Friday, 11 January 2019

திரிபுராவில் ஜான்சி ராணி கள்

திரிபுராவில் இந்திய வரலாற்றை எடுத்து செல்லும் ஜானசி ராணிகள்-

இந்த மகளிர் பேரணி எதற்காக நடை பெற்றது தெரியுமா?  நேற்று ஜான்சி ராணி லஷ்மி பாய்

அவர்களின் பிறந்த தினம்.தன்னுடைய மண்ணை காக்க .ஆங்கிலேயரை எதிர்த்து் போர்க்களம்

புகுந்து வீரமரணம் அடைந்த லஷ்மி பாயின்

தியாகத்தையும் வீரத்தையும் திரிபுரா மக்களின்

நினைவுகளில் பதிய வைக்க பிஜேபி யின் மகளிர்

பிரிவு நடத்திய ஊர்வலம் தான் இது.

பல வருடங்களாக திரிபுராவில் நடைபெற்ற இடது

சாரிகளின் ஆட்சியில் நம்முடைய தேசத்திற்கே

சம்பந்தம் இல்லாத காரல் மார்க்ஸ் லெனின்

சேகுவேரா  போன்றவர்களின் வரலாற்றையும்

அரசியலையும் திரிபுரா மண்ணில் திணித்த

வந்த இடதுசாரி களின் ஆட்சி முடிவுக்கு வந்து

அங்கு நம் தேசத்தின் வரலாற்றை நம் தேசத்தின் வாழ்வியிலான இந்து தர்மத்தை வழி எடுத்து

செல்லும் பிஜேபி ஆட்சி திரிபுராவில் அமைந்த

பிறகு  திரிபுரா மாநிலம்  மாறிக்கொண்டு வருகிறது

திரிபுராவின் அடையாளம் லெனினோ கார்ல்

மார்க்ஸோ இல்லை சேகுவேரா வோ அல்ல. திரி

புராவின் அடையாளம் அன்னை திரிபுரசுந்தரி

தான். அன்னை திரிபுர சுந்தரேஷ்வரியின் அடை யாளமாகத்தான் திரிபுரா என்கிற மாநிலமே இரு க்கிறது

.

ஒரு மதத்தையோ ஒரு மொழியையோ  அழிக்க

வேண்டும் என்றால் அதன் பாரம்பரிங்களை

அழிக்க வேண்டும். அப்படி ஒரு மதத்தின் பாரம்பரிய ம் மறக்கடிக்கப்படும் பொழுது அடுத்து வரும்

தலைமுறை அதன் நினைவும் அடையாளமும்

இல்லாமல் வளர்ந்து  வாழ்ந்து தன்னுடைய முன்

னோர்கள் கட்டிக்காத்த பாரம்பரிய த்தை அறியா

மலேயே வாழ்ந்து மறைந்து போகிறான்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு இழந்த

கானான் தேசத்தை உலகமெங்கும் நாடோடி களாக

திரிந்த யூதர்களால் எப்படி இஸ்ரேல் நாடாக திரும்ப

பெற முடிந்தது? அவர்கள் தங்களுடைய பாரம்பரிய

த்தையும் ஹீப்ரு மொழியையும் நாடோடிகளாக

பல நாடுகளில்  வாழ்ந்த பொழுதும் போற்றி தலை

தலை முறையாக கொண்டு சென்றதால் தான்

20 ம் நூற்றாண்டில்  சியோனிச இயக்கமாக தியோடர் ஹெர்சேல் தலைமையில் உருவாகி

இஸ்ரேல் என்கிற நாடு உருவாக காரணமாக

அமைந்தது.

அதனால் தான் பிஜேபி யும்  ஆர்எஸ்எஸ் அமைப்பு ம்

நம்முடைய பாரம்பரிய த்தையும் கலாச்சார த்தையும்

முன்னெடுத்து செல்கிறது. மேற்கத்திய நாகரிகங்

ளும்  கண்டம் விட்டு கண்டம் வந்த ஆபிரகாமிய

மதங்களும் இறக்குமதி இடதுசாரி அரசியலும்

இந்தியாவின் பாரம்பரிய த்தையும் கலாச்சார த்தை

யும் அழித்து வருகின்றன.

