Friday, 9 November 2018

மோடிஜியின் சமீபத்திய ஜப்பான் விஜயத்தால் ஏற்பட்டுள்ளப் பலன்கள்

மோடிஜியின் சமீபத்திய ஜப்பான் விஜயத்தால் ஏற்பட்டுள்ளப் பலன்களை யாரும் பேசவே இல்லை.

இதை வெளியிடாத ஊடகங்களின் செயல் கண்டிக்கதக்கது.

இப்போது ஜப்பானுடன் நாம் போட்டிருக்கும் ஒப்பந்தப்படி இனி நாம் அவர்களோடு அமெரிக்க டாலரில் வியாபாரம் செய்ய வேண்டிய அவசியமில்லை.

இந்திய ரூபாயிலும் ஜப்பானிய “என்”னிலும் இனி தொழில் நடத்தலாம்.

அமெரிக்க டாலரின் ஏற்ற இறக்கம் நமது தொழிலதிபர்களையோ நம் பொருளாதாரத்தையோ நூறு சதவிகிதம்  பாதிக்கவே பாதிக்காது.

இதனால் திருப்பூர் பின்னலாடை வியாபாரிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அவர்கள் ஜப்பானில் இருந்து தருவிக்கும் தையல் மெஷினுக்கும் சரி இங்கிருந்து ஏற்றுமதி செய்யும் ஆடைகளுக்கும் சரி நம் நாட்டு நாணயத்திலேயே விலை பேசிக் கொள்ளலாம்.

இது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் தெரியுமா? ஜப்பானுடன் நாம் நடத்தும் வியாபாரம் கொஞ்சம் நஞ்சம் ரூபாய்க்கு அல்ல! 5.48 லட்சம் கோடி.

ஒவ்வொரு தடவையும் டாலர் மதிப்பின் ஏற்ற இறக்கத்தால் நம் வியாபார்கள் பெரு நஷ்டம் அடைந்து வ்ந்தனர்.

அதற்கு இப்போது அறவே வாய்ப்பில்லை.

திருப்பூர் மாதிரியே  நம் நாடு முழுதும் உள்ள வியாபாரிகள் தொழிலதிபர்கள் எல்லோரும் மத்திய அரசின் இந்த ஒப்பந்தத்தை மிகவும் வரவேற்கிறார்கள்.

மற்ற நாடுகளோடும் இது மாதிரியே ஒப்பந்தங்களைப் போட்டு அமெரிக்க டாலரின் உலக மதிப்பைக் குறைக்க வேண்டும் என்று சொல்லுகின்றனர்.

இதனை ஆரம்பித்து வைத்த மோடியையும் ஜப்பானையும், உலக நாடுகள் பலவும் பாராட்டுகின்றன.

இந்த போக்கு நீடித்தால் இந்தியாவுக்கு நல்லது.

இந்நிலை நீடித்தால் நமது பொருளாதாரம் மேன்மேலும் வளர்சியடையுமென பொருளாதார வல்லுனர்கள் கருதுகின்றனர்.

ஒட்டு மொத்த உலகினையும் தனது உருட்டல் மிரட்டலால் அச்சுருத்தி நாட்டாமை செய்து வந்த அமெரிக்காவிற்கு இது மிகப்பெரும் சவுக்கடியாக அமைந்துள்ளது.🙏🏻🙏🏻

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...