Friday, 9 November 2018

ஆயுஷ்மான்பாரத் என்ற #மத்தியஅரசின்காப்பீட்டுதிட்டம் துவங்கியுள்ளது தெரிந்த விஷயமே. ஆ

#ஆயுஷ்மான்பாரத் என்ற #மத்தியஅரசின்காப்பீட்டுதிட்டம் துவங்கியுள்ளது தெரிந்த விஷயமே.  ஆனால் அதனை பெற சில விதிமுறைகள் உள்ளன. 

அதையும் தெரிந்து கொள்ளுங்கள், மற்றவர்க்கும் தெரிய படுத்துங்கள்.

இதன்படி சில குறிப்பிட்ட தகுதி உடையவர்கள் விண்ணப்பம் இன்றி தானாக இதில் சேர்க்கப் படுவார்கள்.

அவர்கள் செய்ய வேண்டியது ஆயுஷ்மான் பாரத் என்ற தளத்திற்கு சென்று தங்கள் மொபைல் நம்பர் அல்லது ரேஷன் கார்ட் நம்பர் போன்ற சில விவரங்கள் (கீழே கொடுத்துள்ளேன்) மூலம் உறுதிபடுத்திக் கொள்வது மட்டுமே.  உங்களுடைய விவரங்கள் இல்லை என்றால் மட்டுமே அருகிலுள்ள அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த ஆயுஷ்மான் பாரத் தேசிய சுகாதாரப் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் தகுதி பெற
2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் கீழ்  பொருளாதார ரீதியாக பின் தங்கிய,

- ஒரு அறை மட்டும் கொண்ட வீட்டில் வசிக்கும், 16 முதல் 59 வயதிற்குட்பட்ட பெரியவர் உறுப்பினர் இல்லாத குடும்பத்தினர், 16 முதல் 59 வயதிற்கு உட்பட்ட ஆண் உறுப்பினர் இல்லாத பெண்கள் தலைமையில் இயங்கும் குடும்பத்தினர்,

-  உடல் ஊனமுற்ற, மற்றும் வேலை செய்யும் உடல் திறன் இல்லாத உறுப்பினர் கொண்ட குடும்பங்கள்,

- பழங்குடியின மற்றும் ஷெட்யூல்டு வகுப்பினர் குடும்பங்கள், நிலமற்றவர்கள், வீடு இல்லாதவர்கள்,

- ஆதரவற்றவர்கள், பிச்சை எடுத்து பிழைப்பவர்கள், துப்புரவுப் பணியாளர்கள் குடும்பத்தினர்,

- பழங்குடியின குழுக்கள், சட்ட ரீதியாக விடுவிக்கப்பட்ட கொத்தடிமைகள்

ஊரகப் பகுதியில் வசிப்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பலன் அடைபவர்கள்

- நகர் புறங்களில் வசிப்பவர்களுக்கு 11 வகையான தொழில்களில் ஈடுபடுபவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் பலன்களைப் பெற தகுதி உடையவர்கள் ஆகின்றனர்.

- வீடுகளில் வேலை செய்பவர்கள், குப்பைகள் சேகரிப்பது, துப்புரவு போன்ற தொழிலில் உள்ளவர்கள், வருமானமின்றி பிச்சை எடுப்பவர்கள்,

- சர்வீஸ் ப்ரொவைடர், உதாரணமாக எலக்டிரீஷியன், ப்ளம்பர், செருப்பு தைப்பவர்கள், செக்யூரிட்டி,

- கூலி போன்ற தினக்கூலி வேலை செய்பவர்கள்,

- தையல், கைவினை பொருட்கள், சலவை, போன்ற தொழில் செய்பவர்கள்

யாரெல்லாம் பயன்பெற முடியாது?
- கிஸான் கார்டில் 50000 மேல் வரவு உள்ளவர்கள்
- 2/3/4 வண்டிகள் சொந்தமாக வைத்திருப்பவர்கள்
- வருமான வரி செலுத்துபவர்கள்
- அரசு வேலையில் உள்ளவர்கள்
- ரூ 10000/-க்கு மேல் மாத வருமானம் உள்ளவர்கள்
- 2/3 ரூம்கள் கொண்ட வீடு உள்ளவர்கள்
- 5 ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் உள்ளவர்கள்
- ஃப்ரிட்ஜ், ஏசி பொன்ற மிண்ணனு சாதனங்கள் வைத்திருப்பவர்கள்
- பதிவு செய்யப்பட்ட சிறு வியாபாரிகள்

நீங்கள் செய்ய வேண்டியது இந்த லிங்கில் சென்று
https://www.abnhpm.gov.in/ am I eligible என்பதை கிளிக் செய்யவும்.

https://mera.pmjay.gov.in/search/login இங்கே உங்கள் மொபைல் நம்பர், கொடுத்து OTP டைப் செய்தால், தகுதி செக் செய்யும் பேஜ் ஓபனாகும்.

அதில் மாநிலம் செலக்ட் செய்யவும், பின் பெயர் அல்லது மொபைல் நம்பர் அல்லது ரேஷன் கார்டு நம்பரை செலக்ட் செய்தால் நீங்கள் தகுதியானவரா இல்லையா என்பது தெரிய வரும்.

இதில் உங்கள் விவரம் இல்லையென்றால் சிறிது பொறுமையாக சில காலம் கழித்து செக் செய்யுங்கள்.  இல்லையெனில் அருகில் உள்ள உதவியாளர் அலுவலகத்தை அணுகவும். 

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள தமிழ் விவரங்களை படிக்கலாம்.

http://www.pib.nic.in/PressReleaseIframePage.aspx?PRID=1525760

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...