Thursday, 27 December 2018

மோடி மீண்டும் பிரதமராக  தென்னிந்தியா துணை நிற்கும்-

https://m.facebook.com/groups/1802075443422233?view=permalink&id=1945559795740463
.

மோடி மீண்டும் பிரதமராக  தென்னிந்தியா துணை நிற்கும்-

அநேகமாக மார்ச் மாதம் முதல் வாரத்தில் நாட்டின்
17 வது பாராளுமன்றத்தை தேரந்தெடுக்க தேர்தல்
கமிசன் தேர்தல் தேதிகளை அறிவிக்கும் என்று
தெரிகிறது. இதனால் அனைத்து கட்சிகளும்
கூட்டணி பேச்சு வார்த்தைகளை துவங்கி விட்டன.
இந்த முறை மோடியை பிரதமராக்க வட இந்தியா
வை விட தென்னிந்தியாவே முன்னிலை வகிக்கும்.
என்றே தெரிகிறது.

வட மாநிலங்களில் பிஜேபி ஆளும் மாநிலங்களில்
ஆன்ட்டி இன்கம்பன்சி காரணமாக கடந்த முறை
பெற்ற தொகுதிகளை விட  இந்த முறை தொகுதிகள்
குறைய வாய்ப்புள்ளது.ஆனால் அதை ஈடுகட்டும்
விதமாக தென்னிந்தியாவில் இருந்து இந்த முறை
மோடி பிரதமராக ஆதரவு அதிகமாக கிடைக்க வாய்
ப்புகள் இருக்கிறது.

தென்னிந்தியாவில உள்ள  5 மாநிலங்களில் தமிழ்நாடு-39 கர்நாடகா-28 ஆந்திரா-25 கேரளா-20
தெலுங்கானா-17 என்று மொத்த ம் 129 லோக்சபா
தொகுதிகள் இருக்கிறது. அடுத்து தென்னிந்தியா
வில் உள்ள 5 யூனியன் பிரதேசங்களில் பாண்டிச் சேரி-1 லட்சத்தீவுகள்-1 அந்தமான் நிக்கோபார்
தீவுகள்-1 தத்ரா&நகர் அவேலி-1 டாமன் & டையூ-1
என்று 5 லோக்சபா தொகுதிகள் இந்த 5 யூனியன்
பிரதேசங்களில் இருக்கிறது.

ஆக மொத்தம் 134 லோக்சபா தொகுதிகள் தென்னி ந்தியாவில் இருக்கிறது.இந்த 134  தொகுதிகளில்
2014 லோக்சபா தேர்தலில் பிஜேபி 24 தொகுதிக ளில் வெற்றி பெற்று இருந்தது. கர்நாடகாவில் 17 தொகுதிகள் ஆந்திராவில்2 தொகுதிகள் தெலுங் கானா-1 தமிழ்நாடு-1 என்று 5 தென்னிந்திய மாநில ங்களில் கேரளாவை தவிர ஏனைய 4 ல் பிஜேபிக்கு 21 எம்பிக்கள் இருக்கிறார்கள்.

5 யூனியன்  பிரதேசங்களில் அந்தமான் நிக்கோபார்
தீவுகள் தத்ரா&நகர் அவேலி மற்றும் டாமன் & டையூ
ஆகிய மூன்று யூனியன் பிரதேசங்களில் உள்ள
லோக்சபா தொகுதிகளில் பிஜேபியே  வெற்றி
பெற்றுள்ளது.பிஜேபி கூட்டணியில் தெலுங்கு தேசம்
16 மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி-1 என்று தென்னி
ந்தியாவில் மொத்தம் உள்ள 134 தொகுதிகளில்
பிஜேபி கூட்டணி 41 தொகுதிகளில் வெற்றி பெற்று
இருந்தது.

