இந்த செய்தியை தவிர்த்தது ஏன்?
#கஜாபுயல் இடைக்கால நிவாரணத்தொகையாக மத்திய பாஜக அரசு ரூ 4814.62 கோடியை இதுவரை தமிழகத்திற்கு ஒதுக்கியுள்ளது.இது அவசரமாக ஒதுக்கப்பட்ட இடைக்கால தொகையே!முழுமையான தொகையை வழங்கிட 2வாரம் ஆகும் என்று மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் கதிர்வேலு கடந்த 21 தேதி மதுரை நீதிமன்றத்தில்தெரிவித்தார்!
ஆனால் தமிழ்நாட்டில் நிவாரண வேலையில்கூட கமிஷன் சம்பாதிக்க நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டிருக்கும் ஆளுங்கட்சி எதிர்கட்சி தலைவர்களெல்லாம் மத்தியஅரசு எதுவும் தரவில்லை என பொய் சொல்கிறார்கள்.
அனைவருக்கும் டெப்பாசிட் இல்லாத ஜீரோ பேலன்ஸ் வங்கிக்கணக்கை பிரதமர் நரேந்திரமோடி துவக்கியதால்தான் #நிவாரண தெகைகள் கமிஷன் பிடிக்கப்படாமல் வங்கியில் போடப்படுகிறது என்பதை உணர்ந்து நாம் மீண்டும் மோடியை பாராட்டவேண்டும்.
புயலால் வீடு இழந்தோருக்கு ஒரு லட்சம் வீடுகள் வரை காங்கிரீட் வீடு கட்டித்தரப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்துள்ளார்.மத்திய அரசு வீடுகட்டித் தருவதைத்தான் முதலமைச்சரும் அறிவித்தார். வீடுகட்டித்தருவதிலும் தமிழக அரசியல் கட்சிகள் கொள்ளையடித்து விடக்கூடாது என்பதற்காக, மத்திய ராணுவ அமைச்சர் #நிர்மலா_சீத்தாராமன் "உங்களுக்காக மத்திய அரசு கட்டித்தரும் வீடுகளை மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நீங்களே கட்டிக் கொள்ளலாம்" என அறிவித்துள்ளார்.
இப்போது புயலால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.10000,5000 வங்கியில் செலுத்தப் பட்டிருக்கிறதென்றால் அது மத்திய அரசின் பணம்தான்.
#பயிர்காப்பீடு மூலமாக வழங்கப்படும் தொகையும்,மத்திய அரசின் திட்ட தொகைதான்.
மாநில கட்சிகள் எல்லாம் இந்த நிவாரண தொகையில் எவ்வளவை சுருட்டலாம் என காத்துக்கிடப்பதோடு, மத்திய அரசு எதையும் செய்யவில்லை என பொய் சொல்லுகின்றன.
இதுவரை #மத்திய_அரசு ஒதுக்கியது 4814.62 கோடி! மாநில அரசு ஒதுக்கியதாக சொல்வது 1000 கோடிதான்.நன்கொடையாக 108 கோடிக்கும் அதிகமாக வந்துள்ளது. மொத்தம் 5922.62 கோடி!
இந்த தொகையில் இதுவரையில் எவ்வளவு செலவு செய்யப்பட்டது?மீதி எவ்வளவு இருக்கிறது?என்னும் விவரத்தை மாநில அரசு வெளியிடவேண்டும்!
எதிர்கட்சிகள் இந்த கணக்கை கேட்கவேணடும்.ஆனால் அவர்களோ மத்திய அரசு கொடுக்கும் பணத்தில் கமிஷனுக்காகத்தான் காத்துக்கிடக்கிறார்கள்!
ஜி.எஸ்.டி யில் வரிகளை குறைத்துவிட்ட #நரேந்திர_மோடி, 'ஒருநாள் முதல்வர்' திரைப்படத்தில் வருவதைப்போல், எல்லா வியாபாரியும் மக்களிடம் வசூலிக்கும் வரியை அரசுக்கு கட்டியாகவேண்டும் என கட்டாயப்படுத்தி விட்டார். இதன் காரணமாக தமிழக அரசுக்கு இந்தவருடம் ரூ.20000 கோடி அளவில் அதிக வரவு வசூலாகியுள்ளது.
15000 கோடியை மத்திய அரசிடம் கேட்காமல் 20000 கோடி அதிக வசூலில் 15000 கோடியை செலவு செய்திருக்கலாமே!
தினத்தந்தி நெட்டில் வந்த செய்தியைத்தான் இணைத்துள்ளோம்.இந்த செய்தி தினத்தந்தி உட்பட எந்த பத்திரிக்கையிலும் வரவில்லை.
ஒரு செய்தியை போடவும் போடாமல் தவிர்க்கவும் பணம் வாங்கும் #பத்திரிக்கையாளர்கள்,இந்த செய்தியை போடாமல் தவிர்க்க,மத்திய அரசு எதுவுமே செய்யவில்லை என பேசிவரும் தமிழக கட்சிகளிடம் எவ்வளவு பணம் வாங்கினார்களோ?
-#குமரிகிருஷ்ணன்,
-மாநில தலைவர்,
-#பாஜக_பிரச்சாரப்பிரிவு.
No comments:
Post a Comment