Saturday, 1 December 2018

பாஜகவும் மோடியின் ஆட்சியும்-7 உ

பாஜகவும் மோடியின் ஆட்சியும்-7

உங்களுக்கு எதுக்கு 15000 கோடி கொடுக்கணும் கொள்ளை அடிக்கவா?மொத்தமும் மக்களுக்கு போய் சேரணும்.

நேற்றிலிருந்து மாண்புமிகு மத்திய அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள் நாகை , திருவாரூர், புதுக்கோட்டை, மற்றும் தஞ்சை மாவட்டங்களில் கஜா புயல் பாதித்த பகுதியில் மக்களை சந்தித்துக் கொண்டுள்ளார். உடனடியாக எடுத்த நடவடிக்கைகள்...
     1) புயலால் வீடிழந்த வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அனைவருக்கும் பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ்  உடனடியாக வீடுகட்ட  இன்றிலிருந்து துவங்கிட மாநில தலைமைச் செயலருக்கு மத்திய அரசிடமிருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது...
     2) மின் இணைப்பு சீர் செய்யப்படும் வரை மக்களுக்கு விநியோகிக்க தேவையான மண்ணெண்ணெய் வந்து சேர்ந்துள்ளது. மாநில அரசு அதை விநியோகிக்கலாம்...
    3) பயிர் காப்பீட்டில் மத்திய அரசு 70% மும் மாநில அரசு 25%மும் விவசாயி 5% பிரிமியம் கட்டணம் வேண்டும் என்பது விதி. கஜா புயல் சூழ்நிலையை கணக்கில் கொண்டு விவசாயியின் 5% பங்கினை மாநில அரசு சேர்த்து திட்டத்தில் உடனடியாக அனைத்து விவசாயிகளும் சேர்க்கப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது...
       4)  வறுமை கோட்டிற்கு மேலுள்ள ஆனால் வீடிழந்த நபர்களுக்கு 2அல்லது 3நாட்களுக்கள் மத்திய அரசு திட்டம் அறிவிக்கிறது...
        5)   இன்று மாநில தொடக்கக் கல்வி அமைச்சர் திரு. செங்கோட்டையன் அவர்கள் தலைமையில் அதிகாரிகள் கூட்டம் ஏற்பாடாகியுள்ளது. அதில் கீழே விழுந்துள்ள மரங்களை அரசே அப்புறப்படுத்த திட்டமிடப்படும்...
     6) தென்னங்கன்று புதிதாக நடவு செய்ய போதுமான கன்றுகள் இல்லையெனில் பக்கத்து மாநிலங்கள் அல்லது அந்தமான் போன்ற மாநிலங்களிலிருந்து தென்னை வாரியம் மூலம் தருவிக்கப்படும்..
      7) தென்னை பலனளிக்கும் வரை ஊடுபயிர் குறித்து திட்டமிட மத்திய தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் நாளை தமிழகம் வர உள்ளனர்...
          ஆகவே கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் இணைந்து நிறைவேற்றும்...

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...