Friday, 11 January 2019

பொருளாதார வளர்ச்சியில் இந்தியா... * பிரான்சை பினனுக்கு தள்ளி முன்னேறியது

நம்பர்-6’...!* பொருளாதார வளர்ச்சியில் இந்தியா...

* பிரான்சை பினனுக்கு தள்ளி முன்னேறியது

* பணஇழப்பு, ஜி.எஸ்.டி.,யால் சாதனை

* மோடிக்கு உலக வங்கி பாராட்டு

புதுடில்லி

பணஇழப்பு மற்றும் ஜி.எஸ்.டி.,யால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிக வேகமா வளர்ச்சி அடைந்து வருவதாக கூறியுள்ள உலக வங்கி, பிரதமர் மோடியின்  சீர்திருத்தங்களால் மட்டுமே இப்படிப்பட்ட சாதனை நிகழ்த்ப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

சர்வதேச அளவில், பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்த நாடுகள் குறித்து, உலக வங்கி நேற்று வெளியிட்ட பட்டியலில், இந்தியா, ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.  வல்லரசான பிரான்ஸ் நாட்டை பின்னுக்கு தள்ளி, இந்தியா இந்த சாதனையை படைத்துள்ளது.

சர்வதேச அளவில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியலை, உலக வங்கி, ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. இதன்படி, 2017ம்  ஆண்டுக்கான பட்டியலை, உலக வங்கி நேற்று வெளியிட்டது; அதில் கூறப்பட்டுள்ளதாவது:

பட்டியல்

கடந்த, 2017ம் ஆண்டில், பொருளாதார முன்னேற்றம் அடைந்த நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது; இரண்டாவது இடத்தை சீனாவும், மூன்றாவது  இடத்தை ஜப்பானும் பிடித்துள்ளன. ஐரோப்பிய நாடுகளான, ஜெர்மனி நான்காவது இடத்திலும், பிரிட்டன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன. இந்தியா, 2.59 லட்சம் கோடி  அமெரிக்க டாலர் அளவிலான, மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன், ஆறாவது இடத்திற்கு  முன்னேறியுள்ளது. 

பிரான்ஸ், 2.58 லட்சம் கோடி டாலருடன், ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், மந்தநிலையில் இருந்த இந்திய பொருளாதார வளர்ச்சி, பிரதமர் மோடி  தலைமையிலான மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைகள் மற்றும் சீர்திருத்தங்களால், மீண்டும் எழுச்சி அடைந்துள்ளது. நுகர்வோர் செலவினம் அதிகரித்ததால், தயாரிப்பு  துறை பயன் அடைந்தது. இது, இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது.

எழுச்சி

பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி., அறிமுகம் போன்றவற்றால், பொருளாதார வளர்ச்சி, சற்று குறைந்தது. ஆசியாவில், சீனாவின் பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்துள்ள நிலையில், 10 ஆண்டுகளுக்கு உள்ளாகவே, மொத்த உள்நாட்டு உற்பத்தியை, இரு மடங்கு உயர்த்துவதில், இந்தியா நல்ல முன்னேற்றத்தை அடைந்து உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தனி நபர் வருவாய்

மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையிலான, தனி நபர் வருவாயில், இந்தியா, பிரான்சை விட, 20 மடங்கு பின்தங்கியுள்ளது; இதற்கு, இரு நாடுகளின் மக்கள் தொகையில்  உள்ள வித்தியாசம் தான், காரணம். இந்தியாவின் மக்கள் தொகை, 134 கோடி; பிரான்சில், 6.70 கோடி பேர் மட்டுமே வசிக்கின்றனர் - உலக வங்கி அறிக்கை

ஜி.எஸ்.டி.,யால் உயர்ந்த வளர்ச்சி விகிதம் 

இந்தியாவில், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, 2017, ஜூலை, 1ல், அமல்படுத்தப்பட்டது. இது, அமல்படுத்தப்படும் முன், 2017 - 18 நிதியாண்டின், முதலாம்  காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 5.7 சதவீதமாக இருந்தது. அந்த ஆண்டின் சராசரி, மொத்த உள்நாட்டு உற்பத்தி, 6.74 சதவீதமாக இருந்தது. ஜி.எஸ்.டி.,  அமல்படுத்தப்பட்டபோது, தொழில் துறையினர் அதற்கு பழக்கப்படாததால், உற்பத்தி விகிதம் சற்று குறைந்தது. இதையடுத்து, ஜி.எஸ்.டி., விகிதத்தில் காணப்பட்ட குறைபா டுகள் சரி செய்யப்பட்டதால், பொருளாதார வளர்ச்சி, வேகம் எடுத்தது. 2018 - 2019 நிதியாண்டில், ஜூனுடன் முடிந்த காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 7.3  சதவீதமாக அதிகரித்து, வியப்பில் ஆழ்த்தி உள்ளது. 'இனி வரும் நிதியாண்டுகளில், பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும்' என, பொருளாதார  நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால், ஜி.எஸ்.டி., அமலால், பொருளாதாரத்தில் தேக்கம் ஏற்படும் என்று கூறப்பட்ட கருத்துகள் பொய்யாகி உள்ளன.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...