Friday 30 November 2018

பிரதமரின் அனைவரும் வீடு திட்டத்தில் புதிய மாற்றம்... அ

பிரதமரின் அனைவரும் வீடு திட்டத்தில் புதிய மாற்றம்...

அனைவருக்கும் வீடு திட்டமான பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் வீடு கட்டுபவர்களுக்குத் தாழ்வார பகுதியை கூடுதலாக விரிவு படுத்திக் கட்ட வியாழக்கிழமை முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் நடுத்தரக் குடும்பங்கள் அதிகப் பயன் அடைய முடியும். எனவே இந்தத் திட்டத்தில் என்னவெல்லாம் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது என்று விளக்கமாகப் பார்க்கலாம்.

பிரிவு -1
நடுத்தர வருவாய்க் கொண்ட குடும்பங்கள் பிரிவு 1 சேர்ந்தவர்களுக்கு 90 சதுர அடியாக இருந்த தாழ்வாரப் பகுதி 120 சதுர அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

பிரிவு -2
நடுத்தர வருவாய் குடும்பப் பிரிவு -2ன் கீழ் வருபவர்களுக்கு 110 சதுர அடியாக இருந்த தாழ்வாரப் பகுதியின் அளவை 150 சதுர அடியாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

9 – 12 லட்சம் கடன்
நடுத்தரக் குடும்பப் பிரிவு 1ஐ சேர்ந்தவர்களுக்கு 6 லட்சம் முதல் 12 லட்சம் வரை வருவாய் உள்ளவர்கள் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 9 லட்சம் வரை 4 சதவீத வட்டி விகித சலுகையுடன் கடன் பெற முடியும். 12 லட்சம் கடன் நடுத்தரக் குடும்பப் பிரிவு 2ஐ சேர்ந்தவர்களுக்கு 12 லட்சம் முதல் 18 லட்சம் ரூபாய் வருவாய் இருந்தால் 12 லட்சம் வரை 3 சதவீத வட்டி சலுகையுடன் கடன் பெற முடியும்.

இலக்கு 2022-ம் ஆண்டுக்குள் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கிராமப்புற மற்றும் நகர் புறங்களில் வீடு இல்லாதவர்கள் அனைவருக்கும் வீடு வழங்க வேண்டும் என்பதற்காக இந்த புதிய ஆவாஸ் யோஜனா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...