உதாரணமாக  திரிபுரா மாநிலத்தின் அடையாளம்

என்ன? உதய்ப்பூரில்  இருக்கும் திரிபுரசுந்தரி 

கோயிலில் வணங்கப்படும் அன்னை திரிபுரேஷ்வரி தான். இந்தியாவின் பாரம்பரிய த்தைஎடுத்து கூறும்

 51 சக்தி பீடங்களி்ல் திரிபுரசுந்தரிகோயிலும் ஒன்று. இந்த அன்னையின் பெயரால்தான் திரிபுரா மாநில த்திற்கே பெயர் வந்தது

தன்னுடைய மாநிலத்திற்கே அடையாளம் அளிக்கும்

ஒரு கோயிலை அந்த மாநிலத்தை ஆள்பவர்கள் எப்படி போற்றி வணங்க வேண்டும்? ஆனால் இடது

சாரிகளின் ஆட்சியில் அன்னை திரிபுரசுந்தரேஷ் வரியை யைஓரங்கட்டி வைத்து விட்டு இந்தியாவு க்கே சம்பந்தம்இல்லாத லெனினுக்கு சிலை எடுத்து வணங்கி வந்தார்கள்.

காலம் மாறியது திரிபுராவில் பிஜேபி ஆட்சியும்

வந்தது. அந்நிய நாட்டு அரசியல் நமக்கு எதற்கு

என்று மக்கள் லெனினை தூக்கி வீசினார்கள்.

பதிலுக்கு பிஜேபி அரசும் திரிபுராவில் முக்கிய

தொழிலான தேயிலை க்கு அன்னை திரிபுரேஷ்வரி

 யின் பெயரை சூட்டி யுள்ளது.

அதாவது நமது தமிழ் நாட்டில் உள்ள தேயிலை

தோட்டங்களில் உருவாகி விற்பனை க்கு வரும்

தேயிலையை டான்டீ என்கிறோம். அதே மாதிரி

திரிபுராவில்  58  தேயிலை தோட்டங்கள் இருக்கி ன்றன இங்கு உற்பத்தி யாகும் தேயிலையை

மாநில அரசு திரிபுரா டீ  டெவலப்மெண்ட் கார்ப்ப

ரேசன் லிமிடெட் (TTDCL)என்கிற பெயரில் விற்று வந்தார்கள்..

ஆனால் இப்பொழுது திரிபுரா அரசு இந்த தேயிலை க்கு திரிபுரேஷ்வரி டீ என்று பெயர் சூட்டியுள்ளது

இனி இந்தியாவில் மட்டுமல்ல உலகம் எங்கும்

இந்த திரிபுரேஷ்வரி டீ ஏற்றுமதி யாகும் பொழுது

வாட் இஸ் திரிபுரேஷ்வரி என்று கூகுளில் தேடு வார்கள் அல்லவா..  அப்பொழுது கூகுள் ..

திரிபுரேஷ்வரி என்பது இந்தியாவில் இருக்கும் திரிபுரா என்கிற மாநிலத்தில் உள்ள திரிபுரசுந்தரி கோயிலில் வணங்கப்படும் காளி தேவியின் பெயராகும் .இந்த அன்னை  இந்தியாவில் பெரும்பா லான மக்களால் வணங்க ப்படும் தெய்வமாகும்

உலகின் பழங்கால மதங்களில் முதலாவதான இந்து மததில் உள்ள சாக்தம் வழிபாட்டின் அடையாளம்

தான் இந்த கோயில்.. இது சக்தி பீடங்களில் ஒன்று.

இங்கு தான் அன்னை தாட்சாயினி யின் வலது

கால் விழுந்த பூமி உள்ளது என்று திரிபுராவின்

பெருமையையும் இந்து மதத்தின் தொன்மையை

யும் உலகிற்கு எடுத்து கூறும்..

அப்பொழுது இதை உணர்ந்த மற்ற மதத்தினர்

நாமெல்லாம் ஆண் யார் பெண் யார் என்று உணரும்

முன்பே இந்தியர்கள் பெண்ணிற்கு கோயில் கட்டி வணங்கி யுள்ளார்கள் என்று நம்முடைய பாரம்பரிய

த்தை அறிந்து வியந்து நிற்பார்கள்.

இதனால் தான் இந்தியாவில் முகலாய ஆட்சியிலும்

ஆங்கிலேய ஆட்சியிலும் பெயர் மாற்றப்பட்ட புண்ணிய பூமிகளின் பெயரை மாற்றி மீண்டும் 

நம்முடைய பாரம்பரியத்தின் அடையாளமாக இருந்த பெயர்களை சூட்டிக்கொண்டு இருக்கிறது.

