எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைவதால் என்ன பலன்? வெறும் மருத்துவமனை தானே - அதற்கு ஏன் பெரிய சாதனை போல் மோடியை பாராட்டி நன்றி கூறி கொள்கிறது ஒரு கூட்டம்?
உண்மையில் இது வெறும் ஒரு மருத்துவமனை என்று மட்டும் சர்வ சாதாரணமாகக் கூறிவிட முடியாது. அது ஏன் என்றால் கொஞ்சம் சிந்திக்கவும் "ஒரு மருத்துவமனை haematology(குருதியியல்) ஆரம்பித்து Pathology(நோய்க்குறியியல்) சார்ந்த நவீன உபகரணங்கள் பயன்பாட்டு தொட்டு குழந்தை அறுவை சிகிச்சை வரை மருத்துவத்தின் அனைத்து விதமான பிரிவுகளும் அதற்குத் தேவையான கட்டமைப்புகளும் கொண்ட ஒரு மருத்துவமனை அமைவது என்பது மிக சாதாரணமான விஷயம் அல்ல.
இதில் கவனிக்க வேண்டியது AIIMS போன்றவை கொண்டுள்ள அந்த அனுபவம் - அந்த அனுபவத்தில் அது கையில் உள்ள அந்த நிர்வாக வடிவம். நிர்வாகம் செய்வது என்பதே இப்படியாகப் பேசும் அமைப்புக்குச் சிக்கலான ஒன்று.
எளிமையாகக் கூறினால் புற நோயாளிகள்(Out Patient Department) தினம் தோறும் ஏறக்குறைய 4500முதல் 6000வரை சராசரியாக வந்து செல்வார்கள் என்றால் அவர்களுக்குத் தேவையான காத்திருப்புக்குத் தேவையா அறையில் ஆரம்பித்து தண்ணீர் வரை அனைத்துச் சரியாக முறைபடுத்திருக்க வேண்டும். அதாவது சுமார் 3500பேர் தேவையான அளவு waiting hall capacity இருக்க வேண்டும். அதைத் தவிர என்ன என்ன வேண்டும் என்று சிந்திக்கவும்.
இதில் சிக்கல் வரும் நோயாளிகள் சரியாக மருத்துவர்கள் பரிசோதனை முறைகளை ஒழுங்குபடுத்துவது தான். நீங்கள் இந்தக் கட்டுரையை படிக்கும் போதே ஒரு முறை opd schedule எப்படி இந்த விதம் பேசிய மருத்துவமனைகள் செய்கின்றன என்றும் - எத்தனை வகையில் schedule இருக்கின்றன என்றும் தேடவும். மிக மிகச் சிக்கலான விசயம் இது. ஒவ்வொரு நோயாளியின் மருத்துவ வரலாறு மட்டும் அல்ல அப்படி வரும் நோயாளிகளின் அடுத்த கட்ட பரிசோதனைக்கான பரிந்துரையும் மிக கட்சிதமாக வடிவமைக்க உண்மையில் அனுபவம் வேண்டும்... அதாவது நிர்வாக அனுபவம் வேண்டும். அந்த வகையில் இந்தியாவின் மிகச் சிறந்த மருத்துவமனையான எய்ம்ஸ் மருத்துவமனை எப்போதும் சிறப்பானதே.
இது தவிர மருத்துவர்கள் , மருத்துவ ஆய்வுக் கூடங்கள் , பயிற்சி மருத்துவர்களுக்குத் தேவையான ஏற்பாடு என்று மிக மிகப் பெரிய கட்டமைப்பு இது. இது தவிர இதற்குத் தேவையான மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் , அறுவை சிகிச்சைக்கு தேவையான நிபுணர்கள் என்று ஆயிரம் ஆயிரம் விசயம் இருக்கு. எனவே தயவு கூர்ந்து இது வெறும் மருத்துவமனை என்று சாதாரணமாக கூறிவிட வேண்டாம். இந்தியாவின் பெருமைகளில் ஒன்று இந்த எய்ம்ஸ் மருத்துவமனை.
----------------------------------------------------------------------------
அடுத்து இது மதுரைக்கு வர இருப்பது உண்மையில் தென் தமிழக மக்கள் அனைவருமே நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். காரணம் வெறும் இந்த திருச்சி முதல் கன்யாகுமரி வரை உள்ள 18 மாவட்ட மக்களுக்கு ஒரு நல்ல தரமான மருத்துவமனை மக்களுக்குக் கிடைக்கிறது என்பதால் அல்ல. அதையும் தாண்டி
இந்தவிதமான உலக தரமான மருத்துவமனைகள் வருவது என்பது அந்தப் பகுதியை சுற்றி சுமார் 100கிமி தொலைவுக்குச் சுற்றுலா சார்ந்த துறையை மேம்படுத்தும் என்பது அசைக்க முடியாத உண்மை. அறுவை சிகிச்சை மேற்கொள்ள வரும் மக்கள் தங்க இருப்பிடம் என்று விடுதிகள் தொட்டு உணவகங்கள் ஆரம்பித்து அனைத்து மட்டத்திலும் இது தென் தமிழகத்தில் பெரிய அளவில் ஈர்க்க போதுமானது. இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் நேரடியாக 5000பெரும் மறைமுகமாக 20ஆயிரம் பேருக்கும் இது வேலைவாய்ப்பை உருவாக்கும்.
