கேரளாவில் பிஜேபியின் அரசியல் முன்னேற்றம்-
கேரள அரசியலில் பி.சி ஜார்ஜ்பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பூஞ்சார் தொகுதியின் எம்எல்ஏ
தொடர்ந்து 6 முறை எம்எல்ஏ வாக இருக்கிறார்.
இதற்கு முன்பு கேரளா காங்கிரஸ் மணி பிரிவில்
இருந்து பூஞ்சார் தொகுதி எம்எல்ஏவாக இருந்துள் ளார்..
கடந்த தேர்தலில் ஜார்ஜ்மணி காங்கிரசில் இருந்து விலக்கபட்டதால் சுயேச்சையாக நின்று காங்கிரஸ்
கூட்டணி யில் இருந்து போட்டியிட்ட கேரள காங்கி ரஸ் மணி பிரிவு வேட்பாளர் ஜார்ஜ் குட்டி அகஸ்டி மற்றும் இடது சாரிகூட்டணி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் பி.சி ஜோசப் ஆகியவர்களை மண்ணை
கவ்வ வைத்து சுமார் 28 ஆயிரம் ஓட்டு வித்தியாச த்தில் வெற்றி பெற்று பூஞ்சார் தொகுதியின் செல்ல
பிள்ளையாக இருந்து வருகிறார்.
ஜார்ஜ் இப்பொழுது கேரள ஜனபக்ஷம் என்கிற
பெயரில் ஒரு தனிக்கட்சி யை நடத்தி வருகிறார்.
கேரளாவில் மணி காங்கிரஸ் கட்சிக்கு சிரியன்
கிறிஸ்தவர் களிடையே அதிக செல்வாக்கு உண்டு.
அதன் மூலமாகவே சிரியன் கிறிஸ்தவர் களின் ஓட்டுக்களை காங்கிரஸ் பெற்று வந்தது.
மணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியஜார்ஜ்
துவங்கி யுள்ள ஜனபக்ஷம் கட்சிக்கு சிரியன் கிறிஸ்தவர் களிடையே செல்வாக்கு அதிகரித்து
வருகிறது. கேரளாவில் பிஜேபி ஆட்சி யை பிடிக்கும்
அளவிற்கு வர வேண்டும் என்றால் கேரள மக்கள்
தொகையில் சுமார் 17 சதவீதம் இருக்கும் சிரியன்
கிறிஸ்தவர்களின் ஆதரவும் இருந்தால் தான்
சாத்தியமாகும்.
இதற்கான முயற்சி களில் ஈடுபட்டு வந்த பிஜேபிக்கு
ஜார்ஜ் இப்பொழுது தோள் கொடுக்க முன் வந்து
இருக்கிறார். அதிகாரப்பூர்வ மாக ஜார்ஜ் பிஜேபி
யோடு இணைந்து செயல்பட போவதாக அறிவித்து
விட்டார்.
அதற்காக கேரள சட்டசபையில் பிஜேபி
எம்எல்ஏ ஓ .ராஜகோபால் அமர்ந்து இருக்கும் சீட் டுக்கு அருகிலேயே தனக்கும் சீட் இருக்க வேண்டும்
என்று கேரள சட்டமன்ற சபாநாயகர் க்கு லெட்டர்
அளித்துள்ளார் என்பதை பார்க்கும் பொழுது மனுசன் பிஜேபிக்கு எவ்வளவு ஆதரவாக இருக்கி றார் என்று அறிந்து கொள்ளுங்கள்..
இன்னொரு குட் நியூஸ் தெரியுமா? பூஞ்சார் கிராம பஞ்சாயத்து துணை சேர்மன் தேர்தலில் கேரள ஜன
பக்ஷம் கட்சி வேட்பாளர் பிஜேபி யின் ஒரு உறுப்பி னர் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர் கள் உதவியுடன்
மார்க்சிஸ்ட் வேட்பாளரை தோற்கடித்து உள்ளார்.
அது மட்டுமல்லாது இடது சாரிகளின் பிடியில்
இருக்கும் உள்ளாட்சி அமைப்பின் தலைவர் களை
காங்கிரஸ் மற்றும் பிஜேபி உறுப்பினர்களின் துணை கொண்டு நீக்க இருப்பதாகவும் கூறி இருக்கிறார் .
ஏற்கனவே சபரிமலை பிரச்சினையில் பிஜேபிக்கு ஆதரவாக ஒட்டுமொத்த இந்துக்களும் துணைக்கு
வந்து விட்ட நிலையில் சபரிமலை பிரச்சினை யில்
குரல் கொடுத்து வரும் ஜார்ஜ் மூலமாக பிஜேபி
சிரியன் கிறிஸ்தவர் களை வளைத்து விட்டால்
வருகிற பாராளுமன்ற தேர்தலில் கேரளாவில் பிஜேபி கூட்டணி 5 தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்புள்ளது ..
ஆக கேரளாவில் பிஜேபியின் அரசியல் சரியான திசை யில் சென்றுக்கொண்டு இருக்கிறது
No comments:
Post a Comment