. கிட்டத்தட்ட 9000 க்கும் மேற்பட்ட சொத்துக்களின் மதிப்பு ஒரு லட்சம் கோடிக்கு மேல்.. ஆனால் இந்திய அரசு அதை விற்க முடியாது.. இதற்கிடையில் பாகிஸ்தானை சேர்ந்த மஹ்முதாபாத் நகரின் (Pakistan) ராஜா, 2005 ஆம் ஆண்டு வந்து, என் சொத்துக்களை திரும்பக்கொடு என்று உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. காங்கிரஸ் அரசு கொண்டுவந்த சட்டப்படி, இந்திய அரசு சொத்துக்களை பாதுகாக்கத்தான் முடியுமே தவிர, உரிமை கொண்டாட முடியாது..
ஆனால் மோடி விடவில்லை.. 2017 ல் enemy property act எனும் புதிய சட்டதிருத்தத்தை கொண்டு வந்தார்.. அதாவது, இந்த நாடு வேண்டாம் என்று குடியுரிமையை துறந்து, நம் எதிரி நாடுகளுக்கு சென்றவர்களுக்கு, இந்த நாட்டின் சொத்து மீது எந்த உரிமையும் இல்லை.. அதை இந்திய அரசு தாராளமாக சொந்தமாக்கி, விற்கலாம் என்கிற சட்டம்.. இந்த நாடே வேண்டாம் என்றவருக்கு, இந்த நாட்டின் சொத்து மீது உரிமையில்லை என்ற சட்டத்திருத்தம்..
அதின் அடிப்படையில், இப்பொழுது இந்திய அரசாங்கத்துக்கு 1 லட்சம் கோடிக்கு மேல் வருமானம் கிடைக்க போகிறது.. அந்த சொத்துக்களின் ஏல நடவடிக்கை தற்போது ஆரம்பமாகி இருக்கிறது
அதுமட்டுமின்றி, சீனா போன்ற நாடுகள், இந்தியாவுடன் போர் புரிய தயக்கம் காண்பிக்கும்.. ஏனெனில் , பல சீனா நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்திருக்கின்றன.. அவைகளின் சொத்து மதிப்பு பல லட்சம் கொடிகள் தேறும்.. அப்படி போர் (சிறிய போரோ பெரிய போரோ) வந்தால், அந்த நிறுவனங்களின் சொத்துக்களெல்லாம் இந்திய அரசுக்கு போய்விடும்.. அதின் தாக்கம் அவர்கள் நாட்டில் பிரதிபலிக்கும்..
இப்படி நாட்டின் மீது அக்கறை உள்ள தலைவரை தரக்குறைவாகவும், நய்யாண்டி செய்தும் பேசும் கூட்டங்களெல்லாம் தலைகுனியட்டும்
http://businessworld.in/article/Govt-Begins-Process-Of-Selling-Enemy-Properties-Issues-Guidelines/26-03-2018-144576/
No comments:
Post a Comment