Hypocrisy of "தமிழன் "ஸ் at its best!!
Courtesy : unknown!
1. நாட்டின் மிகப்பெரிய பிரதமர் பதவி வகித்த ராஜிவ் காந்தியை குண்டு வைத்து படுகொலை செய்த வழக்கில் அவன் தமிழனாக இருப்பதனால் அவனை விடுதலை செய்ய வேண்டும். தீவிரவாதி கொலைகாரனாக இருந்தாலும் தமிழன் என்பதால் அவனை விடுதலை செய்ய வேண்டும் என்போம். கொலைகார தீவிரவாத கும்பலின் நளினிக்கும் முருகனுக்கும் கட்டில் வரை ஏற்பாடு செய்து தருவோம். அவர்களின் பிள்ளயை லண்டனில் டாக்டர்க்கு படிக்க வைத்து மகிழ்வோம்.
2. இந்தியா முழுக்க எடுக்கும் எண்ணெயோ எரிவாயுவோ எங்க தமிழ் நாட்டில் மட்டும் எடுக்கவே கூடாது. ஆனா எல்லாரும் கேஸ் அடுப்புதான் பயன்படுத்துவோம்.
அதாவது எல்லா வசதியும் எங்களுக்கு வேணும் ஆனா நாங்க எங்க மண்ணுல அனுமதிக்க மாட்டோம்.
3. 24 மணி நேரமும் கரண்ட் இருக்கணும் ஆனா இந்தியாவில எங்க வேணும்னாலும் அணுவுலைய வச்சுக்கோ எங்க தமிழ் நாட்டுல வைக்க கூடாது.
4. மழை பெய்து வெள்ள நிவாரணம் கேப்பபோம் அடுத்த வருசமே வறட்சி நிவாரணமும் கேப்போம் குடுக்கணும்.
5. அடிமைப்படுத்தி ஆண்ட ஆங்கிலத்தை படிப்போம். இந்தியாவில் அதிகமாக பேசப்படும் இந்தியை உள்ளே நுழைய விடமாட்டோம். தன் வீட்டு பிள்ளைகளை ஹிந்தி டியூசனில் கொண்டு போய் விட்டு விட்டு அப்டியே போய் இந்தி எதிர்ப்பு போராட்டத்துல கோசம் போடுவோம்.
6. பள்ளிகளில் தரமுள்ள பாடத்திட்டம் இல்லையென்போம். ஆனால் மத்திய அரசின் இலவச நவோதயா பள்ளியை உள்ளே நுழைய விட மாட்டோம்.
7. வருசா வருசம் காவேரிக்கு கையேந்துவோம் ஆனால் காவேரியாற்றில் மணல் அள்ளுவதை தடுக்க மாட்டோம்.
தடுப்பணைகளை கட்ட மாட்டோம்.
8. தமிழந்தான் பெரிய அறிவாளி என்று பீத்தி கொள்வோம் ஆனால் இந்தியா முழுவதும் எழுதக்கூடிய #NEET தேர்வை நாங்கள் மட்டும் எழுத மாட்டோம் என்று அடம் பிடிப்போம். கூகிள் சுந்தர் பிச்சை கோரக்பூர் #IIT யில் இந்தி தெரியாமலேயே படித்தார் என்று பீத்திக்கொள்வோம். ஆனால் வட இந்தியா காரன் தமிழ் நாட்டில் வந்து படிக்க கூடாது என்று பொங்குவோம்.
9. தமிழ் நாட்டில் மட்டும்தான் விவசாயம் பாதிக்கப்பட்டு விட்டது என்று இங்கிருப்பவனை எவனியும் கேள்வி கேக்க மாட்டோம் ஆனா டெல்லியில் போய் அம்மணமா ஓடுவோம்.
10. அண்டை நாட்டு தீவிர வாதியின் படத்தை வைத்து கொண்டு இங்குள்ள தமிழர்களை கொழுத்திவிடுவோம். அவனுக்கு நாடு வாங்கி கொடுக்க போகிறேன் என்று இங்கே மூத்திர சந்த்தில் கூட்டம் போட்டு முட்டு குடுப்போம்.
உடன் பிறந்த சகோதரனிடம் வரப்பு சண்டையில் மண்டையை பிளந்து விட்டு இலங்கை தமிழன் என் டொப்புள் கொடி உறவு என்று கொடி பிடிப்போம்.
11. சாதியை ஒழிப்போம் என்று சவுண்ட் கொடுத்து விட்டு சாதி சலுகைகளை பெற பல்லை இளித்து கொண்டு நிப்போம்.
12. மதமாற்றம் கூடாது என்போம் அப்போ மத மாற்ற தடைச்சட்டம் கொண்டு வருவோம் என்றால் அதை எதிர்ப்போம்.
13. பார்ப்பான் பார்ப்பான்னு அவன் இதையே நோண்டிக்கிட்டு இருப்போம்.. அப்போ பொது சிவில் சட்டம் கொண்டு வருவோமா என்றால் அதை எதிர்ப்போம்.
No comments:
Post a Comment