காங்கிரஸ் கட்சி ஆந்திரா-0 தெலுங்கானா-2
கர்நாடகா-9 தமிழ்நாடு-0 கேரளா-8 பாண்டிச்சேரி-1
ஆக மொத்தம் 134 தென்னிந்திய லோக்சபா தொகுதி களில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த து
20 தொகுதிகள் தான்.காங்கிரஸ் கூட்டணி என்று
பார்த்தாலும் கேரளாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-2 கேரள மணி காங்கிரஸ்-1 ஆர்எஸ்பி
-1 என கேரளாவில் 4 தொகுதிகளும் லட்சதீவுகளில்
தேசிய வாத காங்கிரஸ் என்று காங்கிரஸ் கூட்டணி
க்கு 25 தொகுதிகள் தான் கிடைத்தது.

எனவே தென்னிந்தியாவில் தனியாகவும் கூட்டணி யாகவும் காங்கிரஸ்கட்சியை விட பிஜேபியே பல மாக இருக்கிறது.வருகின்ற பாராளுமன்ற தேர்தலி லும் இதே மாதிரிதான் நிலைமை இருக்க போகிற து. ஆனால் பிஜேபிக்கு கடந்த தேர்தலை விட வருகி ன்ற லோக்சபாதேர்தலில் நிச்சயமாக ஆதரவு அதிக மாக இருக்கும் என்பதே உண்மை யாகும்

என்னப்பா சந்திரபாபு நாயுடு போய்விட்டாரே பிறகு
எப்படி பிஜேபிக்கு ஆதரவு அதிகமாக  கிடைக்கும்
என்று நீங்கள் கேட்கலாம். சந்திரபாபு நாயுடு முடிந்து
போன சாப்டர். ஆந்திராவை பொறுத்தவரை அடுத்து ஜெகன் மோகன் ரெட்டி தான்.தெலுங்கானா
வை பொறுத்தவரை இனி சந்திரசேகர ராவ் தான்.

இவர்கள் இரண்டு பேருமே காங்கிரஸ் எதிர்ப்பாளர்
கள் எனவே காங்கிரஸ் பக்கம் இவர்கள் எட்டி கூடப பார்க்க வாய்ப்பே இல்லை.. இவர்கள் இருவரிடமும் வரும்தேர்தலில் குறைந்தது 30 எம்பிக்கள் இருக்க வாய் ப்புகள் உள்ளது.ஆந்திராவில் இந்த முறை ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 18 தொகுதிகளில் வெற்றி பெறும்.
.
தெலுங்கானாவில்  மீண்டும் சந்திரசேகர ராவ்
ராஜ்ஜியம் தான்.இந்த சட்டமன்ற தேர்தலில்
சந்திரசேகர ராவ் க்கு கிடைத்த மாபெரும் வெற்றி
க்கு இரண்டு கட்சிகள் முக்கிய காரணமாக இருந்தது. ஒன்று ஜெகன் மோகன் ரெட்டி யின்
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இன்னொன்று பிஜேபி

இரண்டு கட்சிகளும் தங்களின் ஜென்ம எதிரியான
காங்கிரஸ் சந்திரபாபு நாயுடு கூட்டணி ஜெயித்து விடக்கூடாது என்பதற்காகவேதெலுங்கானா ராஷ் டிரிய சமிதிக்கு ஓட்டு போட்டு சந்திரசேகரராவை
மாபெரும் வெற்றி பெற செய்துள்ளார்கள்.

இதே நிலைமை தான் பாராளுமன்ற தேர்தலிலும் இருக்கப்போகிறது.தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி
எப்படியும் 12 தொகுதிகளில் வெற்றி பெற்று விடும்.
ஆக ஆந்திரா மற்றும் தெலுங்கானா வில் இருந்து
30 எம்பிக்கள் பிஜேபி ஆட்சிக்கு ஆதரவாக இருப்பது
உறுதி.

