Tuesday, 6 November 2018

தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம் இல்லாமல் நமது குழந்தைகளை இலவசமாக படிக்க வைக்க முடியுமா*?

📢 *முக்கிய செய்தி*!

#தனியார்பள்ளிகளில் #கல்விக்கட்டணம் #செலுத்தாமல் #இலவசமாக
#கல்வி #பயில்வதுஎப்படி*?
👍👍👍👍👍👍👍👍👍👍👍

*இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் என்றால் என்ன*?

*RIGHT OF CHILDREN TO FREE AND COMPULSORY EDUCATION. ACT -2009*

*தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம்  இல்லாமல் நமது குழந்தைகளை  இலவசமாக படிக்க வைக்க முடியுமா*?

முடியும்!

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?

ஆம்.

*பள்ளிக்கல்வி -குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009 -ன் கீழ் பிரிவு 12 (1)  (C)  மற்றும் பிரிவு  13.(1) ஐ மத்திய அரசின் வழி காட்டு நெறிமுறைகளின் படியும் பள்ளிக்கல்வித் (சி2) துறை 18.012011 நாளிட்ட அரசாணை (நிலை) எண் :9 ன் படியும்  இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம்  அதற்கு வழி வகை செய்கிறது* LAACO /2018

*இந்த சட்டம்  ஆறு வயது முதல்  பதினான்கு  வயதுக்கு கீழ் உள்ள அனைத்து குழந்தைகளும் தனியார் பள்ளிகளில் இலவச கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம்* (சர்வ சிக்ஷா அபியான் SSA )
*கொண்டு வரப்பட்டது*

*இந்த சட்டத்தின் கீழ் யார் யார் குழந்தைகள் பயன் பெறலாம்*?

★ வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள்,

★ தாழ்த்தப்பட்டவர்கள்,

★ மலை ஜாதியினர், 

★ பிற்படுத்தப் பட்டவர்கள்,

★ மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்,

★ கல்வி உரிமை வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள்.

★ எய்ட்ஸ் நோயாளிகளின் குழந்தைகள்,

★மாற்றுத்திறனாளிகள்

★துப்புரவு தொழிலாளர்களின் குழந்தைகள்

★ மூன்றாம் பாலினத்தவர்  (திருநங்கைகள்)

★ ஆண்டு வருமானம் இரண்டு லட்சத்துக்கு  கீழ் உள்ள முற்பட்ட வகுப்பினர்கள்.

நீங்கள் வசிக்கும் பகுதியில்  இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் சுற்றளவில்
இருக்கும் தனியார் பள்ளிகளில்  உங்களது  குழந்தைகளை கட்டாய கல்வி உரிமைச்சட்டம் (RIGHT TO EDUCATION ACT -2009)  R T E. ன்  கீழ் கல்வி கட்டணம் இல்லாமல் இலவசமாக சேர்க்கலாம்

குழந்தைகளுக்கு தேர்வுகள் (Test) அல்லது வாய்மொழி வினாக்கள் (Interview) கேட்க கூடாது.

குழந்தைகளின் இதர தகுதியினையோ, பெற்றோருடைய கல்வித்தகுதியினையோ கருத்தில் கொள்ளக் கூடாது.

அந்தந்த பள்ளிகளுக்கு தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ள கல்வி கட்டணங்களை மத்திய அரசு செலுத்தும்.

பெற்றோர்களின் ஆண்டு வருமானம் இரண்டு லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

*ஆரம்ப நிலை வகுப்பான L K G வகுப்பில் மட்டுமே சேர்ந்து கல்வி பயில முடியும்*

*மற்றும் முதல்  வகுப்பில் இருந்து செயல் படும் பள்ளிகளில் மட்டும் முதல் வகுப்பில்  சேர்ந்து கல்வி பயில அனுமதி உண்டு*

*L.K.G வகுப்பில் சேரும் குழந்தைகள்  8 -ஆவது வகுப்பு வரையிலும் இலவச கல்வி பயிலலாம்*

இந்த திட்டத்தின் கீழ் ஐந்தாம் வகுப்பு வரையிலும் உள்ள  தொடக்கப்பள்ளிகளில் சேரும் குழந்தைதள் ஆறாம் வகுப்பிற்கு எந்த பள்ளிகளில் வேண்டுமானாலும் சேர்ந்து  கல்வி பயிலலாம்.

