Thursday, 27 December 2018

முத்தலாக் தடை மசோதா நிறைவேறியது

முத்தலாக் தடை மசோதா நிறைவேறியது

மக்களவையில் .
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே .

காங்கிரஸ் சமாஜ்வாடி
அதிமுக கடும் எதிர்ப்பு.
சபை வெளிநடப்பு .

திமுக எதிர்ப்பு .

அதிமுக  எம்பி அன்வர் ராஜா
கடும் எதிர்ப்பு.

இது முஸ்லீம் ஆண்களுக்கு இழைக்கும் துரோகம் .

இது இறைவனுக்கு எதிரானது .

இதன் தண்டனையை நிச்சயம் அனுபவிப்பீர்கள்
என்று அன்வர் ராஜா கடும் விமர்சனம் .

அண்ணா அன்வர் ராஜா

இஸ்லாமிய சகோதரிகளின் ஆபத்வாணனாகிய  சகோதரர்  பிரதமர் மோடிஜி அவர்கள்
தலாக் முறையை தடை செய்ததன் மூலம் பல இஸ்லாமிய சகோதரிகளின் திருமண வாழ்க்கையை  பாதுகாத்து தந்துள்ளார் .

பல இஸ்லாமிய ஆண்கள் இந்துமத பெண்களின் சுதந்திரத்தை பற்றி பேசுபவர்கள்
தன்மதப் பெண்களின் சுதந்திரத்தை
பாதுகாப்பை , சமஉரிமையை பற்றி சிந்திக்காது
இந்த தலாக் தடை மசோதாவை
ஆதரிக்காதது ஏன் ?

நவ்சத்  அகமத்  கான் என்பவர் சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி தர வேண்டும்  என்று  சம உரிமை கேட்டு
இந்துமத கோயில் விஷயத்தில் இறையாண்மையை மீறி மதவாதத்தை  காட்டி  உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தவர்
தன்மதப் பெண்களின் திருமண வாழ்க்கைக்கு சம உரிமை கேட்டு நியாயம் கேட்டு முத்தலாக் அநியாயத்தை எதிர்த்து
உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க அந்த இளம் வக்கிலுக்கு  நேரமில்லையா
இல்லை திராணி இல்லையா ??

தலாக் சொல்லி  வேறு ஒரு பெண்ணை  மணந்து கொள்ள  தலாக் எளிதாக இருந்தது .
எத்தனையோ நியாயமில்லாத காரணங்களுக்காக தங்கள் வாழ்க்கை தலாக் மூலம் நாசமானதை பல இஸ்லாமிய சகோதரிகள் சகித்து கொண்டு துன்பத்தில் வாழ்ந்து வருகிறார்கள் .

எந்த இஸ்லாமிய மதத்திற்கு எதிரி என்று  சித்தரிக்கப்பட்டு தேர்தல் ஆயுதமாக
மதவாத  எதிர்க்கட்சிகளால்
மோடி என்ற  ஒரு இந்து  மிகக் கடுமையாக  விமர்சிக்கப்பட்டாரோ
அந்த இந்து தான் !
தான்  ஒரு உண்மையான மதசார்பற்ற தலைவன் என்று தன்னை நிருபித்து
பெண்களின் சுதந்திரத்தை மதங்களை கடந்து
அரேபிய சட்டங்களை உடைத்து
இஸ்லாமிய சகோதரிகளின் திருமண வாழ்க்கைக்கு
ஒரு பாதுகாப்பை ஏற்படுத்தி  உத்ரவாதத்தை தந்துள்ளார் இந்த முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றத்தின் மூலம் .

பாஜக ஒரு இந்துத்துவா கட்சி
மதவாதக் கட்சி
சிறுபான்மையினருக்கு  பாதுகாப்பற்ற மதவாதக் கட்சி என்று பொய்ப் பிரச்சாரங்களை
வைத்த எதிர்க்கட்சிகளின்
வறட்டு கத்தல் அரசியல்  ஜாம்பவான்களெல்லாம்
இந்த முத்தலாக் தடை சட்டத்தை நிறைவேற்ற விடாமல் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து மக்களவை மன்றத்தை பலநாட்கள் முடக்கி வைத்த பெருமைக்குரிய
அரசியல் எத்தர்களாவார்கள் .

பெண்ணிற்கு 32 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்ட அரசியல்  பொய் முகமூடிகள் தான் முத்தலாக் தடை சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய சகோதரிகளின் வாழ்க்கைக்கு நெருப்பு வைத்தனர்.

யார் இப்போது பெண் சரிசம உரிமைக்கும் ,
பெண் பாதுகாப்பிற்கும்
சுதந்திரத்திற்கும்
வேட்டு வைத்தது என்றும்
யார் உண்மையான
மதவாதிகளென்றும்
மதசார்பற்ற போர்வைக்குள் சுருண்டிருக்கும் இந்த கருநாகங்களை அடையாளம் கண்டு கொண்டார்கள் ஒட்டுமொத்த பெண்ணினமும்.

சபரிமலை ஐயன் கோயிலை
குறிவைத்து
பெண்களின் சமஉரிமையை
காரணங்காட்டி
மதவாத ஆயுதத்தை பயன்படுத்தி
தேவையற்ற விஷயத்தில்
பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்த எதிர்க்கட்சி அரசியல்  நாட்டாமைகளெல்லாம்
முத்தலாக் தடை மசோதாவை எதிர்த்து அதே இஸ்லாமிய பெண்களின்  பெண்ணுரிமையை முடக்க
மக்களவையில் எதிர்
குரல் கொடுத்து தடுக்கிறார்களே
வெளிநடப்பு செய்தார்களே

இவர்களா உண்மையான
பெண் உரிமை பாதுகாப்பாளர்கள் ??

மதசார்பற்ற ,
பெண் உரிமைப் போராளிகளே
எங்கே போனீர்கள் ???

முக்காடு போட்டு முகத்தை மூடிக்
கொண்டீர்களா ?
இல்லை
பாஜக சதி செய்து
மதவாதத்தை புகுத்துகிறது
என்று உங்கள் உளுத்துப் போன
பல்லவிகளை பாடி
மக்களை முட்டாளாக்க பார்க்கிறீர்களா ????

அண்ணா அன்வர் ராஜா அவர்களே
இறைவனுக்கு மோடி அரசு
துரோகம் செய்து விட்டதாக
நீங்கள் சொன்னால்
அது இஸ்லாமிய பெண்களின் மணவாழ்க்கைக்கு  பாதுகாப்பு தந்து பெரும் சேவையை  செய்தது மோடி அரசு
என்று இறைவன் சொல்கிறார்
என்பதே உண்மை .
இறைவன் தண்டிக்கப் போவதில்லை மோடி அரசை .
முத்தலாக் தடை மசோதா மூலம்
இதுவரை இருந்த இக்கொடுமையை  கண்டித்து
மோடி அரசை வாழ்த்துகிறார்
என்பதே சத்தியம் .

மதசார்பற்ற  தலைவர் மோடி
வாழ்க !

ஜெய்ஹிந்த் .

விஜயலஷ்மி காளிதாஸ்.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...