Friday, 9 November 2018

சபரிமலை: ஒரு புது ஆதாரம் ! *************************

Thanks: Sethu Gopinath
-----------------------------------

சபரிமலை: ஒரு புது ஆதாரம் !
*************************
நாளை ( 5/11/2018) உச்ச நீதி மன்றத்தில் பக்தர்கள் சார்பாக ஒரு புதிய, முக்கியமான, வலுவான ஆதாரம் சமர்ப்பிக்கப்படுகிறது! நீதிமன்றம் தலையைச் சொறிந்துகொண்டு, தன் முந்தைய தீர்ப்பை மறுபரிசீலனை செய்தே ஆகவேண்டிய சூழ்நிலை உருவாகி விட்டதோ ....!
Memoir of the Survey of the Travancore and Cochin States, Period of study 1816 A.D.to 1820 A.D., Vol.1, 2 and 3 என்ற ஆங்கில ஆவணமே அது ! தற்போது நடைமுறையிலுள்ள சபரிமலை வழிபாட்டு மரபு, கடந்த 200 ஆண்டுகளுக்கும் முன்பே ( கி.பி.12 ஆம் நூற்றாண்டு தொடங்கியது எனலாம்!) கடைப்பிடிக்கப்பட்ட ஒன்று என்பதை பிரிட்டிஷாரே ஏற்றுக்கொண்டதற்கான ஆதாரம்!
பிரிட்டிஷ் அரசு 1927 இல் அச்சடித்த இந்த மூன்று தொகுப்பு நூல்களை 1994 இல் திரு.கருணாகரன் முதல்வராயிருந்தபோது, மீண்டும் கேரள அரசு திரிக்காக்கரா என்ற ஊரிலுள்ள அரசு அச்சகத்தில் அச்சிட்டுள்ளது. இது அன்றைய கேரள அரசு அந்த ஆவணத்தை ஏற்றுக்கொண்டதற்கான ஆதாரம் !
கற்றறிந்த ஐயப்ப பக்தர்களின் பெருமுயற்சியால், அந்த மூன்று வால்யூம்களும், தைக்காடு (திருவனந்தபுரம்) வைகுண்ட ஸ்வாமி அனைத்துலகக் கல்வி மையம் ( Thycaud Sri Vaikunta Swamy International Learning Centre ) என்ற இடத்திலுள்ள நூலகத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன ! அந்த நூல்களில் 200 ஆண்டுகளுக்கு முன்பே, சபரிமலை அமைந்துள்ள இடம், சந்நிதானம், வழிபாட்டு முறை, நடை திறக்கும் காலக் கிரமங்கள் ஆகியவை படங்களுடன் தரப்பட்டுள்ளன. இந்த நூல்கள் அண்மையில் வெளியான உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குமுன் கிடைத்திருந்தால், பிணராயி அரசின் இறை மறுப்பு அல்லது எதிர்ப்பு நடவடிக்கைகளும், காசுக்கு 'அவுத்துப் போடும்' கன்னிகள்(!) கம்யூனிஸ்ட் ஆதரவுடன் ஐயப்பனின் புனிதத் தலத்தைக் களங்கப்படுத்தும் முயற்சியும் தடுக்கப்பட்டிருக்கலாம் ! எந்தக் காலகட்டத்தில், யாரால், தற்போது ஐயப்ப வழிபாட்டுக்காகக் கடைப்பிடிக்கப்படும் விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன என்று நீதிமன்றத்தில் எழுப்பப்பட்ட சட்டத்தின் அடிப்படையிலான கேள்விக்கு, இன்று ஆதாரபூர்வமான பதில் கிடைத்துள்ளது. தொன்றுதொட்டு பேணப்படும் நம்பிக்கை, வழிபாட்டு மரபுகள் ஆகியவற்றிற்கு ஆதாரங்களைத் தேடினால், அல்லது கேட்டால், சில நூற்றாண்டுகளுக்கு முன்பு தோன்றிய மதங்கள் கூட, தலையைத் தொங்கப்போட்டுக் கொள்ள நேரும்! ஆனால், தோற்றுவாய் அறிய இயலாத, உலகத்தின் மிகத் தொன்மையான மதம் மட்டும் "மூடநம்பிக்கை" மதம் என்று இகழப்படுவது வெட்கக்கேடு !
