Monday, 3 December 2018

இந்தியாவில் ரூ.50 கோடிக்கு மேல் பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற பாஸ்போர்ட் கட்டாயம்

இந்தியாவில் ரூ.50 கோடிக்கு மேல் பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற பாஸ்போர்ட் கட்டாயம்

பொதுத்துறை வங்கிகளில் பெரிய தொகைகளைக் கடனாகப் பெற்றபலர் வெளிநாடுகளுக்கு, அனுமதியின்றி தப்பி விட்டனர். எனவே எதிர்காலத்தில் இப்படி நடக்க கூடாது என்று ‘பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்று வெளிநாட்டுக்குத் தப்பி ஓடுவதைத் தடுக்க புதிய வியூகம் அமைத்து, அரசு உத்தரவிட்டுள்ளது.

இனி ரூ.50 கோடிக்கு மேல் கடன் பெறுவோர் தங்கள் பாஸ்போர்ட் விபரங்களை வங்கிக்குத் தர வேண்டும். இதற்கு முன் யாராவது ரூ.50 கோடிக்கு மேல் கடன் பெற்றிருந்தால் அவர்களது பாஸ்போர்ட் விபரங்களை 45 நாட்களுக்குள் சேகரித்து முடிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பாஸ்போர்ட் இல்லாத கடனாளிகள் இருப்பின் ‘பாஸ்போர்ட் என்னிடம் இல்லை’ என்ற சான்றை அவரிடம் பெற வேண்டும். மேலும் ரூ.50 கோடி கடன் பெற்று சரி வர தவணை செலுத்தாவிட்டாலோ அல்லது மோசடிக்கான அறிகுறிகள் தென்பட்டாலோ வங்கி நிர்வாகம் புலனாய்வு அமைப்புகளிடம் தெரிவிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. சமீபத்தில் ‘தேடப்படும் பொருளாதார குற்றவாளிகள்’ மசோதா நிறைவேற்றப்பட்டு (பார்லிமெண்டில்) மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இப்போது பாஸ்போர்ட் கட்டாயம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. கடன் வாங்கிவிட்டு இனி யாரும் வெளிநாட்டுக்குத் தப்பி ஓட இயலாது.

.                      🦅Ⓜ🦅
*_┈┉┅━❀𝙶𝚄𝙻𝙵 𝙽𝙴𝚆𝚂❀━┅┉┈_*

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...