Friday 30 November 2018

பிரதமர் மோடி இன்று டெல்லியில் Western Peripheral Expressway சாலையை திறந்து வைக்கிறார்.

பிரதமர் மோடி இன்று டெல்லியில் Western Peripheral Expressway சாலையை திறந்து வைக்கிறார்.

இந்த சாலை Kundli-Manesar-Palwal நகரங்களை இணைக்கிறது. இதன் சிறப்பம்சங்களை பார்ப்போம்.

👉 இந்த 6 வழி சாலையின் மொத்த நீளம் 135 கிமீ.

👉 இந்த விரைவு சாலையால் டெல்லி மாநகர் வழியாக செல்லும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களுக்கு எளிதான மாற்றுபாதை கிடைக்கும். இதனால் டெல்லியின் போக்குவரத்து நெரிசல் வெகு அளவு குறையும்.

👉 இந்த சாலை 2003 இல் வாஜ்பாய் அரசின் போது திட்டமிடபட்டு நிதி ஒதுக்கீடு செய்து 2009 இல் முடிக்க திட்டமிடபட்டது. ஆனால் காங்கிரசின் கையாலாகாத தனத்தால் கிடப்பில் போடபட்டு 2014 இல் மோடி அரசால் 6 வழி விரைவு சாலையாக மீண்டும் வேலை துவங்க பட்டது.

👉 2003 இல் இது நான்கு வழி சாலையாக தான் திட்டமிடபட்டது. ஆனால் 2014 இல் மோடி அரசால் எதிர்கால வாகன நெரிசல் திட்டமிடலுடன் ஆறுவழி சாலையாக மாற்றம் செய்யபட்டது.

👉 இந்த சாலைக்கு 9000 கோடி செலவிடபட்டுள்ளது. இதில் 6400 கோடி சாலை பணிக்கும் 2788 கோடி இழப்பீடாகவும் வழங்கபட்டது. இந்த சாலைக்கு 3846 ஏக்கர் நிலம் கையகபடுத்தபட்டது.

👉 இந்த ஆறு வழி சாலையில் பார்க்கிங் வசதிகள், காவல் நிலையம், எரிபொருள் நிலையங்கள், ஹெலிபேட், பொழுதுபோக்கு மையங்கள் போன்றவை இருக்கும்.

👉 ஒரு ஆம்புலன்ஸ், ஒரு கிரேன் மற்றும் ஒரு போலீஸ் ரோந்து வாகனம் ஒரு ஹெல்ப்லைன் எண்ணுடன் 20 கி.மீ வேகத்தில் பயணித்து கொண்டு இருக்கும்.

👉 இந்த சாலையில் 15 பெரிய மற்றும் சிறிய பாலங்கள் உள்ளது. 56 சுரங்கபாதைகள் மற்றும் 7 பெரிய சந்திப்பு சாலைகள் உள்ளது.

https://www.indiatvnews.com/news/india-prime-minister-narendra-modi-western-peripheral-expressway-inauguration-interesting-facts-on-kundli-manesar-palwal-stretch-483939

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...