தற்போது புதிதாக உச்சநீதிமன்றத்தில் தரப்பட்டுள்ள ஆதாரங்களில் கண்டுள்ளபடி, கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பே, "நிஸ்சிதப் ப்ராயத்தினர்"( of stipulated age; 10 years to 50 years of age) - அதாவது, ருதுவான, மாதவிடாய் நிற்காத பெண்கள் சபரிமலையில் பிரவேசிக்கத் தடை இருந்தது! சிறு குழந்தைகளும் ஐம்பது வயதுக்கும் மேற்பட்ட பெண்டிரும் அனுமதிக்கப்படலாம். தந்திரிகள் எனப்படுவோர் பிராமண சமூகத்திலிருந்து முறைப்படிப் பூஜை செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்ட தாநந்த்ரீக ஆகமம் அறிந்த ஒருவரும், நாயர் சமூகத்திலிருந்து இருவரும் ஆவர். கோவிலைக் கட்டிய பந்தள மன்னர் குடும்பத்தால் அவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு அனுப்பிவைக்கப் படுவர். சபரிமலையைச் சுற்றிலுமுள்ள 18 மலைகளில் வாழ்ந்து வந்த 'அரயம்மார்' என்ற மலைஜாதியினர் விரதமிருந்து ஐயப்பனைக் காணவரும் பக்தர்களுக்கு வழிகாட்டிகளாகச் சேவை செய்து வந்தனர். பொன்னம்பல மேட்டில் ஒளிவிளக்கேற்றும் உரிமை அவர்களுக்கே இருந்தது.( உரிய மான்யமும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.) இன்னும் பல ஆதாரங்கள்...! )
இந்த ஏழை மலைக்குடி மக்களில் பலர், கிறிஸ்தவ மிஷனரிகளாலும், தேயிலை பயிரிட்டு முதலாளியாக விரும்பிய ஆங்கிலேயர்களாலும், அன்று வன்முறைக்குப் பயந்து அல்லது பணம், பதவி, சமூக அந்தஸ்து ஆகியவற்றிற்கு ஆசைப்பட்டும் மதம் மாறவேண்டிய வற்புறுத்தலுக்கு ஆளாயினர். (இந்த நிகழ்வுகள் தொடர்பான, மகான் ஶ்ரீநாராயணகுரு அவர்களின் குறிப்புகள் படிக்கத் தக்கவை) .இன்றைய நாள்வரை, சுயநலமிகளால் மலைவளம் சுரண்டப்பட்டு, ஏறக்குறைய 200 சர்ச்சுகள் சபரிமலையைச் சுற்றிக்கட்டப்பட்டு விட்டன. அத்துடன், சபரி மலையில் உள்ள ஐயப்பன் தங்கள் அரையன்குலக் குழந்தை என்றும்,கருத்தம்ம என்ற பெண்ணுக்குப் பிறந்ததென்றும், அதைப் பந்தளம் மன்னர் தூக்கிச் சென்று வளர்த்தார் என்றும், அந்த சிசுதான் தன் பதின்ம வயதில் பொன்னம்பல மேட்டுக்குத் திரும்பி வந்து தங்களை ஆண்டார், பின்பு 'சாமி' யானார் என்றும், பிராமணர்களும், நாயர் போன்ற மற்ற சமூகத்தினரும் செய்த சதியால் தங்கள் மலை உச்சி வாழ்க்கை அடிவாரத்துக்கு வந்துவிட்டது என்றும் ஒரு கட்டுக்கதை பரப்பிவிடப் பட்டிருக்கிறது! யாரால் என்று சொல்லவும் வேண்டுமா?
கி.பி.11ஆம் நூற்றாண்டு இறுதியில், சேரவம்சம் அந்நியர் படையெடுப்பால் பலமிழக்கத் தொடங்கிய பின்னர் பந்தளம், திருவிதாங்கூர், மலபார் போன்ற சமஸ்தானங்கள் உருவாகின. பெரிய நிலக்கிழார்கள் குறுநில மன்னர்கள் ஆயினர். மற்றபடி, வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் நடந்தவை நாம் அனைவரும் அறிந்தவையே! ஆனால், பந்தளத்தைப் பொறுத்தவரை, ஆயிரம் ஆண்டுகளாக அவர்கள் நாட்டை யார் ஆண்டார்கள், யார் பிறந்தார்கள்,யார் மாண்டார்கள் என்ற வரலாற்றுக் குறிப்புகள், அவர்கள் கொட்டாரத்தில் இன்றும் உள்ளன ! தமிழ்நாட்டில் சிலர், தங்கள் தலைவர்களின் "குணவிசேஷங்கள்" பற்றிய ஆதாரங்களைத் தங்கள் புளுகு மூட்டைகளால் மறைத்து, அவர்களைக் 'கடவுளாக்கி'ச் சிலைவைத்து வழிபடுவதுபோல, மலையாளிகளை எளிதில் ஏமாற்ற முடியாது !
சபரிமலை விவகாரத்தில், இம்முறை உச்சநீதிமன்றம் தன் மறுபரிசீலனைத் தீர்ப்பை நன்கு ஆராய்ந்து தெளிவான சிந்தனையுடன் தர வாய்ப்புண்டு!

ஸ்வாமியே.......சரணம் ஐயப்பா !

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...