இன்னொரு பக்கம் உணவகங்கள் விடுதிகள்,வாடகை வாகன ஓட்டிகள்,உணவகங்கள், வணிக வளாகங்கள் என்று அனைத்துத் தரப்பு மக்களிடமும் இது பல புழக்கத்தை நேரடியாக அதிகரிக்கும். இதனால் மதுரை மட்டும் அல்ல சுற்றுவட்டார மக்கள் அனைவரும் பயன்பெறுவர்.
பொதுவாகத் தமிழகத்திற்கு ஒரு திட்டம் வரும் என்று கூறுவார்கள் "இறுதியில் அது சென்னை , கோவை என்று செல்லும். இதனால் பேருக்கு தமிழகம் என்று கூறி கொண்டு வேலை தேடி இளைஞர்கள் சென்னை கோவை நோக்கிச் செல்வர். பெரிய அளவில் தொழில் வளர்ச்சியும் தென் தமிழகத்தில் இல்லை. அப்படிப் பார்க்கும் போது தென் இந்தியாவில் கேரளா , தமிழகம் , கர்நாடகா என்று மூன்று மாநிலத்திற்கும் சேர்த்து தலை சிறந்த மருத்துவமனை மதுரையில் வருகிறது என்றால் - அது உண்மையில் சமச்சீர் வளர்ச்சியை மாநிலம் மக்கள் பெற வேண்டும் என்ற அந்த நியாயமான அக்கறை புரிகிறது.
எனவே தமிழக மக்கள் சார்பாக நரேந்திர மோடி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
{வழக்கம் போல இலுமினாட்டி சதி , தமிழர்கள் அழிக்கப் பார்க்கிறது மோடி அரசு என்று ஆரம்பிக்க ஒரு கூட்டம் இந்நேரம் ரூம் போட்டுச் சிந்திக்க ஆரம்பித்திருக்கும். அந்த 4 சினிமா இயக்குநர்களை கருணை கொலை செய்துவிட்டால் தமிழகம் உருப்படும் என்று தோன்றுகிறது.
சரி நானே போராட்டக்காரர்களுக்கு ஐடியா தருகிறேன்
01."ஒரு ஏக்கருக்கு சுமார் 10லட்சம் மண்புழுக்கள் இருக்கும். அப்படி என்றால் 250ஏக்கருக்கு???? சுமார் 25கோடி மண்புழுக்கள் கொலை செய்து - இந்த மண்ணை வலமாக வைத்திருக்கும் எந்த உயிர்களை நாசம் செய்து - நேரடியாக எண்கள் மண்ணை கெடுக்கக் நினைக்கும் மத்திய அரசைக் கண்டித்து போராட்டம்.
02. ஒரு ஏக்கருக்கு சுமார் 400மரங்கள் தாராளமாக நடலாம். 1லட்சம் மரம் வரக்க வேண்டிய இடத்தில் மருத்துவமனைகள் எதற்கு???? மரம் இருந்த நோய் வராது இந்த அறிவு இல்லாமல் மரத்தை விட்டுவிட்டு மருத்துவமனை காட்டுகிறாரே இந்த மோடி - பயங்கர கேடி... என்று வசனம் பேசலாம்.. இது இன்னும் எளிது.
03.இருக்கவே இருக்கு விவசாயம்.... யோசிங்க மக்களே ஒரு ஏக்கருக்கு 3 முதல் 4 டன் அரிசி ஒரு ஏக்கரில் நாம் விளைச்சல் செய்யலாம். ஆக சுமார் 1000 டன் அரிசி விளைய வேண்டிய இடத்தில் இப்படி மருத்துவமனை கட்டி கார்ப்பரேட் காரனுக்குச் சாதகமாக மோடி செயல்படுகிறாரே சும்மா விடலாமா???? வாங்கப் போராடலாம்...
04.மருத்துவ உபகரணங்கள் அமெரிக்காவிடம் வாங்க போகிறார்கள் , சிமிண்ட் பிர்லாட வாங்க போகிறார்கள் , மருத்துவமனை கட்ட TMT கம்பி அம்புஜா என்ற கார்ப்பரேட் காரனிடம் வாங்க போகிறார்கள் - கார்ப்பரேட் வளர்ச்சிக்கு தான் இந்தத் திட்டம். அய்யகோ என்ன செய்வது வாருங்கள் போராடலாம்.
இப்படி வழக்கம் போல கிளம்பவும்... எவனும் இங்கே வரக்கூடாது. 5லட்சம் நிறுவனங்களை மாநிலத்தை விட்டு விரட்டியாச்சு - மாநிலத்தில் காசு புழக்கம் இல்லாமல் வியாபாரிகள் கஷ்டம் தெரிகிறது. விடாதிங்க இன்னும் நல்ல போராடுங்கள். மாநிலம் இன்னும் இவ்வளவு நாசம் செய்யவேண்டுமோ செய்யுங்கள். விட்டுராதிங்க...
தமிழர்கள் போராட்டம் என்று கூறிக்கொண்டு இந்தப் பிரிவினைவாத ஓநாய்கள் போடுற சத்தத்தை நம்புவதை முதலில் மக்கள் திருத்தி கொள்ளுங்கள். இவனுக்க யார் தமிழகர்கள் போராட்டம் என்று கூற???? தந்திரமாக இது தமிழர் போராட்டம் என்று பேசுவதன் பின்னணியைச் சூழ்ச்சியை உணர்ந்து தள்ளி நில்லுங்கள்.}
No comments:
Post a Comment