*இடையில் எந்த ஒரு வகுப்புகளிலும் சேர்ந்து இலவச கல்வி பயில முடியாது*
*இதனை பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்*

பெற்றோர்கள் ஊர் விட்டு ஊர் சென்றாலும் அந்த பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளில் கல்வியை தொடரலாம்.

*அனைத்து தனியார் பள்ளிகளும்  25 சதவீதம்  இடங்களை  கட்டாய கல்வி  உரிமைச் சட்டத்தின் கீழ்  சேரும்* *குழந்தைகளுக்கு*
*கண்டிப்பாக  ஒதுக்கீடு செய்ய  வேண்டும்*

அதாவது ஒரு பள்ளியில் மொத்தம் 150 குழந்தைகள் சேர்ந்து கல்வி பயில அனுமதி இருக்கும் பட்சத்தில் அந்த 150 மாணவர்களின் எண்ணிக்கையில் இருந்து 25 சதவீதம்  அதாவது 37 குழந்தைகளுக்கு இலவச அனுமதி வழங்க வேண்டும்.

*ஆனால் சிறுபான்மை பிரிவினை சேர்ந்த முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் நடத்தும் தனியார்  பள்ளிகள் சிறுபான்மையினர்  பள்ளிகளாக வகைப்படுத்தப்பட்டு அந்த பள்ளிகளில் இலவச கல்வி பயில அனுமதி இல்லை*

எனவே இந்த பள்ளிகளை நாடி செல்லாதீர்கள்.

*இலவசக்கல்வி பயிலும் மாணவர்களிடம் இருந்து எந்தவிதமான கல்வி கட்டணங்களையும் பள்ளி நிர்வாகம் வசூலிக்க கூடாது*

*ஒரு சில பள்ளிகள் அரசிடம் இருந்து பணம் வரவில்லை.  கட்டணம் செலுத்துங்கள்  பணம் வந்ததும் திருப்பி வழங்குவதாக கூறுவார்கள்*

*அவ்வாறு நீங்கள் கட்டணம் செலுத்த தேவை இல்லை*

ஒரு குடும்பத்தில் எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் சேர்க்கலாம்.

உங்கள்  குழந்தைகளை தனியார் பள்ளிகள் சேர்க்க மறுத்தால்  உங்கள் மாவட்டத்தில் இருக்கும்  மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்,  மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர், மெட்ரிக்பள்ளி ஆய்வாளர்,  மெட்ரிக்பள்ளி இயக்குநர்,  இவர்களுக்கு புகார் செய்யுங்கள்.

சில பள்ளிகள் அனுமதி முடிந்து விட்டது என பொய்யான தகவல் வழங்குவார்கள்!

*கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் பற்றிய விபரங்களை அனைத்து பள்ளிகளும் பெற்றோர்களுக்கு தெரியும் வகையில்  தகவல் பலகை வைக்க வேண்டும்*

★எனவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி உங்கள் குழந்தைகளின் கல்வி  கனவினையும் நிறைவேற்றுங்கள்.

★கல்வி உங்கள் மிக அருகாமையில்!

★பெயர் தான் இலவசக்கல்வி !

★இது கேவலம் அல்ல!

★மத்திய அரசு கட்டணம் செலுத்துகிறது!

★கவலை வேண்டாம்!

★இது கனவல்ல!  நிஜம் !

★ *எப்படி எங்கு விண்ணப்பிக்க வேண்டும்*

*2018-2019 ஆண்டுக்கான இலவச கட்டாயக்கல்வி சேர்க்கை ஏப்ரல் மாதம் 20 ம் தேதி முதல் மே மாதம் 18 ந் தேதி வரையிலும் நடை பெற இருக்கிறது*

தமிழகம் முழுவதும் சிறுபான்மை பள்ளிகளை தவிர்த்து அனைத்து தனியார் பள்ளிகளிலும் L.K.G வகுப்பில் உங்கள் குழந்தைகளை சேர்க்கலாம்.

★ *விண்ணப்பம் செய்வது எப்படி*?

