Saturday, 1 December 2018

எதற்காக மோடியை எதிர்க்கிறீர்கள்?

https://www.facebook.com/groups/1828757960722252/permalink/2218767158387995/

மோடி என்ற பெயரைக் கேட்டாலே கறுப்புக் குடையைப் பார்த்துமிரளும் மாடுகளை போலத் துள்ளிப் பதில் போடும் எனது செக்யூலரிஸ்ட் / முற்போக்கு / பிரிவினை வாதம் பேசும் (so called)அறிவு ஜீவிகளிடம் நான்சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன்.

குறிப்பாக இஸ்லாமிய, கிறித்துவ, நாத்திக, திராவிட இயக்கங்களின் போர்வாள்கள் தான் இந்த எதிர்ப்புப்படையின் முன்னணியில் நிற்கிறவர்கள்.

மோடி மதவாதி.
மோடி இந்து மத வெறியர்.
மோடி பிற்போக்கு வாதி.
மோடி பணக்காரர்களை ஆதரிக்கிறவர்.
மோடி தமிழர் நலன்களுக்கு எதிரானவர்.

அவர் இது வரை எத்தனை மசூதிகளை இடித்தார்?

அவருடைய ஆட்சிக்காலத்தில் எத்தனை கிறித்துவ தேவாலயங்கள் மூடப் பட்டன?

எத்தனை நாத்திகர்கள் படுகொலை செய்யப்பட்டனர் அல்லது தூக்கில் தொங்கினர்?

அவருடைய ஆட்சிக்காலத்தில் மதமாற்றங்கள் நின்று போய்விட்டனவா?

அவருடைய ஆட்சியில் எத்தனை மதக் கலவரங்கள் நடந்தன?

அவருக்கு முந்தைய ஆட்சியில் பணக்காரர்கள் எல்லாம் மிகவும் கஷ்டப்பட்டார்களா?

பாஜக ஆளும் மாநிலங்களில் எத்தனை கலவரங்கள் நடந்திருக்கின்றன?

பாஜக ஆளும் மாநிலங்களில் வாழ்ந்த இஸ்லாமியரும் கிறித்தவர்களும் ஜம்முவிலும் காஷ்மீரிலும் வாழ்ந்த காஷ்மீரி பிராமணர்களைப் போல தங்கள் ஊர்களை விட்டு ஓடி விட்டார்களா?

அம்பானிக்கு கோதாவரி பேசினில் ஆயிரங்கோடிக் கணக்கில் சம்பாதித்துக் கொடுக்கும் எண்ணெய்க் கிணறுகளும் இயற்கை எரிவாயுக் கிணறுகளும் மோடி ஆட்சியில் தான் அலாட் பண்ணப்பட்டனவா?

விஜய மல்லையாவுக்கு 9000 கோடி கடன் தர வங்கிகளுக்குப் பரிந்துரை செய்தது மன் மோகன் சிங்கும் பானா சீனாவுமா இல்லை மோடியும் அருண் ஜெட்லீயுமா?

அடானி காங்கிரஸ் காலத்தில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தாரா?

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ராபர்ட் வாத்ராவின் 70 வயது தாய்க்கு
வருஷத்துக்கு 1 கோடி ரூபாய் செலவில் Z கேட்டகரி பாதுகாப்பு வழங்கியது போல மோடியின் தாய்க்கு z கேட்டகரி பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறதா?

2 -G ஸ்கேம், நிலக்கரி ஊழல் ஸ்கேம் வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் வாங்கிய ஸ்கேம், ராணுவத்துக்கு வாங்கப்பட்ட டாட்ரா ட்ரக் ஸ்கேம், காமன் வெல்த் கேம்ஸ் ஸ்கேம், ஆதர்ஷ் ஹவ்சிங் ஸ்கேம், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் ஸ்கேம், வோட் ஃபார் கேஷ் ஸ்கேம், லெவெலில் ஒரு ஸ்கேமாவது மோடி அரசில் இது வரை உண்டா?

கங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் காவிரி நீர்ப் பிரச்சினை தீர்க்கப்பட்டு அதை மோடி அரசு ரத்து செய்து விட்டதா?

முள்ளி வாய்க்கால் படுகொலையும் இலங்கைத் தமிழர்களின் இனப் படுகொலையும் மோடி காலத்து நிகழ்வுகள்தானா?

எதற்காக மோடியை எதிர்க்கிறீர்கள்?

Rabis நோயால் பீடிக்கப்பட்ட நாய்கள்தான் காரணமேயில்லாமல் எல்லோரையும் கடிக்கும்.

காலமெல்லாம் தொழிலாளர்களுக்காக இலவசமாக வாதாடிய ஒரு தொழிற்சங்கத் தலைவரின் பேத்தி நான். எனக்கும் மோடிக்கும் ஏழாம் பொருத்தம். ஆனால் நான் கண்களை மூடிக்கொண்டிருக்கவில்லை. கருத்துக் குருடியும் இல்லை.

நாமெல்லாம் சிந்திக்கத் தெரிந்த மனிதர்கள் என்ற நம்பிக்கையுடன் கேட்கிறேன், யோசித்து பதில் சொல்லுங்கள்.

-- கோதை நாச்சியார், நிலக்கோட்டை...

(நான் பிராமணர் இல்லீங்க)
Thaks Ravi sir

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...