பாஜகவின் எதிர்ப்பாளர்களுக்கு ஒரு சில கேள்விகள்.
நோட்டு மாற்றம் பிடிக்கவில்லை, புரிகிறது.
GSTயால் சங்கடம், புரிகிறது.
கருப்பு பணம் புழக்கம் குறைதல், புரிகிறது..
தங்கம், வெள்ளி, செம்பு விலை கட்டுப்பாட்டில், புரிகிறது.
வெளிநாட்டு பணம் NGO க்கு வரவில்லை, புரிகிறது.
முன்பு போல கொள்ளை கொள்ளையாக அடித்து பிடித்து கருப்பு சந்தையில் சம்பாதிக்க முடியவில்லை. புரிகிறது.
# # காங்கிரஸ் வாழ்க, ஹிந்துஸ்தான் ஒழிக என்று பயங்கரவாதிகள் கோஷம் போடுகிறார்கள். அப்படி என்றால் என்ன?
எங்களுக்கு வாக்களித்தால் காஷ்மீரில் உயிர் இழந்த பயங்கரவாதிகள் குடும்பங்கள் அனைத்துக்கும் ஒரு கோடி ருபாய் தருவோம் என்று காணொளியில் காங்கிரஸ் தலைவர் பேசுகிறார். அப்படி என்றால் என்ன?
உத்திர பிரதேசத்தில் ஒரு மௌல்வியிடமிருந்து பெரும் நாசம் விளைவிக்கும் ஆயுதங்கள், வெடிகுண்டுகள், வெடிகுண்டு தயாரிக்கும் காணொளிகள் கிடைத்துள்ளன. அவர்கள் குற்றவாளிகள் என்று தீர்மானிக்க வேண்டியது நீதிமன்றம் என்று இன்னமும் கூறுகிறது காங்கிரஸ். இதன் பொருள் என்ன?
உங்களுக்கு பாஜக மீது ஆயிரம் கோபம் இருக்கலாம். ஆனால், சட்டம் ஒழுங்கு விஷயத்தில் இருக்கவே முடியாது. ஒரு நாடு பாதுகாப்பாக இருக்கிறது என்றால்தான் மற்ற விஷயங்கள் எல்லாம் பேசலாம். ஆனால், இது வெறும் சட்டம் ஒழுங்கு விஷயமல்ல. அடிப்படை பாதுகாப்பே கேள்விக்குறியாகியுள்ளது. மாநிலங்கள் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்தால் NIA வைத்து மத்திய அரசு ஏதோ செய்யும். ஆனால், மத்திய அரசே CBIஐ, நீதிமன்றங்களை, போலீசை, ரவுடிகளை, மாவோயிஸ்டுகளை கைக்குள் போட்டுக்கொண்டால்? செல்லம் கொஞ்சினால் என்ன செய்ய? அவர்களும் இந்நாட்டு பிரஜைகள் என்றால் நீங்களும் நானும் யார்?
அடுத்த தேர்தலில் பாஜகவை பழிவாங்குகிறோம் என்று எண்ணி காங்கிரசுக்கு வாக்களித்தால் உங்கள் வருங்கால சந்ததியினர் உங்களை என்றென்றும் மன்னிக்கவே மாட்டார்கள்.
கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொரிந்து கொல்வதற்கு சமம் காங்கிரசுக்கு வாக்களிப்பது.
உங்கள் மகனோ, நீங்களோ, மனைவியோ, மகளோ உருப்படியாக வீடு திரும்ப நிச்சயம் இல்லை. கருப்பு பணம் நிறைய சம்பாதிக்கலாம். ஆனால், வாழ்நாள் முழுவதும் அழுவீர்கள். பாஜகவுக்கு வோட்டு போடலாமா என்று சிந்திப்பதற்கு முன், யாரையும் கேட்காமல், எதையும் படிக்காமல், ஒரு பத்து நிமிடம் தனியாக சிந்தியுங்கள்.
எனக்கு பாதகமாக இருந்தாலும் நாட்டுக்கு நல்லது செய்கிறார்கள் என்று உங்கள் மனதுக்கு எந்த கட்சி தோன்றுகிறதோ அவர்களுக்கே வாக்களியுங்கள்.
No comments:
Post a Comment