★சேர்க்கைக்கான விண்ணப்ப படிவத்தினை www.dge.tn.gov.in. என்ற இணைய தளத்தின் மூலமாக நீங்களே  விண்ணப்பிக்கலாம் .

1.மாவட்ட கல்வி அலுவலகம்

2.மாவட்ட உதவி தொடக்கக்கல்வி அலுவலகம்

3.மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம்

4.அனைவருக்கும் கல்வி இயக்கக வட்டார வள மையம்

5.மெட்ரிக்பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம்

6.மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம்.

7.அனைத்து தனியார் பள்ளிகள்

*ஒவ்வொரு பள்ளிகளிலும் 25 சதவீதத்திற்கு  மேல் விண்ணப்பம் பெறபட்டால்* (Randam Selection) குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்

★ *விண்ணப்பத்தின் போது வழங்க வேண்டிய ஆவணங்கள்*

1. பிறப்பு சான்று
2..குழந்தையின் புகைப்படம்
3.ஜாதி சான்று
4. வருமான சான்று
5.இருப்பிட சான்று
6.முகவரி ஆதாரம்

*இந்த ஆவணங்களை பெறுவது எப்படி*?

★ஜாதி சான்று, இருப்பிட சான்று, வருமான சான்று  இந்த மூன்று சான்றுகளையும் உங்கள் பகுதிகளில் செயல் படும் அரசு இ- சேவை மையம், மாநகராட்சி இ-சேவை மையங்களில்  ஒவ்வொரு சான்றுக்கும் ₹50 ரூபாய் கட்டணம் செலுத்தி  வாங்கி தயாராக வைத்து கொள்ளுங்கள்.

★இடை தரகர்களிடம் லஞ்சம் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள்.

★தனியார்  பள்ளிகளில்  L.K.G வகுப்பிற்கான  சேர்க்கை 02.04.2018 முதல் தான் விண்ணப்பம் பெறப்பட வேண்டும். அன்றைய தினம் மொத்த இடங்கள் எவ்வளவு என்பதினை பள்ளி தகவல் பலகையில் வெளியிட வேண்டும்.

★ஆனால் பல பள்ளிகளில் அரசு உத்தரவு நாட்களுக்கு முன்பாகவே LKG வகுப்பிற்கான. அட்மிஷன் வழங்கி விடுகிறார்கள்.
இது சட்ட விரோதமான செயலாகும்.

★இலவச அனுமதிக்கான மொத்த இடங்களின் விபரங்களை 10.04.2018 அன்று பள்ளி தகவல் பலகையில் வெளியிட வேண்டும்.

*இலவசக்கல்விக்கான விண்ணப்பங்கள் மற்றும் மொத்த இடங்கள்  குறிப்பிட்டு 16.04.2018 அன்று*
*பள்ளியின் பிரதான வாயில் அருகில் அனைத்து பெற்றோர்களுக்கும் தெரியும் வண்ணம் 10×8 அளவுள்ள பிளக்ஸ் பேனர் வைக்க வேண்டும்*

★ *20.04.2018 முதல் 18.05.2018 வரை இணைய தளம் வாயிலாகவும் மேற் குறிப்பிட்டுள்ள கல்வி அலுவலகங்கள் வாயிலாகவும் தனியார் பிரவுசிங் சென்டர்கள் மூலமாகவும் எந்த பகுதியில் இருந்தும் நீங்கள் விண்ணப்பம் செய்யலாம்*

*தேர்வு செய்த குழந்தைகளின் விபரங்கள் மற்றும் நிராகரிக்கப்பட்ட குழந்தைகளின் விபரங்கள் 21.05.2018 அன்று மாலை 5.00 மணிக்கு பள்ளிகள் தகவல் பலகையில் வெளியிட வேண்டும்*

*கூடுதலாக பெறப்பட்ட விண்ணப்பங்கள் 23.05.2018 அன்று கல்வி அலுவலர் மற்றும் இரண்டு பெற்றோர் முன்னிலையில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட வேண்டும்*

★ *இலவசக்கல்வி என்பதினை பல பெற்றோர்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர்*.

★இதற்கு காரணம் போதிய விழிப்புணர்வு இன்மையே!