அடுத்து கர்நாடகாவில் கடந்த முறை பிஜேபிக்கு
கிடைத்த 17 தொகுதிகளே இம்முறையும் ்கிடைக்க
லாம். கர்நாடகாவில் காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா
தளம் நிச்சயமாக கூட்டணி அமைத்து போட்டி யிட
வாய்ப்பில்லை. ஏனென்றால் அதற்குள் கர்நாடகா வில் காங்கிரஸ் கூட்டணி அரசே கவிழ்ந்து விடும்.

எனவே பிஜேபிக்கு 17 தொகுதிகள் உறுதி.அடுத்து
ஆந்திரா-2  தெலுங்கானா-2 கேரளா-1 தமிழ்நாடு-
5  யூனியன் பிரதேசங்கள்-3 என்று குறைந்தது
பிஜேபி இந்த முறை 30 தொகுதிகள் உறுதி யாக
கிடைக்கும்.கர்நாடகா வை அடுத்து தமிழ்நாட்டில்
தான் பிஜேபிக்கு இம்முறை அதிக தொகுதிகள்
கிடைக்கும் என்று கூறலாம்.

கேரளாவில் இந்தமுறை திருவனந்தபுரம் பிஜேபி க்கு தான். சரிப்பா தமிழ்நாட்டில் பிஜேபி க்கு 5
தொகுதகள் கிடைக்கும் என்று கூறுகிறாயே.. இத ற்குஎன்ன வாய்ப்புகள் இருக்கிறது என்று நீங்கள்
கேட்கலாம்..

ஏற்கனவே அதிமுக பிஜேபி கூட்டணி இதற்கு ரஜினி ஆதரவு  உறுதியானநிலையில் பாட்டாளி மக்கள் கட்சியும் பிஜேபிகூட்டணிக்கு வருவது உறுதியாகிக் கொண்டு  வருகிறது. இது நடைபெற்று விட்டால். தமிழ்நாட்டில்பிஜேபி கூட்டணிக்கு 30 தொகுதிகள் உறுதியாக கிடைக்கும்.

பிஜேபி அதிமுக ரஜினி கூட்டணிக்கு மேற்கு
மண்டலம் என்கிற கொங்கு மண்டலத்தில் முழு
அளவில் வெற்றி உறுதி. இங்கிருந்து பிஜேபிக்கு
2 எம்பிக்கள் உறுதி. அடுத்து பிஜேபி அதிமுக ரஜினி
புதிய தமிழகம் கூட்டணி க்கு தெனமண்டலத்தில
உள்ள 10 தொகுதிகளில் 8 ல் வெற்றி உறுதி.
இங்கும் பிஜேபிக்கு 2 தொகுதிகள் வெற்றி உறுதி

பிஜேபி அதிமுக ரஜினி பாட்டாளி மக்கள் கட்சி
சேர்ந்தால் வடக்கு மண்டல ம் மற்றும் சென்னை
ரீஜனில் பிஜேபி கூட்டணிக்கு வெற்றி உறுதி. ஆ னால் டெல்டா ரீஜனில் மட்டும் திமுக கூட்டணி
பிஜேபி கூட்டணி யை ஓவர் டேக் செய்ய வாய்ப்பு
ள்ளது.

எனவே தமிழ்நாட்டில் பிஜேபி கூட்டணி 30 தொகுதி
கள் என்றால் பிஜேபிக்கு 5 தொகுதி கள் கூட்டணி கட்சிகளுக்கு  25 தொகுதிகள் என்று தமிழ் நாட்டில்
பிஜேபி கூட்டணி முன்னணி பெறும்.எனவே பிஜேபி மீண்டும் ஆட்சி அமைக்க வடக்கு துணை நிற்க தடு மாறினாலும்பிஜேபிக்கு 30 எம்பிக்களையும் கூட்ட ணிகட்சிகளுக்குக்கு 55 எம்பிக்ககளையும் அளித்து கடந்த தேர்தலை விட வரும் தேர்தலில் இரண்டு மடங்கு ஆதரவு அளித்து மோடியை மீண்டும் பிரதமராக்க தென்னிந்தியா தயாராக இருக்கிறது.

 

..
.
.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...