Friday, 11 January 2019

மூச்சுக்கு முப்பது தரம் இது பெரியவர் மண் என்று  கூறுவதும். பெரியார் மண்ணில் இதுலாம் நடக்காது அதுலாம் நடக்காது என்று பேசுவதும்,

மூச்சுக்கு முப்பது தரம் இது பெரியவர் மண் என்று  கூறுவதும். பெரியார் மண்ணில் இதுலாம் நடக்காது அதுலாம் நடக்காது என்று பேசுவதும், பெரியார் வந்ததால் தான் நீங்கலாம் படித்தீர்கள் இல்லைனா சும்மா அடிமையா திரிஞ்சுருப்பீங்க தெரியுமா??? அட நமது அப்துல் கலாம் ராக்கெட் விஞ்ஞானியாக உயர்ந்ததற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள் ! நம்ம பெரியார் தான் காரணம். இப்படி வம்படியாக பெரியார் என்ற பிம்பத்தை தூக்கிப் பிடிக்கும் தேவை ஒருபக்கம் அரசியல் காரணமாகவும் - இன்னொரு பக்கம் உழைக்காமல் ஈவேரா விட்டுச் சென்ற சில ஆயிரம் கோடி சொத்தை வைத்து காலத்தை ஓட்டும் கூட்டத்தின் தேவைக் காரணமாக கொஞ்சம் அதிகமாகத் தான் இவரைத் தூக்கி பிடிக்கிறார்கள். 

உண்மையில் இந்த ஈவேரா தான் தமிழகத்தைக் காப்பாற்றினார் என்ற ரேஞ்சிக்கு பேசுவதும் , அவர் இல்லை என்றால் இங்கே எதுவுமே நடந்திருக்காது என்ற அளவுக்குப் பேசுவது எல்லாம் சுத்த பிதற்றல்கள். 

Domino effect அப்படினு ஒண்ணு இருக்கு : 

வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட சீட்டு கட்டை - முதல் சீட்டை தள்ளிவிட அது ஒரு தொடர் நிகழ்வுகளை உருவாக்கி அனைத்தும் வீழும். இது போல சமூகமும் பத்து பேரை நம்ப வைக்க அந்தப் பத்தில் 4 பேர் நம்பினாலும் அவன் போய் நாற்பது பேரிடம் பேசி பரப்பிவிடுவார்கள். 

அந்த வகையில் நூலகங்கள் புத்தகங்கள் முதல் சாலைகளில் பெரியார் சிலைகளை திறப்பது தொட்டு ஊர் ஊருக்கு தெருக்களுக்கு , பேருந்து நிலையங்களுக்கும் , கல்லூரிகளுக்கும் பெரியார் அண்ணா என்று பெயர் வைத்து ஒரு மொத்த சமூகத்தையே இந்த விதம் தந்திரமாக வீழ்த்தியுள்ளது திராவிட கட்சிகள். 

எதோ  ஈவே ராமசாமி வரவில்லை என்றால் நமக்கு சுயமாக சிந்திக்கக் கூட தெரியாமல் போய் இருக்கும் என்ற தோணிக்கு பேசுவது எல்லாம் இந்த மொத்த மக்களை அவமானம் செய்யும் வேலை. இவர் வருவதற்கு முன் யாரும் தலைவர்கள் வரவே இல்லை என்ற தோணியில் பேசுவது அயோக்கியத்தனம் தவிர வேறு இல்லை. 

இது பெரியார் மண் என்று கூறுவது சரியா? இந்தக் கேள்விக்கு விடை கொடுக்க இந்த வீடியோவில் முயற்சித்துள்ளேன்.

வீடியோ லிங்க் : 

https://youtu.be/Mg6e6-X3cqU 

-மாரிதாஸ்

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...