★இது தமிழகத்தில் 2013 ஆம் ஆண்டு முதல் தான் முழுமையாக செயல் படுத்தப்பட்டது.

★ஆனால் பெரும்பான்மையான தனியார் பள்ளிகள் இப்படி ஒரு சட்டம் இருப்பதினை வெளி காட்டி கொள்ளவில்லை.

*இவர்கள் பள்ளிகளில் கட்டணம் கட்டி சேர்ந்த ஒரு சில குழந்தைகளை மட்டும் தேர்வு செய்து உங்கள் குழந்தைக்கு அரசிடம் இருந்து ₹5000 ரூபாய் உதவி தொகை கிடைக்க ஏற்பாடு செய்கிறோம் ஆவணங்களை கொடுங்கள் என கேட்டு வாங்கி கொண்டு  அதனை பெற்றோர்களுக்கு வழங்காமல் ஏமாற்றி வந்தனர்*

★ஏதோ இலவசக்கல்வி குறித்து அறிந்த ஒரு சில பெற்றோர்கள் கேட்டால் அனுமதி முடிந்து விட்டது என பொய் சொல்லி வந்தனர்.

★இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற காரணத்தினால் அரசு 2017-2018 கல்வி ஆண்டு முதல் ஆன்லைன் விண்ணப்பம் செய்யும் முறையினை கொண்டு வந்தனர்.

★2016-2017 கல்வி ஆண்டில் ஒரு லட்சம் இலவச இடங்கள் நிரம்பி உள்ளது.

★2017-2018 ஆம் கல்விஆண்டில்
2,36000.இரண்டு இலட்சத்து முப்பத்தாராயிரம்  காலி இடங்கள் உள்ள நிலையில் வெறும் 40 000 நாற்பதாயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பியது.

★எனவே அரசு இலவச சேர்க்கைக்காக கால நீட்டிட்பு செய்தனர்.

*2018 -2019 ஆம் கல்வி ஆண்டில்  100 சதவீதம் இலவச சேரக்கை  நடை பெற வேண்டும் என அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது*

*ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட கல்வி ஆய்வு குழுவினர் இலவச கல்வி பயிலும் பெற்றோர்களை சந்தித்து ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும்*

★ஆனால் இந்த ஆய்வு கூட்டங்கள் வெறும் கண்துடைப்புக்காக மட்டும் நடத்துகிறார்கள் . 

★இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அரசு பல உத்தரவுகளையும் அரசாணைகளையும் அறிவித்துள்ளது.

★ஆனால் பெரும்பான்மையான பள்ளிகளில் இந்த உத்தரவுகள் முழுமையாக கடை பிடிக்க படுவதில்லை.

★ *தனியார் பள்ளி நிர்வாகிகளான கல்வி கொள்ளையர்கள் கொடுக்கும் லஞ்சத்தினை பெற்றுக்கொண்டு கடமை தவறிய கல்வி அலுவலர்கள் இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை*

*மெட்ரிக்பள்ளிகள் ஆய்வாளர்கள் தான் இந்த கல்வி கொள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனம்*

*இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரம் உள்ள  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கண் இருந்தும் குருடர்களாய் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கின்றனர்*!

பெற்றோர்களே!
நண்பர்களே !
சமூக ஆர்வலர்களே!
சமூக அமைப்பினை சார்ந்தவர்களே !

*தனியார் பள்ளிகளில் இலவச கல்வி பயில்வது குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்*

*உங்கள் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்பட்டாலோ*
*கல்விக் கட்டணம் ஏதேனும் வசூலிக்கப்பட்டாலோ அல்லது பள்ளி நிர்வாகிகளினாலோ* *கல்வி அதிகாரிகளினாலோ  நீங்கள் மிரட்டப்பட்டாலோ மேலும் இது சம்பந்தமான கூடுதல் தகவல் தேவை பட்டாலோ உங்களுக்கு வழி காட்ட. எங்களை தொடர்பு கொள்ளுங்கள்*

*மேலும்  இலவச கல்விக்கு நீங்கள் கட்டணம் செலுத்தி இருந்தால் அதனை திரும்ப. பெற்று தருவதற்கும்*  *தனியார்  பள்ளிகளுக்கு .கல்விக்கட்டண நிர்ணய குழுவினரால் நிர்ணயிக்கப்பட்ட அரசு கல்விக்கட்டணங்களை செலுத்திடவும்  .ரசீது இல்லாமல் கூடுதலாக கல்வி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள்*  *குறித்து புகார் அளிக்க வேண்டுமானால்*
எங்களது
" *தனியார் பள்ளி புகார்* *98655 90723* *என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு*
*உங்களது பெயர் ஊர் குறிப்பிட்டு அனுப்புங்கள்*

மாறுங்கள்! மாற்றுங்கள்!!

