Friday, 30 November 2018

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2018 * *சம்பா நெல்*

*1) பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2018 * *சம்பா நெல்*

அன்பார்ந்த விவசாயிகளே,
விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும், தமிழ்நாட்டில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2018 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படுகிறது.

பயிர் காப்பீடுக்கு தகுதியான பயிர்

*பருவம் பயிர் பதிவு செய்ய கடைசி நாள் சம்பாநெல்*
*30 நவம்பர் , 2018*

*காப்பீட்டு நிறுவனம்  மாவட்டங்கள் வாரியாக*

*காப்பீட்டு நிறுவனமும் நிறுவத்தின் கீழ் வரும் மாவட்டங்களும்*

*1)இந்திய வேளாண்*
*காப்பீட்டுக் கழகம்*
அரியலூர், திண்டுக்கல்,
ஈரோடு, கன்னியாகுமரி,
கரூர், மதுரை,
நாமக்கல், பெரம்பலூர்,
இராமநாதபுரம், திருச்சி
மற்றும் திருவாரூர்

*2)எம்.எஸ். சோழமண்டலம்பொது காப்பீட்டு நிறுவனம்*
கடலூர், காஞ்சிபுரம்,
சேலம், சிவகங்கை,
திருநெல்வேலி, திருப்பூர்,
திருவள்ளூர், திருவண்ணாமலை,
கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி

*3)நியூ இந்தியா அஸ்சூரன்ஸ்காப்பீட்டு நிறுவனம்*
தர்மபுரி, கிருஷ்ணகிரி,
நாகப்பட்டினம், புதுக்கோட்டை,
தஞ்சாவூர், தேனி,
தூத்துக்குடி, வேலூர்,
விழுப்புரம் மற்றும் விருதுநகர்

  இத்திட்டத்தின் கீழ், கடன் பெறும் விவசாயிகள், அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் கட்டாயமாகப் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யப்படுவர். கடன்பெறா விவசாயிகள், இத்திட்டத்தை செயல்படுத்தும் உரிய காப்பீட்டு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட *பொது சேவை மையங்கள்* மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.

*பதிவு செய்ய தேவை படும் ஆவணங்கள் *

1.  முன்மொழிவு விண்ணப்பம்,
2.  பதிவு விண்ணப்பம்,
3.  கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் / விதைப்பு அறிக்கை,
4.  வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல்,
5.  ஆதார் அட்டை நகல்

*விவசாயிகள் கட்டணத் தொகையை செலுத்தியபின் அதற்கான இரசீதை பெற்றுக் கொள்ளலாம்.*

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...