யுபிஐ மூலம் பணம் அனுப்பும் சேவை விரிவுப்படுத்த அனுமதி கோரி ரிசர்வ் வங்கிக்கு கடிதம்
மும்பை : யுபிஐ மூலம் பணம் அனுப்பும் சேவையை 20 கோடி வாட்ஸ்அப் வாடிக்கையாளர்களுக்கு விரிவுப்படுத்த அனுமதி வழங்குமாறு அதன் தலைமை செயல் அதிகாரி ரிசர்வ் வங்கிக்கு முறையாக கடிதம் எழுதியுள்ளார். யுபிஐ மூலம் வாட்ஸ் அப்பில் பணம் பரிமாற்றம் செய்து கொள்ளும் நடைமுறையை கண்காணிக்க தனி அதிகாரி நியமிக்கப்பட்டும் சில வாட்ஸ் அப் பயன்பாட்டாளர்களுக்கு மட்டுமே யுபிஐ பண பரிமாற்றம் வசதியை வழங்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது.
இந்தியாவில் 20 கோடி பேர் வாட்ஸ் அப் பயன்படுத்துவதால் அனைவருக்கும் யுபிஐயை பயன்படுத்தி வாட்ஸ் அப் மூலம் பணம் அனுப்பும் வசதியை வழங்க அனுமதிக்குமாறு அதன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி க்ரிஸ் டேனியல்ஸ் ரிசர்வ் வங்கிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக வாட்ஸ் அப் நிறுவனம் தன்னுடைய சுமார் 10 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு கடந்த சில மாதங்களாக சோதனை ரீதியில் யுபிஐ மூலம் பணம் பரிமாற்றம் சேவை வழங்கி வந்தது. இதில் திருப்திகரமான முடிவுகள் கிடைத்ததை தொடர்ந்து முழுமையான சேவையை தொடங்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
. 🦅Ⓜ🦅
*_┈┉┅━❀𝙶𝚄𝙻𝙵 𝙽𝙴𝚆𝚂❀━┅┉┈_*
No comments:
Post a Comment