கொடுக்க வேண்டாம் லஞ்சம்!!

எல்லோரும் லஞ்சம் கொடுக்கிறார்கள்! அய்யய்யோ நமக்கு எதுக்கு வம்பு! 
நமது குழந்தைக்கு பாதுகாப்பு யார்?
அவர்கள் கேட்கும் கட்டணத்தினை எப்படியாவது கடன் வாங்கியாவது கட்டி விட வேண்டும் என்று நீங்கள்  நினைக்கும் காரணத்தினால் தான் இந்த கொள்ளையர்கள் சுக போகமாக வாழ்கிறார்கள்.

*கவலை வேண்டாம்*!!
*உங்கள் குழந்தைகளுக்கு முழு பாதுகாப்பு பள்ளி நிர்வாகம் வழங்கும் என உறுதி மொழி கொடுத்து தான் பள்ளிக்கு உரிமம் பெறுகின்றனர்*

*அரசு நிர்ணயம் செய்துள்ள கல்வி கட்டணங்களை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளி நிர்வாகிக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை உண்டு*

*கல்வி கொள்ளையர்களை சிறைக்கு அனுப்புவோம்*🤝
💥💥💥💥💥💥💥💥💥💥💥
✍ *இலவசக்கல்வி விழிப்புணர்வு பணியில்*
வாழ்த்துக்களுடன்............
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்

" *சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு* "
*LEGAL AWARENESS AND ANTI -CORRUPTION ORGANIZATION*
363, காந்தி ரோடு,
பெரியார் காலனி,
திருப்பூர் -641 652
மின்னஞ்சல் :nanjillaacot@gmail.com

# *முக்கிய அறிவிப்பு*
*நிர்வாகிகளின் தொடர்பு எண்கள் மற்றும் தொடர்பு கொள்ளும் நேரம் அறிவித்துள்ளோம்*
*இந்த நேரங்களில் மட்டும் தொடர்பு கொண்டு பயனடையுமாறு வேண்டுகிறோம்*

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்,
உலாபேசி :98655 90723
தொடர்பு நேரம் : *தினமும்  இரவு 9.30 முதல் 10.30 வரையிலும்*

அரியலூர் ரா. சங்கர்
மாநில தலைவர்
உலாபேசி :98655 43303
தொடர்பு நேரம் : *தினமும் காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை மற்றும்  மாலை 5.00 மணி முதல் 8.00 மணி வரையிலும்*

ரா.கோபால்சாமி
மாநில துணை தலைவர்
உலாபேசி :98422 98761
தொடர்பு நேரம் :
*தினமும் இரவு 9.00 மணி முதல் 10.00 மணி வரை*

ஆ.பழனிக்குமார்
மாநில அமைப்பு செயலாளர்
உலாபேசி :97910 50513
*தொடர்பு நேரம் : நாள் முழுவதும்*

கோ.தாணு மூர்த்தி
மாநில பொருளாளர்
உலாபேசி :99438 14132
*தொடர்பு நேரம் : மாலை :5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை*

*தமிழகம் முழுவதிலும் உள்ள தனியார் பள்ளிகளில் அரசு அறிவித்துள்ள படி 100 சதவீதம் இந்த கல்வி ஆண்டில் ஏழை எளியவர்களின் குழந்தைகள் இலவச கல்வி பெற்று பயனடைய வேண்டும் என்பதே எங்களின் இலட்சியம்*

எங்களின் இலட்சியம் நிறைவேறிட
நண்பர்களே  படித்து விட்டு உடனடியாக மற்றவர்களுக்கு பகிருங்கள் உங்களால் ஒரு ஏழை குழந்தையாவது பயனுள்ள

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...