இந்த பெயர் மாற்றங்களை பற்றி சிலர் கேலி

செய்வதோடு இந்து என்கிற பெயரையே கஜினி

முகமது வோடு இந்தியாவுக்கு வந்த அபுரேஹன் பெரூனி தான் வைத்தான் என்றும் அள்ளி விடு

கிறார்கள்...

மெகஸ்தனிஸ் தெரியுமா?  கிட்டத்தட்ட 2300 வருட ங்களுக்கு முன் இந்தியாவுக்கு வந்த கிரேக்க

வரலாற்று ஆசிரியர். அவர் இந்தியாவில் இருந்த

காலங்களில் இங்கே நடைபெற்ற நிகழ்வு களை

வைத்து ஒரு குறிப்புகளை இண்டிகா என்கிற 

பெயரில் எழுதி வைத்து இருந்தார்..

நல்லா  கேட்டுக் கொள்ளுங்கள்.. இப்போதைய

இந்தியாவை அதாவது மவுரியர் காலத்தில் இருந்து

துவங்கும் இன்றைய இந்தியா வின் வரலாறே

மெஸ்தனிஸ் குறிப்புகளில் இருந்து தான் நாம்

எடுத்து வைக்கிறோம்.

  

அந்த குறிப்புகளுக்கு அவர் வைத்த பெயர் தான்

இன்டிகா.. ஆக இந்து இந்தியா என்கிற ஒரு  வார்த்தை யை முன் வைத்து தான் அவர் கிரேக்க

த்தில் இண்டிகா என்று எழுதியுள்ளார்.இந்த

நிலையில் இஸ்லாமியர்கள்  இந்தியாவுக்கு வரும்

வரை இந்து என்கிற வார்த்தையே இல்லை என்று

கூறுவது கேணத்தனமானது.

அதாவது சிந்துவுக்கும் இந்துவுக்கும் வித்தியாசம்

தெரிந்து தான் மெகஸ்தனிஸ் இன்டிகா என்று

எழுதியுள்ளார். பலர் கூறுகிற மாதிரி சிந்துவில்

இருந்து தான் இந்து என்கிற வார்த்தை வந்து

இருக்கும் என்பதெல்லாம் காமெடியானது.

அப்புறம் இன்னொரு விசயம் ..இந்த இண்டிகா

என்கிற இந்திய வரலாற்றை கூறும் மெகஸ்தனி சின் வரலாற்று தொகுப்பை புத்தகமாக இண்டிகா

என்று கொண்டு வந்தவர்  மெகஸ்தனிஸ் இறந்த

பிறகு 200 வருடம் கழித்து அதே கிரேக்க மண்ணில் பிறந்த  ஏரியன் என்கிற சரித்திர ஆசிரியர் தான்.

இவர் இந்தியா வுக்கு வந்ததே கிடையாது.

பாருங்கள்.. இந்தியா வின் வரலாற்றை எழுதியவர் ஏரியன்.இது அந்த காலம்   இந்தியாவின் வரலாற் றை மாற் றியது ஆரியன் இது இந்தக்காலம்..அந்த

ஏரியன் தான் இந்த ஆரியனாக இருக்கலாம். அதாவது இந்துக்களை பிரிக்க ஆங்கிலேயர் அள்ளி

விட்ட ஆரியன் கதை இந்தியாவின் வரலாற்றை எழுதிய ஏரியனில் இருந்து கூட வந்து இருக்க

முடியும்...யார் கண்டது?

இப்படி நம்முடைய வரலாற்றையே  மாற்றிநம்மை ஏமாற்றி நம்மைஅடிமை படுத்திவர்கள்எழுதி விட்டு போய் விட்டார்கள்.இதையெல்லாம்நாம் மாற்றியே தீர வேண்டும்.அதனால் தான் அந்நிய மத ஆட்சி

யாளர்களால்  அழிக்க ப்பட்ட நம்முடைய கலாச்சார ம்

தாங்கிய நகரங்களின் பெயர்களை மாற்றி அதன்

பழைய பெயரை மீண்டும் சூட்டியும் நம்முடைய

தெய்வங்களின் பெயர்களை நம்முடைய மண்ணில்

விளையும் பொருட்களுக்கு வைத்தும்  பிஜேபி அரசு

நம்முடைய பண்பான்டை  நமக்கு நினைவூட்டி

உலகிற்கு எடுத்து செல்கிறது..

.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...